தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் விமானம் மூலமாக பல்வேறு கடத்தல் நடைபெறுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏர் இன்டெலிஜென்ஸ் அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சர்வதேச விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர்.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் இருந்த தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது பயணிகள் வருகையை சுங்கத்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்த போது 2 விமானங்களில் வந்த 2 பயணிகள், சுற்றுலா பயணிகள் விசாவில் தாய்லாந்து சென்று வந்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில் பயணிகள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களின் உடமைகளை பரிசோதனை செய்ததில் சாக்லேட்டுகள் வடிவத்திலும், உணவு பாக்கெட்டுகளிலும் மறைத்து கொண்டுவந்த உயர்ரக கஞ்சா கண்டறியப்பட்டது. இதையடுத்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கஞ்சா கடத்தி வந்த 2 பயணிகளையும், வாங்க வந்த 3 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
‘பைசன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?…. வெளியான புதிய தகவல்!