spot_imgspot_imgspot_imgspot_img
HomeGeneralகோவில் குளத்தில்   மீன்கள் இறந்து மிதப்பதால் நோய் தொற்று அபாயம், பக்தர்கள் அதிர்ச்சி!  

கோவில் குளத்தில்   மீன்கள் இறந்து மிதப்பதால் நோய் தொற்று அபாயம், பக்தர்கள் அதிர்ச்சி!  

-

- Advertisement -

ஆவடி அடுத்த  திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள 1500 ஆண்டுகள்  பழமை வாய்ந்த மாசிலா மணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது, திருவள்ளூர் மாவட்டத்திலே  மிகவும் வரலாற்று சிறப்புடைய  பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஆகும். இதன்  அருகே உள்ள திருகுளத்தில்  சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட  மீன்கள் இறந்து மிதக்கிறது. இதனால் அருகே உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும்,நோய் தொற்று  அபாயம் ஏற்படும் எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவில் குளத்தில்   மீன்கள் இறந்து மிதப்பதால் நோய் தொற்று அபாயம், பக்தர்கள் அதிர்ச்சி!

we-r-hiring

குறிப்பாக கடந்த நான்கு  நாட்களுக்கு முன்பு அமாவாசை அன்று கோவில் நிர்வாகம் சார்பாக குளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றதாகவும், இன்று இந்த கோவில் குளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதக்கின்ற நிலையில் கோயில்   திருகுளத்தில் ஏதாவது நச்சுப்பொருள் கலந்து இருக்கலாம், இதனால் மீன்கள்   இறந்து இருக்கலாம் என்ற கோணத்தில் கோயில் நிர்வாகம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த இறந்து மிதக்கும் மீன்களால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது ஆகவே  கோவில் நிர்வாகம் உடனடியாக குளத்தை தூய்மைப்படுத்தி மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின்  கோரிக்கையாக உள்ளது.

கோவில் குளத்தில்   மீன்கள் இறந்து மிதப்பதால் நோய் தொற்று அபாயம், பக்தர்கள் அதிர்ச்சி!

இதுகுறித்து சிவனடியார் நீலகண்டன் கூறுகையில், கோவில் என்பது மன அமைதியையும், மனத்தூய்மையும் ஏற்படுத்தும் இடமாகும் இந்த இடத்தில் அசுத்தம் ஏற்பட்டால் மனதிலும் அசுத்தம் ஏற்படும். ஆகவே கோயில் நிர்வாகமும், அரசாங்கமும் நடவடிக்கை எடுத்து கோயில் குளத்தை சுத்தப்படுத்த வேண்டும். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பழமை வாய்ந்த கோவிலின் புனித தன்மை மற்றும் நீரின் தீர்த்த தன்மையையும் அசுத்தப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

MUST READ