நானி நடிப்பில் வெளியாகியுள்ள ‘தசரா’ திரைப்படம் வசூலை வாரிக் குவித்தது.
நேச்சுரல் ஸ்டார் நானி தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தற்போது பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரிக் குவித்து வருகின்றன.
தற்போது நானி ‘தசரா’ படத்தில் நடித்துள்ளார். வழக்கமான சாக்லேட் பாய் கதாபாத்திரத்தை தாண்டி கிராமத்து மைந்தனாக கலக்கியிருந்தார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார்.
கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியான இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் தசரா 71 கோடி வசூல் செய்துள்ளது. தற்போது படம் 100 கோடி வசூலை நோக்கி முன்னேறி வருகிறது. அப்படி இருந்தால் இதுவே நானியின் முதல் 100 கோடி வசூல் சாதனை படைத்த படமாக இருக்கும்.