வேலைக்கு சேர்ந்த இரண்டே நாளில் வளையல் தாலி சரடு போலியாக அணிவித்து 10 லட்ச ரூபாய்க்கு விலை பேசியது அம்பலமானது.
சென்னை திருவொற்றியூர் எடுத்துக்காரன் தெரு காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (79) முதியவர் ஒருவா் அரிசி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். காலடிப்பேட்டை பகுதியில் தனது சொந்த வீட்டில் மனைவி ஆனந்த கனி மற்றும் மகன் குமரேசன் மருமகள் சுமிதா உடன் வசித்து வருகிறார். இவரது மனைவி ஆனந்த கனிக்கு மூன்று வருடங்களாக கை மற்றும் கால் செயலிழப்பு ஏற்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். அவரை பராமரிப்பதற்காக கேர் டேக்கர் வைத்து பார்த்து வருகிறார். வில்லிவாக்கத்தில் உள்ள குளோபல் ஹோம் சர்வீசஸ் என்ற ஏஜென்சி உரிமையாளர் சாந்தி என்பவர் பரிந்துரையின் பெயரில் ஏற்கெனவே வேலை பார்த்து வந்தவர் கையில் அடிபட்டதாக கூறி நின்றுவிட்டதால் புதியதாக திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த ப்ரீத்தியை அனுப்பி வைத்திருந்தார். வேலைக்கு சேர்ந்து இரண்டு நாட்களே ஆன நிலையில், ஆனந்த கனியை குளிப்பாட்டுவதற்காக மருமகள் சுமிதா அவர் அணிந்திருந்த தாலிச் செயினை கழட்டி வைத்து விட்டு அவசர வேலையாக வெளியே சென்றுவிட்டார்.
அதன் பின்பு ப்ரீத்தி மாலை 6:00 மணிக்கு வேலை முடித்து வீட்டுக்கு கிளம்பி சென்றுள்ளார். இதனை அடுத்து மருமகள் சுமிதா வடிவுடையம்மன் கோவிலுக்கு சென்று விட்டு 8 மணியளவில் வீட்டிற்கு வந்து மாமியாரின் தாலியில் குங்குமம் வைத்த பொழுது தாலி சரடு வடிவம் வேறுபட்டிருந்தது டிசைன் மாறி இருந்ததை கண்டு அதிர்ச்சிடைந்து பார்த்த பொழுது அது போலியானது என தெரிய வந்தது. உடனடியாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஜெயராஜ் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், புதியதாக வேலைக்கு சேர்ந்த திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரியை சேர்ந்த 26 வயதான ப்ரீத்தியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் 17 சவரன் தாலி சரடு எடுத்துவிட்டு போலி நகைகளை மாற்றி வைத்திருந்தது தெரிய வந்தது.

ப்ரீத்தி வந்த முதல் நாளே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த மூதாட்டி கையில் இருந்த வளையல்களை கழற்றி கவரிங் வளையலை அணிவித்திருந்தது தெரியவந்தது. பின்னர் நகைகளை எங்கே வைத்துள்ளார் என்று விசாரித்த பொழுது, திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரி பகுதியில் உள்ள அடகு கடையில் 10 லட்ச ரூபாய்க்கு பேரம் பேசி வைத்திருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அடகு கடையில் இருந்த நகைகளை போலீசார் மீட்டு வந்தனர். பின்னர் திருவொற்றியூர் போலீசார் ப்ரீத்தியை கைது செய்தனர்.
கீழடி நம் தாய்மடி … பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் – முதல்வர்


