spot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்கோவை மாணவி வழக்கு… டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் விசாரணை துவக்கம் - ஆணையர் சரவணசுந்தர்

கோவை மாணவி வழக்கு… டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் விசாரணை துவக்கம் – ஆணையர் சரவணசுந்தர்

-

- Advertisement -

கோவை மாணவி கூட்டுப்பாலியல் வழக்கில் டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும், மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், வெகு விரைவில் விசாரணை துவங்க உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்துள்ளார்.கோவை மாணவி வழக்கு… டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் விசாரணை துவக்கம் - ஆணையர் சரவணசுந்தர்கோவை மாநகர காவல் துறையில் உள்ள 40 ரோந்து வாகனங்களில் சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் ஜி.பி.எஸ் வசதியுடனான கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்க கூடிய வகையில் கேமரா பொறுத்தப்பட்டுள்ள வாகனங்களை கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சரவணசுந்தர், “கோவை மாநகரில் 40 ரோந்து வாகனங்களில் ஜி.பி.எஸ் வசதியுடன் கூடிய கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ரோந்து வாகனங்கள் எங்கு உள்ளது என்பது கண்காணிக்க முடியும், ஆடியோ பதிவு வசதியுடன் உள்ளது. மேலும் சம்பவம் நடைபெறும் இடத்திற்கு ரோந்து வாகனம் செல்லும் போது அங்கு நடக்கும் அனைத்து முழுமையாக பதிவு செய்யப்படுகிறது.

மேலும் ரோந்து வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள கேமரா காட்சிகள் முழுமையாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க உள்ளோம். இது பொதுமக்களுக்கு ஒரு கூடுதல் பாதுக்காப்பை ஏற்படுத்தும். புத்தாண்டை முன்னிட்டு கோவை மாநகரில் எப்போது உள்ள அதே கட்டுப்பாடுகள் தொடரும், கூடுதல் பாதுக்காப்பு முன்னேற்பாடுகளை மேம்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். மேம்பாலங்களில் செல்லும் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு குறிப்பிடபட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அரசு அறிவுறுத்தும்  பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து செல்ல ஏதுவாக நள்ளிரவு 12.30 வரை அனுமதியுள்ளது. தனியார் விடுதிகளுக்கு பாதுகாப்புகளை உறுதிபடுத்த வேண்டும்.

we-r-hiring

கோவை மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வெகு விரைவில் விசாரணை ஆரம்பிக்க உள்ளது. கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள், பாதுகாப்பு கருதி சூழல் ஏற்பட்டதால் நடத்தப்பட்டது. கூட்டு பாலியல் வழக்கில் டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் கூடுதல் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளோம்” என்று கூறினாா்.

3 நாட்கள் அரசு முறை பயணம்… டெல்லியிலிருந்து ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர்…

MUST READ