spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தேர்தல் 2026SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

-

- Advertisement -

SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது.
SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத, எவருடைய கேள்விக்கும் பதில் சொல்லாத ஒரு அமைப்பாக தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது .

தமிழ்நாட்டில் SIR என்கிற பெயரில் 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி எவ்வளவு பெரிய ஜனநாயக படுகொலையை செய்துள்ளது என்பதை நீங்களே கவனமாக படியுங்கள்…

we-r-hiring

2025 ஜனவரி 1 அன்று தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை : 6,36,12,950 என்று
தேர்தல் ஆணையம் 2025, ஜனவரி 7 அன்று வெளியிட்ட பிரஸ் மீட் அறிக்கை.

SIR நடவடிக்கை துவங்கும் முன்பாக சென்ற 27.10.2025 அன்று தமிழ்நாடு வாக்காளர் எண்ணிக்கை 6,41,14,587 பேர் என்று தேர்தல் ஆணையம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தேர்தல் ஆணையம் வெப்சைட்டில் டிசம்பர் 11 அன்று கொடுத்துள்ள அதிகாரபூர்வ அறிக்கை.

அதாவது… ஜனவரி முதல் அக்டோபர் முடிய 5,01,637 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று இந்த எண்ணிக்கை மாற்றம் குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில், வருடா வருடம் 1000 பேருக்கு சராசரியாக 11 பேர் பிறக்கிறார்கள். 8 பேர் இறக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வோர் ஆண்டும்… 1.1% வாக்காளர்கள் சேருவார்கள். 0.8% வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்.

இந்த 6,41,14,587 பேரில்… SIR படிவம் தரப்பட்டவர்கள் 6,41,13,772 பேர் என்கிறது தேர்தல் ஆணையம். அதாவது, 100% மக்களுக்கு படிவம் தரப்பட்டு விட்டதாக கூறியுள்ளது. ஆக, படிவம் தரப்படாதவர்கள் எண்ணிக்கை வெறும் 765 பேர். இது வெறும் 0.001% என்பதால்… 100% தரப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் கூறியது.

அதாவது… அந்த 765 பேர்… இறந்தவர்களாக இருக்கலாம். அல்லது முகவரியில் இல்லாதவர்களாக இருக்கலாம். அல்லது ஏற்கனவே ஒரு SIR படிவம் பெற்ற இரட்டை பதிவாக இருக்கலாம்.

திரும்பி வாங்கப்பட்ட SIR படிவங்களில்… 6,41,13,221 படிவங்கள் கணினியில் ஏற்றப்பட்டு விட்டதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். இதையும் 100% என்று கூறியுள்ளது தேர்தல் ஆணையம். அதாவது… வெறும் 551 பேர் மட்டுமே படிவம் நிரப்பித் தரவில்லை என்பதால்… இந்த எண்ணிக்கையும் 0.001% என்பதால்… 100% கணினியில் ஏற்றப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் கூறியது. ஆக… அந்த 551 பேர்… இறந்தவர்களாக இருக்கலாம். அல்லது முகவரி மாறிச் சென்றவர்களாக இருக்கலாம். அல்லது ஏற்கனவே வேறொரு இடத்தில் SIR படிவம் பெற்று நிரப்பித் தந்து விட்டதால் இதை நிரப்பித் தராமல் தன்னிடமே வைத்துக் கொண்ட இரட்டை பதிவாகக் கூட இருக்கலாம்.

ஆக மொத்தத்தில்… 6,41,14,587 வாக்காளர்களில்…கணினியில் ஏற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,41,13,221 பேர். அதாவது, 100% தேர்தல் ஆணையம் கணக்குப்படி.
நமது கணக்குப்படி… 99.9979 %

நம்முடைய மிகவும் முக்கியமான கேள்வி என்ன வென்றால் 100% படிவங்கள் தந்து விட்டதாக கூறினார்கள். ஆனால்… நீக்கப்பட்ட 97,37,882 வாக்காளர்களில்
இறந்தவர்கள் : 26,94,672 என்றால்…முகவரியில் இல்லாதவர்கள் 66,44,881 என்றால்…
இத்தனை இலட்சம் இறந்தவர்களுக்கா…இத்தனை இலட்சம் முகவரி இல்லாதவர்களுக்கா.தேடிப்போய் SIR படிவம் தந்தார்கள்..?!

100% படிவங்கள் கணினியில் ஏற்றப்பட்டு விட்டதாக கூறினார்கள்.
ஆனால்… இத்தனை இலட்சம் இறந்தவர்களும்…இத்தனை இலட்சம் முகவரியில் இல்லாதவர்களும்…எப்படி உங்களிடம் SIR படிவம் நிரப்பித் தந்தார்கள்..?! கணினியில் ஏற்றிய பின்னர் இரட்டை பதிவுகளை மட்டுமே கண்டறிய முடியும். அதெப்படி… இறந்தவர்கள் மற்றும் முகவரி மாறியவர்கள் எல்லாம் கணினியில் ஏற்றப்பட பின்னரே கண்டறியப்பட்டனர்..?! படிவம் அச்சடிக்கும் போதோ அதை விநியோகம் செய்யும் போதோ அல்லது நிரப்பபித் தந்த போதோ கண்டறியப்பட வில்லையா..?!
SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?இறப்பு விகிதம்… 0.8% என்கிற போது… 4.2% (26,94,672) மக்கள் எப்படி SIR ல் ஆம்இறந்தார்கள்..?! ஒவ்வொரு வருடமும் SSR நடவடிக்கையில் இவர்கள் நீக்கப்படாமால் பல ஆண்டுகாலமாக வாக்காளர் பட்டியலில் இருந்தார்களா..?!

SIR என்ற பெயரில் நடந்துள்ள இந்த விசித்திரமான கணக்கு உங்கள் யாருக்காவது புரிகிறதா?

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி:

  1. 100% பேருக்கு SIR படிவம் விநியோகம் செய்யப்பட்டுவிட்டது.

  2. விநியோகம் செய்யப்பட்டதில் 100% படிவங்கள் கணினியில் பதிவேற்றமும் செய்யப்பட்டுவிட்டன.

இப்படி 100% சரியாக கணினியில் ஏற்றப்பட்ட தரவுகளில் இருந்து, திடீரென 97,37,882 வாக்காளர்கள் எதன் அடிப்படையில் நீக்கப்பட்டார்கள்?

இறந்தவர்களுக்கும், முகவரியில் இல்லாதவர்களுக்கும் தேடிப் போய் SIR படிவம் கொடுத்தது எப்படி? அவர்கள் எப்படி அந்தப் படிவத்தை நிரப்பித் தந்தார்கள்? கணினியில் ஏற்றிய பிறகு ‘இறந்தவர்கள்’ என்று அவர்களை வகைப்படுத்தியது எந்த வகை அறிவியல்?

இந்த முரண்பாடான புள்ளிவிவரங்களுக்கு யாராவது விளக்கம் சொல்ல முடியுமா?

தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்…

MUST READ