spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்இனி, ஆஃபாயில், ஆம்லேட்டை, மறந்துவிட வேண்டியதுதான்! வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட முட்டை விலை!!

இனி, ஆஃபாயில், ஆம்லேட்டை, மறந்துவிட வேண்டியதுதான்! வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட முட்டை விலை!!

-

- Advertisement -

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இனி, ஆஃபாயில், ஆம்லேட்டை, மறந்துவிட வேண்டியதுதான்! வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட முட்டை விலை!! நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 6.25 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களில் முட்டை விலையில் 15 காசுகள் அதிகரித்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதத்தில், முட்டை விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால், கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கறிக்கோழியின் பண்ணை கொள்முதல் விலையில் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு கிலோ கறிக்கோழியின் பண்ணை கொள்முதல் விலை ரூ.116 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்லறை கடைகளில் ஒரு முட்டை ரூ.7.50 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு… நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ED உதவி இயக்குநர்…

we-r-hiring

MUST READ