spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்டிக்-டாக் மூலம் அறிமுகம்.. ஏமாற்றிய காதல் மனைவி.. குழந்தைகளுடன் கண்ணீர் வடிக்கும் 5வது கணவர்..

டிக்-டாக் மூலம் அறிமுகம்.. ஏமாற்றிய காதல் மனைவி.. குழந்தைகளுடன் கண்ணீர் வடிக்கும் 5வது கணவர்..

-

- Advertisement -

டிக்-டாக் செயலி மூலமாக அறிமுகமாகி வாலிபரை 5-வதாக திருமணம் செய்து பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டு ஒடி சென்று 6-வதாக ஒருவரை திருமணம் செய்த மோசடி பெண் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் 5-வது கணவர் தனது குழந்தைகளுடன் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளாா்.டிக்-டாக் மூலம் அறிமுகம்.. ஏமாற்றிய காதல் மனைவி.. குழந்தைகளுடன் கண்ணீர் வடிக்கும் 5வது கணவர்..கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சென்னை துறைமுகம் பகுதியில் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிக் டாக் செயலி மூலமாக மதுரை மாவட்டம் டி.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரி என்பவர் உடன் டிக் டாக் செயலி மூலமாக பழக்கம் ஏற்பட்டு சிவகுமார் பேசி வந்துள்ளார். அப்போது காளீஸ்வரி தனக்கு முதல் திருமணமாகி தனது கணவர் பிரிந்து சென்று விட்டாா். தனது தாய் இறந்து விட்டதால், தனது சித்தியின் அரவணைப்பில் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளாா். மேலும், தனது சித்தி தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும் சிவகுமாரிடம் கூறியுள்ளார்.

இதனால் இரக்கம் காட்டிய சிவக்குமார் காளீஸ்வரியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த 2019-ஆம் ஆண்டு சிவகுமாரும் காளீஸ்வரியும் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து முதலாவதாக ஒரு ஆண் குழந்தையும் அடுத்தது ஒரு பெண் குழந்தையும் என இரண்டு குழந்தைகள் பிறந்ததுள்ளது.  தொடர்ந்து 5 வருடங்கள் சிவகுமார் மற்றும் காளீஸ்வரி இருவரும் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் காளீஸ்வரி அடிக்கடி உறவினரை பார்ப்பதற்காக ஆந்திராவிற்கு தனது குழந்தைகளுடன் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

we-r-hiring

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னர் அவர் யாரிடமும் சொல்லாமல் வேறு ஒரு நபருடன் வீட்டிலிருந்து சென்று விட்டார். இதுகுறித்து சிவகுமார் சங்கராபுரம் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்துள்ளாா். புகாரின் பேரில் போலீசார் காளீஸ்வரியை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.விசாரணையின் போது காளீஸ்வரி நான் சொந்த விருப்பத்தின் பேரில்தான் சென்று உள்ளேன் எனவும் நான் காணாமல் போகவில்லை என வாக்குமூலம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

இதை அறிந்த சிவக்குமார் என் மனைவி வந்ததை ஏன் எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. புகார் கொடுத்தது நான் என்னிடம் தகவல் தெரிவிக்காமல் அவரை திருப்பி அனுப்பி விட்டீர்களே என்று கேட்டதற்கு காவல்துறையினர் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் டி.குன்னத்தூர் பகுதியில் உள்ள காளீஸ்வரியின் தாய் மகாலட்சுமி என்பவரிடம் நேரடியாக சென்று சிவக்குமார் நீங்கள் காளீஸ்வரி பெற்ற தாயா அல்லது வளர்ப்பு தாயா என கேட்டுள்ளார். இதனால் கண்கலங்கிய காளீஸ்வரியின் தாய் மகாலட்சுமி நான் பத்து மாதம் சுமந்து பெற்ற மகள்தான் காளீஸ்வரி. அவள் குறித்த உண்மையை அனைத்தையும் சொல்கின்றேன் எனக்கூறினாா். காளீஸ்வரிக்கு ஏற்கனவே நான்கு திருமணங்கள் ஆகிவிட்டதாகவும், அதை மறைத்து ஐந்தாவதாக உன்னை திருமணம் செய்துள்ளாா் என தெரிவித்துள்ளாா்.

முதலாவதாக சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன், இரண்டாவதாக கோயம்புத்தூரைச் சேர்ந்த சுரேஷ்குமார், மூன்றாவதாக ஜெயராஜ் மற்றும் நான்காவதாக லிங்குசாமி எனவும் அவரைத்  தொடர்ந்து ஐந்தாவதாக மூரார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற உன்னை திருமணம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திருமணத்தின் போது அவர் எடுத்த அனைத்து விதமான புகைப்படங்களையும் காளீஸ்வரியின் தாய் மகாலட்சுமி சிவகுமாரிடம் காண்பித்துள்ளார். மேலும் தற்போது ஐந்தாவதாக உன்னை திருமணம் செய்து கொண்டு உன்னுடன் வாழ பிடிக்காமல் தற்போது ஆறாவதாக ஆம்பூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிவக்குமார், தனது மனைவியின் மோசடி விவகாரம் குறித்த அனைத்து ஆதாரங்களையும் கொண்டு சங்கராபுரம் காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மண்டல காவல் துறை தலைவரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளாா்.

மன உளைச்சலால் தற்கொலை செய்ய நினைத்தபோதும் உறவினர்கள் தடுத்து நிறுத்தியதாகவும், தற்போது தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளித்ததாகவும் தெரிவித்தார்.

காளீஸ்வரி வீட்டை விட்டு சென்றபோது, மூன்று பவுன் நகையும் ₹3 லட்சம் பணத்தையும் எடுத்துச் சென்றதாக சிவக்குமார் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், காளீஸ்வரியின் முந்தைய இரண்டு கணவர்கள் மன உளைச்சலால் இறந்துவிட்டதாகவும், தனது குழந்தைகள் தாயின் அன்பின்றி தவிப்பதாகவும் அவர் மனுவில் கூறியுள்ளார்.

எனக்கு வேறு யாரும் இல்லை. குழந்தைகளை பராமரிக்க முடியவில்லை. அவர்கள் அரசு குழந்தைகள் நல விடுதியில் சேர்க்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனக் சிவக்குமார் கோரிக்கை வைத்துள்ளாா். மேலும், திருமண மோசடி செய்த காளீஸ்வரியை உடனடியாக கைது செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தபோது, இரண்டு குழந்தைகளும் தாயின் அன்பை பெற முடியாமல் தவித்து நிற்பதை பார்க்கும் போது அங்கு நின்றிருந்த அனைவரின் கண்களும் கலங்கி நின்றது.

சிபிஐயிடம் சிசிடிவி காட்சிகள் சிக்கிடுச்சி! நவ.14க்கு பிறகு சம்பவம் இருக்கு! ஆர்.கே.உடைக்கும் உண்மைகள்!

MUST READ