ஆவடி மாநகராட்சியில் உள்ள புழல் ஏரி,அரபாத் ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரபாத் ஏரியை சுத்தப்படுத்தக்கோரி ஏரியின் கரையில் அமர்ந்து கொட்டும் மழையில் நூதனப்போரட்டம் நடைபெற்றது.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் அரபாத் ஏரி உள்ளது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மாசடைந்து காணப்படுகின்றது. குறிப்பாக கழிவு நீர் கால்வாய் மூலம் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழுவு நீர் நேரடிய கலந்து வருகிறது. கடந்த ஒரு சில தினக்களுக்கு முன்பு ஏரியில் இருந்த அனைத்து மீன்களும் ஏரியில் செத்து மிதந்தன. இந்த நிலையில் அரப்பாத் ஏரியை தூர்வாரி சுத்தப்படுத்தவும்,ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி புழல்,அரபாத் ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் அரபாத் ஏரி மீது நாற்காலி போட்டு அமர்ந்த போராட்டக்காரர்கள் ஏரியை காப்பாற்ற வேண்டி கோஷங்களை எழுப்பினர். இது குறித்து பேசிய போராட்டக் குழு தலைவர் சுந்தரமூர்த்தி சி.டி.எச் நெடுஞ்சாலை சோளம்பேடு சாலை இணைக்க கூடிய அராபத் ஏரி முழுக்க முழுக்க கழிவு நீரால் தேங்கியுள்ளது. மழைக்கு முன் சாக்கடை நீரை வெளியேற்றிவிட்டு எதிர்வரும் மழை நீரை தேக்கக்கூடிய நன்னீர் ஏரியாக மாற்ற வேண்டுமென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். அரசு அராபத் ஏரியை படகு குளமாக்குகிறோம் சுற்றுலாத்தலம் ஆக்குகிறோம் என சொல்லிக்கொண்டு இருக்கிறது. அந்தப் பணிகள் இன்னும் துவங்கவில்லை. எனவே அரசை வலியுறுத்தி பாலுக்கு ஏங்கும் சிறு குழந்தையைப் போல் அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். அரசு உடனடியாக தலையிட்டு மழைக்கு முன் ஏரியை தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். தவறும் பட்சத்தில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளோம் என தெரிவித்துள்ளாா்.
‘மகுடம்’ படத்திற்காக விஷால் எடுத்த அதிரடி முடிவு…. வைரலாகும் வீடியோக்கள்!


