spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகீழடி நம் தாய்மடி … பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் – முதல்வர்

கீழடி நம் தாய்மடி … பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் – முதல்வர்

-

- Advertisement -

கீழடி நம் தாய்மடி என சொன்னோம், பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்“ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கீழடி நம் தாய்மடி … பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் – முதல்வர்மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள “பூம்புகாரில்” பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனை மேற்கோள் காட்டி “கீழடி நம் தாய்மடி என சொன்னோம்“ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக , “கீழடி நம் தாய்மடி என சொன்னோம்! இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்! அடுத்து, “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்…” என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்!!! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் ஜீவா…. டைட்டிலே கலக்கலா இருக்கே!

we-r-hiring

 

MUST READ