பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் வத்தலகுண்டு அருகே தலைமறைவாகி ஒளிந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் கைது செய்யப்பட்டாா்.தமிழகத்தின் பிரபல ரவுடியான மதுரை மாவட்டத்தை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் 2012-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தாங்கும் விடுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த நபரை 4 நபர்கள் கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக திண்டுக்கல் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தனியார் தங்கும் விடுதியை சோதனை செய்த போது வரிச்சியூர் செல்வம், சினோஜ் மற்றும் அவருடன் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இருந்தனர். அப்போது காவல்துறையினர் அந்த விடுதியில் துப்பாக்கி சூடு நடத்தினர். அந்த என்கவுண்டரில் கேரள மாநிலத்தை சேர்ந்த சினோஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும், அவருடன் இருந்த வரிச்சியூர் செல்வம் மற்றும் அடையாளம் தெரியாத 2 நபர்கள் அந்த தனியார் தாங்கும் விடுதியிலிருந்து தப்பி ஓடினர். அவர்கள் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய நீதிமன்றத்தில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தற்சமயம் வரிச்சியூர் செல்வம் தலைமறைவாக இருந்த நிலையில், திண்டுக்கல் நகர்வரத்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில், திண்டுக்கல் நகர்வரத்து ஆய்வாளர் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே வரிச்சியூர் செல்வம் தலைமறைவாகி ஒளிந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, நகர் வரத்து காவல்துறையினர் வரிச்சியூர் செல்வதை கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உழவர்களுக்கு துரோகம் இழைக்கும் திராவிட மாடல் அரசு – அன்புமணி கண்டனம்
