spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆதவ் அர்ஜுனால் அதிமுகவுக்கு எந்த பலனும் இல்லை... பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் அதிரடி!

ஆதவ் அர்ஜுனால் அதிமுகவுக்கு எந்த பலனும் இல்லை… பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் அதிரடி!

-

- Advertisement -

ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் சேர்வதால் அந்த கட்சிக்கு எந்த பலனும் இல்லை என்றும், அவரை கட்சியில் சேர்க்கும் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் சேர முயற்சித்து வருவது தொடர்பாக பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள  நேர்காணலில் கூறியிருப்பதாவது: ஆதவ் அர்ஜுனா அதிமுக போன்ற ஏதாவது கட்சியில் சேரத்தான் வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஐ.டி. விங்கில் அவர் என்ன செய்தார்? அவருக்கு ஐ.டி. விங் வேலை ஒன்றும் தெரியாது. மதுஒழிப்பு மாநாடு நடத்தினார். விஜய் மாநாட்டிற்கு நிதி வழங்கினார். அதெல்லாம் லாட்டரியில் கொள்ளையடித்த பணம். அந்த லாட்டரி பணத்திற்கு என்ன கணக்கு உள்ளது. கேஏஎஸ் சேகர், ராமதாஸ், தினபூமி, அதிர்ஷ்டம் எல்லாம் நினைவிருக்கிறதா?. அவர்கள் எல்லாம் லாட்டரி பணத்தில் வாழ்ந்தவர்கள். நாம் ஆதவ் அர்ஜுனாவை இந்த அளவிற்கு தவறான நடவடிக்கைகளை வெளிப்படுத்தினோம். அவருடன் காம்பரமைஸ் செய்துகொள்ள என்னை பல பேர் அழைத்தனர். ஆனால் மறுத்துவிட்டேன். இன்றும் கூட தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்திற்கு சென்று ஏராளமான இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டனர். தமிழ்நாட்டில் லாட்டரியை ஒழித்தவர் ஜெயலலிதா. அந்த பணத்திதற்கு எடப்பாடி செல்கிறார் என்றால் அவர் மீதான மதிப்பு என்னவாகும். லாட்டரியை ஒழித்த ஜெ.வுக்கு எதிராக லாட்டரியை ஆதரிக்கும் எடப்பாடி என டைடில் வைக்கலாம். நகர்ப்புற வாக்காளர்கள், நடுத்தர வாக்காளர்கள் அதிமுகவை தூக்கிஎறிந்து விடுவார்கள்.

விசிகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் மவுனத்தை கலைத்த ஆதவ் அர்ஜூன்

ஆதவ் அர்ஜுனாவுக்கு தலித் மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் தலித் கிடையாது. அவர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கட்டமைக்க முயற்சித்தார். விசிகவிலேயே அவரால் ஒரு ஆதரவாளர்களையும் திரட்ட முடியவில்லை. அந்த கட்சியிலேயே முடியவில்லை என்றால் அதிமுகவில் சென்று என்ன செய்வார். அதிமுக என்பது மிகப்பெரிய ஆலமரம். அங்கு சென்றால் கசங்கிய கற்பூரமாகி விடுவார். அதிமுகவில் ஐ.டி. விங் சரியில்லை என்றால் அதற்கு வேறு பார்முலா உள்ளது. அதற்கு ஆதவ் அர்ஜுனா தேவையில்லை. ஆதவ் அர்ஜுனாவின் லாபி என்பது அதிமுகவிற்கு உதவாது. ஆதவ் அர்ஜுனாவின் லாபி எது என்றால் யூடியூப் லாபி, டிவிட்டர் லாபி. இவர்கள் வாக்காளர்கள் கிடையாது. ஆனால் கருத்துக்களை உருவாக்குவார்கள். வாக்காளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

ஆதவ் அர்ஜுனா அதிமுகவுக்கு வருவதை, அந்த கட்சியின் மற்ற தலைவர்கள் ஆபத்தாகதான் பார்க்கின்றனர். எடப்பாடி பழனிசாமி ஆதவை அதிமுகவில் விடுவதாக சொல்கிறார். ஆனால் இந்த விவகாரத்தில் இன்னும் அவர் இறுதி முடிவு எடுக்கவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஆதவ் அர்ஜுனா, சவுக்கு சங்கர் போன்றவர்கள்தான் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விசிகவையும் பிரிச்சு கொண்டு வந்துவிடுவோம் என முயற்சி மேற்கொண்டனர். சவுக்கு சங்கர் போன்றோர் டிடிவி தினகரனுக்காக, கூடுதல் இடங்கள் தருவதாக விசிகவிடம் பேசியதாக அக்கட்சியின் நிர்வாகி வன்னியரசு தெரிவித்துள்ளார். ஆதவ், சவுக்கு சங்கர் இவர்கள் எல்லாம் ஒரே டீம்தான். இப்போது அவர்கள் விஜயை ஆதரிக்க உள்ளனர். இது வேலைக்கு ஆகாது என்று விஜய்க்கே நன்றாக தெரியும். விஜய், புஸ்ஸி ஆனந்தை தவிர வேறு யாரையும் ப்ரமோட் செய்ய மாட்டார்.

மூவரின் உயிரை குடித்தது! மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய கலாச்சாரம்! கொதித்தெழுந்த எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுக – விஜய் கூட்டணிக்குதான் முயற்சித்து வருகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையை மிதுன் மேற்கொண்டு வருகிறார். அதேவேளையில் பாஜக அதிமுகவை விடாது. அண்மையில் மிதுன், அண்ணாமலை, ஒடிசாவை சேர்ந்த திரிவேணி எர்த் மூவர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோர் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். ஆனால் அமித்ஷா, அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார். பாஜக, அதிமுகவை நிச்சயம் விடாது. சோதனை மேல் சோதனை நடத்தி அதிமுக – பாஜக கூட்டணி கொண்டு வந்து விடுவார்கள். அப்படி அதிமுக – பாஜக கூட்டணிக்கு சென்றால், ஆதவ் அர்ஜுனாவுக்கு அங்கு வேலை இருக்காது. ஏனென்றால் பாஜகவுக்கு எதிராக தான் அவர் கருத்துக்களை முன்வைக்கிறார். சமூக வலைதளங்களில் புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் எல்லாம் இன்று கூட செல்கிறார்கள். எல்லாம் ஆதவ் அர்ஜுனாவின் பணம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ