திருவேற்காடு அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவேற்காடு, அயனம்பாக்கம், பொன்னியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிம் அன்சாரி(35), ப்லிங்கிடில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். வசந்தி என்பருடன் திருமணமாகி ரியாஸ்(5), ரிஸ்வான்(3) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழ் அன்சாரி வேலைக்கு சென்றுள்ளாா். அவரது மனைவி வசந்தியும் வீட்டு வேலைக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த இரண்டு சிறுவர்களும் வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்த போது வீட்டின் எதிரே இருந்த குளத்தின் அருகே சென்று விளையாடியதாக கூறப்படுகின்றது. அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் விழுந்து தத்தளித்து வந்துள்ளனர்.
இதனை குளத்தின் மறுபகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நவீன் என்ற சிறுவன் கண்டு ஓடி வந்து இரண்டு சிறுவர்களையும் மீட்டதாக கூறப்படுகிறது. சுயநினைவை இழந்து இருந்த இரண்டு சிறுவர்களையும் அக்கம் பக்கத்தினர் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் பேருந்து சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பொன்னியம்மன் கோவில் குளம் பாதுகாப்புடன் இருந்த போதிலும், சிறுவர்கள் உயிரிழப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து திருவேற்காடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



