கௌதம் கார்த்திக் நடிக்கும் ரூட் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கடல், வை ராஜா வை, தேவராட்டம் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கௌதம் கார்த்திக். இவர் தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஸ்டர் எக்ஸ்’ எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இது தவிர இன்னும் சில படங்களிலும் கமிட் ஆகி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவரது நடிப்பில் ‘ரூட்- ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ எனும் திரைப்படமும் உருவாகி வருகிறது. சயின்ஸ் பிக்சன் கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த படத்தை சூரிய பிரதாப் இயக்குகிறார். வேருஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் ‘ஜோ’ படத்தில் நடித்திருந்த பவ்யா த்ரிகா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் அபர்சக்தி குரானாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி பல கட்டங்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த படமானது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.


