எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காதல் கலந்த நகைச்சுவை கதைக்களத்தை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் எம். ராஜேஷ். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இருப்பினும் கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான பிரதர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து எம். ராஜேஷ், மீண்டும் ஜீவா நடிப்பில் சிவா மனசுல சக்தி 2 என்ற படத்தை இயக்கப்போகிறார் என்று பேச்சு அடிபட்டது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜீவா, சந்தானம் ஆகியோரின் நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் இடம்பெற்ற ஜீவா – சந்தானம் காம்போவின் காமெடி வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. எனவே சிவா மனசுல சக்தி 2 படத்தில் மீண்டும் இந்த காம்போவை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி சந்தானத்திடம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டுமென பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால் சந்தானம் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம்.
எனவே சந்தானம் இல்லாத காரணத்தால் இந்த படத்தை ‘சிவா மனசுல சக்தி 2’ படமாக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்காக இந்த படத்தின் தலைப்பை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாம். அந்த வகையில் இப்படத்திற்கு ஜாலியா இருந்த ஒருத்தன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த டைட்டிலும் வித்தியாசமாக, கலக்கலாக இருப்பதனால் படத்தில் காமெடி காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.


