spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்என்ன செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியவில்லையா? நீங்கள் செய்யும் 5 தவறுகள் இதோ…

என்ன செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியவில்லையா? நீங்கள் செய்யும் 5 தவறுகள் இதோ…

-

- Advertisement -

உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா? இந்த 5 தவறுகள் முக்கிய காரணமாக இருக்கலாம்.என்ன செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியவில்லையா? நீங்கள் செய்யும் 5 தவறுகள் இதோ…மிகவும் குறைவாக சாப்பிடுவது:

ஆரம்பத்திலேயே தினசரி கலோரிகளை அதிரடியாக குறைப்பது ஒரு பெரிய தவறு. இது விரைவான பலன்களை காண்பதற்கான குறுகிய வழி போல தோன்றினாலும், மிக குறைவாக சாப்பிடுவது உங்கள் மெட்டபாலிசத்தை குறைத்து, சோர்வு, மனநிலை மாற்றங்கள் அல்லது தலைச்சுற்றலை ஏற்படுத்தும்.

we-r-hiring

சரியான ஊட்டச்சத்து, குறிப்பாக புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் இல்லாத போது, நீங்கள் கொழுப்பை விட தசையை இழக்க நேரிடும். எனவே, இந்த குறிப்பை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.என்ன செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியவில்லையா? நீங்கள் செய்யும் 5 தவறுகள் இதோ…சாப்பிடும் நேரத்த தவறவிடுவது:

உடல் எடை குறைப்பதற்காக, பல பெண்கள் உணவை தவிர்ப்பது நல்லது என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மையில், உணவை தவிர்ப்பது அதிக பசியை ஏற்படுத்தும். இதனால் அதிகமாக சாப்பிடுவதற்கும் அல்லது தவறான உணவு தேர்வுகளை எடுப்பதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. சரியான காலை உணவை எடுத்துக்கொள்வது உங்கள் மெட்டபாலிசத்தை தூண்டி, நாள் முழுவதும் சீரான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. முட்டை, ஓட்ஸ் அல்லது பழங்கள் போன்ற எளிய உணவுகள் கூட இதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

டயட் உணவுகளை மட்டுமே சார்ந்து இருப்பது:

குறைந்த கொழுப்பு அல்லது சர்க்கரை இல்லாதது என்ற குறிப்புகளை கொண்ட அனைத்தும் உங்களுக்கு நன்மை அளிக்கும் என்று சொல்ல முடியாது. பல சிற்றுண்டிகள் மற்றும் பானங்களில் செயற்கை பொருட்கள் உள்ளன. அவை குறைவான ஊட்டச்சத்து மதிப்பை கொண்டிருக்கின்றன. இவை சில சமயங்களில் பசியை அதிகரிக்க செய்யலாம். அதற்கு பதிலாக விதைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற உணவுகளை தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும்.என்ன செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியவில்லையா? நீங்கள் செய்யும் 5 தவறுகள் இதோ…போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது:

நச்சுகளை வெளியேற்றவும், உங்கள் மெட்டபாலிசத்தை கட்டுப்படுத்தவும், பசியை குறைக்கவும் தண்ணீர் உதவுகிறது. இருப்பினும், உணவு அல்லது உடற்பயிற்சியில் கவனம் செலுத்தும் பெண்கள், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை பெரும்பாலும் புறக்கணிக்கிறார்கள். சில சமயங்களில் தாகம் கூட பசியாக உணரப்படலாம். எனவே, உணவுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது அதிகமாக சாப்பிடுவதை தடுக்க உதவும்.

விரைவான முடிவுகளை எதிர்பார்ப்பது:

பல பெண்கள் சுமார் இரண்டு வாரங்களில் சரியான முடிவுகள் தெரியவில்லை என்றால் தங்கள் முயற்சியை கைவிடுகிறார்கள். இது பல்வேறு டயட் முறைகளுக்கு மாறி, உடலை குழப்பமடைய செய்து மன அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே, அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயுங்கள். வாரத்திற்கு அரை கிலோ எடை குறைந்தாலும் அது ஒரு நல்ல முன்னேற்றம் ஆகும். ஒரு சில வாரங்களுக்கு மட்டும் அல்லாமல், வாழ்நாள் முழுவதும் நீங்கள் பின்பற்றக்கூடிய வழக்கங்களை உருவாக்குவதே முக்கியம்.

எனவே, உடல் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் இவை அனைத்தையும் சரியான முறையில் பின்பற்றி ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும்.

கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘ரூட்’…. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

MUST READ