spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபெற்றோர்கள் கற்க வேண்டிய பாடம் - என்.கே.மூர்த்தி

பெற்றோர்கள் கற்க வேண்டிய பாடம் – என்.கே.மூர்த்தி

-

- Advertisement -

பெற்றோர்கள் கற்க வேண்டிய பாடம்

கடிதம் -3

we-r-hiring

அன்புள்ள அப்பா அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய இரண்டாவது கடிதத்தை படித்தேன். அந்த கடிதம் அற்புதமாக இருந்தது. அடுத்த தலைமுறையின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். “உங்களிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது வழிகாட்டுதலை மட்டுமே” என்று கடிதத்தை நிறைவு செய்திருந்தீர்கள்.

வழிகாட்டுதலுக்கும், கற்றுக் கொடுப்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன? அதை தெளிவாக விளக்கவும். மேலும் குழந்தைகளுக்கு கற்று கொடுப்பதற்கு முன்பு பெற்றோர்கள் கற்க வேண்டும் என்று எழுதியிருந்தீர். அதனுடைய அர்த்தம் எனக்கு புரியவில்லை. பெற்றோர்கள் எதை கற்க வேண்டும்? குழந்தைகளுக்கு எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும்? விவரமாக விளக்கி எழுதவும்.

இப்படிக்கு
உங்கள் அன்பு மகள்
ரம்யா.

பாசத்திற்குரிய தந்தை

அன்புள்ள மகளுக்கு உன் பாசத்திற்குரிய தந்தை எழுதும் கடிதம்…

அன்பு மகளே,

உன் குழந்தையின் மீது நீ வைத்திருக்கும் அன்பு உண்மையானதா? அப்படி உண்மையான அன்பு வைத்திருக்கிறாய் என்றால் அந்த குழந்தையின் எதிர்கால நலன் கருதி உன்னிடம் சில மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

முதலில் பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு வடிவமைத்து கொள்கிறார்கள்? அவர்களுடைய பழக்க வழக்கங்கள் என்னவாக இருக்கிறது என்பதில் இருந்து தான் குழந்தைகளின் எதிர்காலம் தொடங்குகிறது.

குழந்தைகளின் எதிர்காலம்

பெற்றோர்களின் கையைப் பிடித்து கொண்டுதான் குழந்தைகள் வளர்கிறார்கள். அப்படி என்றால் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு செயல் செய்யும்போதும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

பெரும்பாலான வீடுகளில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ, காபி அருந்துகின்றனர். இந்த பழக்கம் எப்பொழுது நமக்கு வந்தது? நமது வீட்டில் முன்னோர்கள் அருந்தினார்கள் அதனை தொடர்ந்து நாமும் அருந்துகிறோம். தொடர்ந்து எதிர்காலத்தில் நமது குழந்தைகளும் அருந்துவார்கள். டீ, காபி பழக்கம் வெள்ளைக்காரர்கள் பழக்கப்படுத்தியது என்கிறார்கள். அதில் துளியும் உண்மையில்லை. வெள்ளைக்காரர்கள் வெள்ளை நிற சர்க்கரையை பயன்படுத்தவே மாட்டார்கள். அதுவும் பால் கலந்த டீ, காபி குடிக்கவே மாட்டார்கள். அவர்கள் அருந்துவது பிளாக் டீ, பிளாக் காபி மட்டுமே. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ, காபி குடிக்கின்ற பழக்கத்தால் குடலில் புண் ஏற்படும். நாளடைவில் அதுவே  “அல்சராகவும்” பின்னர் சர்க்கரை நோயாகவும் மாறுகிறது என்று மருத்துவர்கள் சொல்வதையும் கேட்பதில்லை.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ, காபி குடிக்கின்ற பழக்கத்தால் குடலில் புண் ஏற்படும்

தற்போது சர்க்கரை நோய் இல்லாத வீடுகளே இல்லை, மருத்துவமனைக்கு செலவழிக்காத நபர்களே இல்லை என்றும் கூறலாம். உங்களுடைய வாரிசு மருத்துவராகுவதை விட, கலெக்டராகுவதை விட ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம்.

உங்களால் உங்கள் குழந்தைகளுக்காக சிறிய பழக்கத்தைக் கூட கைவிட முடியவில்லை. உங்களுக்கு உங்கள் பழக்கமே பிரதானமாக உள்ளது. இந்த இடத்தில் உங்கள் குழந்தை மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பு என்பது அடிப்பட்டு போய்விடுகிறது. சிறிய பழக்கத்தைக் கூட சில பெற்றோர்கள் மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. இப்படிப்பட்ட பெற்றோர்களால் ஆரோக்கியமான, அறிவாற்றல் மிக்க சமுதாயத்தை எப்படி உருவாக்க முடியும்?

பெற்றோர்களின் நல்ல பழக்கம், நல்ல எண்ணம், நல்ல சிந்தனை, நல்ல செயல்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டுதலாக அமைகிறது. நம்முடைய சிறிய வயதில் பழகியது, பேசியது, செயல்பட்டது இப்பொழுதும் நம் நினைவில் அழியாமல் இருக்கிறது என்றால் அதுபோன்று தான் உங்கள் குழந்தைகள் மனதிலும் உங்கள் நடவடிக்கைகள் பதிந்து விடும் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

பிள்ளைகளுக்கு வழிகாட்டுதலாக அமைகிறது

ஒரு ஐந்து வயது குழந்தை  தன்னுடைய தந்தைக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கும். அதே குழந்தை ஐந்து வயதில் இருந்து பத்து வயது வரை தன்னுடைய தந்தைக்கு உலகமே தெரியும், அனைத்தையும் அறிந்தவர் என்று நினைக்கும். அந்த குழந்தைக்கு பதினைந்து வயதாகும்போது தன்னுடைய தந்தைக்கு என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பும். பின்னர் தன் தந்தைக்கு எதுவும் தெரியாது என்ற முடிவிற்கு வரும்.

பதினைந்து வயதில் இருந்து இருபது வயது வரை சிக்கல்கள் நிறைந்த பருவம் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதை நாம் “இரண்டும் கெட்டான் ” வயது என்று கூறுவோம்.

"இரண்டும் கெட்டான் " வயது உடலின் அங்கங்கள் முழுமையான வளர்ச்சி அடையாமல் பாலகப் பருவத்திற்கும் இளமை பருவத்திற்கும் இடையில் தவிக்கும் “இரண்டும் கெட்டான்” வயது. அதை ஒழுங்காக கடப்பது மிகவும் அவசியம்.

அந்த வயதில் தடுமாற்றம் அடைந்தவர்கள் போதை பழக்கத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகி திசைமாறி வேதனையுடன்  வாழ்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை

அந்த வயது சிறுவர், சிறுமியர்களுக்கு பெற்றோர்கள் எதை சொன்னாலும் அதை எதிர்த்து பேச கூடியவர்களாக இருப்பர்கள். ஆண் பிள்ளையாக இருந்தால் தந்தையை வில்லனாக பார்ப்பார்கள். தினமும் முப்பது தடவை கண்ணாடி முன் நின்று முகத்தை திரும்ப திரும்ப பார்த்து கொள்வார்கள், மீசையை தடவி கொள்வார்கள். தான் ஒரு பெரிய மனிதனாகி விட்டோம் என்று கற்பனை செய்து கொள்வார்கள். ஓரு குழந்தைக்கு அந்த வயது  மிக முக்கியமான காலகட்டம்.

அந்த கால கட்டத்தில் குழந்தைகளை சரியான பாதையில் வழிநடத்தி செல்வது என்பது பொற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் தலையாய கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். எனவே அந்த காலகட்டத்தை அவர்கள் எப்படி கடந்து செல்கிறார்கள் என்பதை பொறுத்து தான் அந்த குழந்தையின் எதிர்காலம் அமைகிறது.

 இந்த பருவ மாற்றங்கள் குறித்து விரிவாக எடுத்து சொல்லும் அறிவு பள்ளிகளிலும் இல்லை,வீடுகளிலும் இல்லை

இந்த பருவ மாற்றங்கள் குறித்து விரிவாக எடுத்து சொல்லும் அறிவு பள்ளிகளிலும் இல்லை, வீடுகளிலும் இல்லை. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அந்த அறிவாற்றல் இல்லாததால் பல இளைஞர்கள் தடுமாற்றத்தில் தவிக்கிறார்கள். குழப்பத்தில் இருப்பவர்களுக்கு அவர்களை சுற்றி உள்ள சூழலே அவர்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

எனவே, முதலில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தேவைப் படுகிறது. உங்கள் அனுபவங்களை, நம்பிக்கைகளை உங்கள் பிள்ளைகள் மீது திணிக்காமல் குழந்தைகளின் மன நிலையை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப அறிவியல் பூர்வமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும். குழந்தைகள் 15 வயதில் இருந்து 23 வயது வரை என்ன செயல் செய்கிறார்களோ, என்ன பழக்கத்தில் இருக்கிறார்களோ, எந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார்களோ அதுதான் அவர்களின் எதிர்காலமாக அமைகிறது.

அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையில் வைராக்கியத்தையும், உறுதியையும் வளர்த்துக் கொண்டவர்கள் மட்டுமே பிற்காலத்தில் பெரும் சாதனையாளராக ஜொலிக்கிறார்கள்.

எண்ணை விளக்கில் எரியும் தீபம் போன்றுஅந்த வயதில் உள்ள பிள்ளைகள் ”எண்ணை விளக்கில் எரியும் தீபம் போன்று”. அப்போது விழிப்புணர்வுடன் இருந்து அவர்களை கண்காணித்து தீபத்தை அணையாமல் பார்த்துக் கொள்வதில் பெற்றோர்களுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது.

விழிப்புணர்வு… விழிப்புணர்வு என்கிறீர்களே, அப்படி என்றால் என்ன என்று கேட்பது தெரிகிறது.

(தொடர்ந்து பேசுவோம்)
– என்.கே.மூர்த்தி…

MUST READ