ரஜினிகாந்த் நடித்து தமிழ் புத்தாண்டுக்கு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ஜெயிலர் படம். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நெல்சன் திலிப் குமார் இயக்கும் இப்படத்தின் 65 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டு வருகிறார் ரஜினிகாந்த்.
ஜெய்லர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.
அவரது கதாபாத்திரம் வில்லத்தனமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
ரஜினியின் படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவர்ந்த ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக மலையாள இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினியும் மோகன்தாலும் இணைந்து நடிக்க உள்ள படக்காட்சிகள் ஓரிரு நாட்களில் படமாக்கப்பட உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் படக்குழுவினர் தரப்பிலிருந்து இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
முதல் முறையாக ரஜினியும் மோகன்லாலும் இணைந்து நடிப்பதாக வெளியான தகவல் இருவரின் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோகன்லால் ஏற்கனவே கமலஹாசன் உடன் உன்னை போல் ஒருவன் படத்தில் நடித்துள்ளார்.
விஜயுடன் ஜில்லா திரைப்படத்திலும் சூர்யாவுடன் காப்பான் திரைப்படத்திலும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.