பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர் மண்டலத்தில் தேர்தல் ஆணையம் தலைமையில் SIR வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் துணைத் தாசில்தார் சோபியா தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் சகாயராணி, உதவி ஆணையர் பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திமுக, அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, நாளை முதல் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்க உள்ளன. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளின் கருத்துக்களை பெறுவதற்காக இக்கூட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நிர்வாகி ஜெயராமன் பேசுகையில், ”SIR பா.ஜ.க செய்கின்ற சதி வடமாநிலத்தவரை அதிக பேருக்கு ஓட்டுரிமை அளித்து அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளார்கள் என்று குற்றச்சாட்டு வைத்தார். இதை பாஜக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினரிடையே காரசாரமான இந்த விவாதம் ஏற்படவே மாநகராட்சி மண்டல குழு தலைவர் தனியரசு தலையிட்டு இருவரையும் சமாதானம் படுத்தினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.”
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் நிர்வாகி ஜெயராமன், அவசர அவசரமாக ஒரு மாத காலத்துக்குள் நடத்த இயலாது என்று வலியுறுத்தி உள்ளோம். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்கள் வேலை செய்கிறார்கள். 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டினாலே வாக்குரிமை அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது மாநிலத்தில் அசாம் கலவரம் போன்ற சூழலை உருவாக்கக்கூடும் என்றாா்.
வட மாநிலத்தவர் அனைவரும் பி.ஜே.பிக்கு ஓட்டு போடுவார்கள் என்ற நற்பாசையால் இந்தப் பணி நடத்தப்படுகிறது. மேலும் ஒரு மாத காலத்தில் 311 வாக்காளர் வாக்குச்சாவடிகளில் முகவர்கள் மூலமாக இதை நிறைவேற்றுவது என்பது சாத்தியமில்லை . எனவே சுருக்கமுறை வாக்காளர் இருந்தால் போதும் இந்த சிறப்பு திருத்தம் தேவையில்லை. தமிழனின் மாநில உரிமை பாதிக்கப்படும் என அறிவுறித்தியுள்ளாா்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால் பள்ளிகளில் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இரண்டு மணி நேரம் ஆசிரியர்கள் வெளியில் சென்றால், தேர்வு காலத்தில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும். எனவே தேர்தலுக்கு முன்பாக இத்தகைய சிறப்பு திருத்தப் பணிகளை நடத்துவது சரியல்ல என்று தெரிவித்தார்.
பீகாரில் தேர்தல் நடைபெற உள்ளது அங்கு சிறப்பு வாக்காளர் திருத்தம் நடத்தி முடித்து உள்ளார்கள். பீகாரில் வாக்குரிமை வேண்டாம் தமிழ்நாட்டில் வாக்கு செலுத்துவோம் என்று சொன்னால் பீகாரில் அவர்கள் வாக்குரிமை நீக்கப்படும். அதே போன்று தமிழ்நாட்டில் வாக்குரிமை வேண்டாம் என்று கூறி வேறு மாநிலத்திற்கும் ஓட்டு போட வாய்ப்புகள் அதிகம். இந்த எஸ்.ஐ.ஆர் சட்டம் நடைமுறையில் பல முறைகேடுகள் நடப்பதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன. எனவே எஸ்.ஐ.ஆர் சட்டம் நடைமுறைப்படுத்தக் கூடாது என மார்க்சிஸ்ட் நிர்வாகி ஜெயராமன் தெரிவித்துள்ளாா்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.. தமிழகத்தில் நாளை முதல் வீடு வீடாக படிவம் விநியோகம்..!!


