- Advertisement -
யாா் இந்த செங்கோட்டையன்? அவரது வரலாற்றை காணலாம்.
- ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவா் 1948 ஆம் ஆண்டு பிறந்தாா்.
- 1971 ஆம் ஆண்டு வரை திமுகவில் பயணித்த செங்கோட்டையன், 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுகவில் இணைந்தார்.
- 1975 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற பொதுக்குழுவை சிறப்பாக நடத்தினாா். இதனால் எம்.ஜி.ஆரிடம் நற்பெயரைப் பெற்று அனைவரது கவனத்தையும் தம் பக்கம் ஈர்த்தார்.
- 1977 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் முதல் ஆட்சிக் காலத்தில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார்.
- 1980-ம் ஆண்டு முதல் கோபிசெட்டிப்பாளையத்தில் தொடர்ந்து போட்டியிட்டு 9 முறை வெற்றி பெற்றுள்ளார். 1996 ஆம் ஆண்டு தேர்தலில் மட்டும் தோல்வி அடைந்துள்ளாா்.
- 1989-ல் ஜெ.அணி.. ஜ.அணி என்ற பிளவில் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டாா். போட்டியிட்டதோடு மட்டுமல்லாமல், வெற்றியும் பெற்றார்.


- 1991 – 1996 போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், (2011 – 2016)-ல் விவசாயம், IT, வருவாய் துறை அமைச்சராகவும் பொறுப்பு ஏற்றாா்.
- 2016 – 2021 பழனிசாமியின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தாா்.
- எம்ஜிஆர் உடன் பிரச்சாரத்திற்கு செல்வது, ஜெயலலிதா பயண திட்டங்களை வகுப்பது என்று முக்கிய முகமாக இருந்திருக்கிறார் செங்கோட்டையன்.
- கருணாநிதி, துரைமுருகன் வரிசையில், அதிக முறை சட்டமன்ற உறுப்பினரானவர் என்ற பெருமையை பெற்றவா் செங்கோட்டையன்.
- அதிமுகவில் சூப்பர் சீனியராக இருந்த இவர், பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் சீனியர் என்பது குறிப்பிடத்தக்கது.
கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘ரூட்’…. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!


