மகுடம் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால் தற்போது தனது 35 வது படமான மகுடம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘ஈட்டி’ படத்தின் இயக்குனர் ரவி அரசு இயக்க சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது என்றும் ஜி.வி. பிரகாஷ் இதனை இசையமைப்பாளராக பணியாற்றுகிறார் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து அஞ்சலி, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் நடிகர் விஷால் மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்தது தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இந்த படம் 2026 ஜனவரி 26 ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் பேச்சு அடிபடுகிறது.
#Vishal turns Director for #Magudam..🤝 After creative differences with director Ravi Arasu, Vishal has taken charge of directing the film himself..✌️ pic.twitter.com/AaTfuhnftA
— Laxmi Kanth (@iammoviebuff007) October 15, 2025

இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ‘மகுடம்’ படத்திற்காக நடிகர் விஷால் இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார் என சொல்லப்படுகிறது. கருத்து (படைப்பாற்றல்) வேறுபாடு காரணமாக ரவி அரசுக்கு பதிலாக ‘மகுடம்’ படத்தை விஷால் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகி வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் விஷால், ‘துப்பறிவாளன் 2’ திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்த நிலையில் அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


