Homeசெய்திகள்இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றம்:முதற்கட்டமாக ஜி 20மாநாட்டில் பாரத் என பெயர்ப்பலகை!!!

இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றம்:முதற்கட்டமாக ஜி 20மாநாட்டில் பாரத் என பெயர்ப்பலகை!!!

-

இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றுவதில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகும் நிலையில் ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடிக்கு முன்பாக‘பாரத்’ என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றம்:ஜி 20மாநாட்டில் பாரத் என பெயர்ப்பலகை!!!
ஜி 20மாநாட்டில் பாரத் என பெயர்ப்பலகை

18 வது ஜி20 உச்சி மாநாடு இன்று டெல்லியில் நடைபெறுகிறது.இந்திய, அமெரிக்கா, ஆஸ்திரேலியா,அர்ஜெண்டினா, பிரேசில், சீனா,கனடா, பிரான்ஸ், இத்தாலி, இந்தோனேசியா, ஜெர்மனி ,தென் கொரியா ,ரஷ்யா,மெக்சிகோ, சௌதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என பல நாட்டின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவிற்கு பாரத் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்து மோடி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பல்வேறு பிரபலங்கள், கட்சி தொண்டர்கள், பிரமுகர்கள், தலைவர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெயர் மாற்றத்தின் முதற்கட்டமாக ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடிக்கு முன்பாக பாரத் என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ