ஈரோட்டு சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி சாகசங்கள் செய்த இளைஞர் கைது.
போலீசாருக்கு சவால் விட்டு சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்..
ஈரோடு அடுத்த சோலார் பாலுசாமி நகரை சேர்ந்தவர் 22 வயது இளைஞர் முகிலன். தனியார் நிறுவன ஊழியரான முகிலன், தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பைக்கில் சாகசங்கள் செய்து பல்வேறு வீடியோக்களை பதிவிட்டுள்ளார். பார்வையாளர்களை கவரவும் அதிக லைக்ஸ் பெறவும் பாலோயர்ஸ் விருப்பப்படி பல வீடியோக்களை பதிவிடுவதையும் தொடர்ந்து செய்துள்ளார்..
இதில் பிரதான சாலைகளில் வீலிங் செய்தபடி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் படி பல வீடியோக்களை, யாரும் எதுவும் செய்ய முடியாது என காவல் நிலையத்திற்குள் சென்று வரும் காட்சிகளுடன் பதிகளை வெளியிட்டுள்ளார்..்
இது தொடர்பாக விசாரணை நடத்திய மொடக்குறிச்சி போலீசார், முகிலன் மீது BNS-281, 125(1), 115(1) cmv rule r/w 177, 184(1), 292 MV act உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இளைஞரை கைது செய்த போலீசார், பைக்.கையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின் அந்த இளைஞரை போலீசார் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்..