HomeGeneralஇசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்

இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்

-

- Advertisement -

காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அந்த பேந்தில் சினிமா பாடல்கள் அதிக சத்தத்துடன் ஒலிபரப்பியதால் பொதுமக்களுக்கு இடையூறுக இருந்துள்ளது. சிலர் செல்போனில் பேசமுடியாமல் அவதிப்பட்டனர். ஒரு கட்டத்தில் இனிமையாக இருக்க வேண்டிய இசை தொல்லையாக மாறவே, ரேடியோவின் சப்தத்தை குறைக்குமாறு நீதிபதி செம்மல் வேண்டுகோள் விடுத்தார். அவர் நீதிபதி என தெரியாத ஓட்டுநர் ஒலியை குறைக்க மறுத்து விவாதம் செய்யத் தொடங்கினார். இதையடுத்து நீதிபதி செம்மல் பிரச்சனையை போலீசாருக்கு கொண்டு சென்றார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக ஒலிப்பெருக்கி பயன்படுத்திய குற்றத்திற்காக 10 ஆயிரம் ரூபாய் போக்குவரத்து போலீஸ் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

MUST READ