spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஜனநாயகனுக்கு பிறகு கட்சி கலைப்பு! சிபிஐயிடம் சிக்கும் சூட்டிங் காட்சிகள்! இதயா உடைக்கும் உண்மைகள்!

ஜனநாயகனுக்கு பிறகு கட்சி கலைப்பு! சிபிஐயிடம் சிக்கும் சூட்டிங் காட்சிகள்! இதயா உடைக்கும் உண்மைகள்!

-

- Advertisement -

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அதன் அடிப்படையில் தான் அவர் கட்சிக்குள் வரப் போகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் இதயா தெரிவித்துள்ளார்.

we-r-hiring

நடிகர் விஜயின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் இதயா, யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தொடங்கியிருக்கும் நிலையில், விஜயின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. அவருடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பது கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்துக்கு கூட தெரியாது. காரணம் அது ஒரு பெரிய இரும்புக்கோட்டை. மூடு மந்திரம். இப்படியாகத் தான் இருக்கிறது. அடுத்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்தால், அவர்களை விஜய் சந்திப்பாரா? என்று கூட தெரியவில்லை. விஜய் அமைதியாக இருப்பதை பார்த்தால், தவெக என்கிற கட்சியை தொடர்ந்து நடத்துவாரா? என்கிற சந்தேகம் எழுகிறது.

அதிமுக கூட்டத்தில் தங்கள் கட்சியினர் கொடி பிடிக்கும் போது, அதற்கு தவெக தரப்பில் இருந்து குறைந்தபட்சம் மறுப்பு தெரிவிக்க வேண்டாமா? விஜய், ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்யப் போகிறார் என்று ஊடகங்கள் தான் தங்கள் இஷ்டத்திற்கு எழுதுகின்றன. ஆனால் அவர் என்ன செய்யப் போகிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. விஜய் அடுத்தக்கட்ட பிரச்சாரம் செய்ய எங்கும் அனுமதி கேட்கவில்லை. மாற்று பிரச்சார திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

நீங்கெல்லாம் CM ஆனா மக்களுக்கு ஒன்னும் பண்ண மாட்டீங்க.... விஜயை விமர்சித்த பிக் பாஸ் பிரபலம்!

திமுக இன்றைக்கு தவெகவை காலி செய்ய பார்க்கிறது. அவர்களுக்கு பயந்து கொண்டு அதிமுக – பாஜக கூட்டணிக்கு சென்றால், அவர்கள் நிச்சயமாக நம்மை எதிர்காலத்தில் காலி செய்துவிடுவார்கள். மற்றொன்று மக்கள் மத்தியில் இருக்கும் பிம்பம் அடிபட்டு போய்விடும். தேர்தலில் அடிபட்டால் வடிவேலு போல விஜய்க்கும் மார்க்கெட் போய்விடும். விஜய்க்கு கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரிய வில்லை. கரூர் துயர சம்பவத்தில் தங்களுக்கு பொறுப்பு இல்லை என்று, மாவட்ட செயலாளரை மாட்டிவிட்டனர்.

234 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்த வேண்டும் என்றால், தேர்தல் செலவுக்கு கட்சி சார்பில் குறைந்தபட்சம் ஒரு கோடியாவது வழங்க வேண்டும். அதுபோக, விஜய் ஹெலிகாப்டரில் செல்கிறபோது, அதற்கும் செலவாகும். விஜய் குறைந்தபட்சம் தன்னுடைய செலவுகளை பார்த்துக்கொள்வார். ஆனால் வேட்பாளர் வெற்றி பெற மாட்டோம் என்று தெரிந்தும், விஜயை நம்பி தொகுதிக்கு ரூ.2 கோடி செலவு செய்ய தயாராக இருப்பார்களா?

50 ஆண்டு கால திரைப்பயணம்.... ரஜினி வெளியிட்ட அறிக்கை!

அதிமுக, திமுக என 2 மிகப்பெரிய வேட்பாளர்களுக்கு மத்தியில் அவர்கள் போட்டியிட வேண்டும். இவை எல்லாம் மிகவும் சவால் மிகுந்ததாகும். இவற்றை எல்லாம் யோசிக்கிறபோது, விஜய் அடுத்தக்கட்டமாக என்ன செய்யப் போகிறார் என்று சந்தேகம் ஏற்படுகிறது. பாக்கியராஜ் போல ஒருவேளை அரசியல் கட்சியை கலைத்துவிட்டு, நடிப்பை தொடருவாரோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. ஒரு மாத அமைதி என்பது மிகவும் நீண்ட காலமாகும். விஜய் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்பதுதான் பேச்சாக இருக்கிறது. விஜய், ஊடகங்கள் எல்லாம் தன்னை பற்றியே பேசுவதாக நினைத்துக் கொள்ளலாம். அதை ரசிக்கிறாரா? என்று கூட தெரியவில்லை.  விஜய் அடுத்தக்கட்ட பிரச்சாராத்திற்கு போவாரா? எப்போது அறிவிப்பார் என்பது கேள்வியாகவே இருக்கிறது. ஒரு வேளை ரஜினி, பாக்கியராஜ் வரிசையில் விஜயும் சேருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க சிறப்பு பூஜை.... எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி!

விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, அவர் மிகப்பெரிய வியூகத்தை வகுத்துக் கொண்டிருக்கிறார். விஜய் மீண்டும் களத்திற்கு வந்து பெரிய அளவில் நிற்கப் போகிறார் என்று சொல்கிறார்கள். விஜய் வருகிறபோது மிகப்பெரிய ரசிகர்கள் பலம் இருப்பதை நம்பி வந்தார். அவர் என்ன முடிவு செய்யப் போகிறார் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.  எஸ்.ஏ.சந்திரசேகரும், விஜயும் விலகி தான் இருக்கிறார்கள். குடும்பத்தினர் எல்லோரும் விலகிய நிலையில், விஜய் சில நடிகைகளுடன் கும்மாளம் அடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. அதை தவிர்க்க பெற்றோரை மேடையில் ஏற்றினார். எஸ்.ஏ.சந்திர சேகருக்கு, விஜய் அரசியலில் மேலே வர வேண்டும் என்றும், விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தவெகவுக்குள் எஸ்.ஏ.சி வருகிறார்.

ஆனால் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா அளவுக்கு கட்சியில் இடம் தருவாரா? என்று தெரிய வில்லை. அது குழப்பத்திற்கு வித்திடும். விஜய் தற்போதும் புஸ்ஸி ஆனந்தை தவிர வேறு யாரையும் தன்னுடைய நெருங்கிய வட்டத்தில் வைத்துக்கொள்வது இல்லை. அதற்கு அடுத்த வட்டத்தில் தான் ஆதவ், நிர்மல்குமார் போன்றவர்கள் இருக்கிறார்கள். மாநில நிர்வாகிகளே விஜயை நேருக்கு நேராக சந்திக்க முடியவில்லை என்பது தான் பிரச்சினையாக உள்ளது.

மற்றொன்று, விஜய் எந்த முக்கிய அறிவிப்பாக இருந்தாலும், ஜனநாயகன் படம் வெளியாகும் வரை சொல்ல மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜனநாயகன் படம் வெற்றி பெற வேண்டும். அதுவரை அந்த டெம்போவை கிரியேட் செய்ய வேண்டும் என விஜய் நினைக்கிறார். ஒரு வேளை விஜயை கட்சியை கலைப்பதாக இருந்தாலும், அதை ஜனநாயகன் வெளியான பிறகுதான் அறிவிப்பார். படம் வெற்றி பெற்றுவிட்டால் கட்சியை தொடரலாம் என்கிற ஆசை கூட அவருக்கு வரலாம். விஜயின் பிரச்சார கூட்டங்கள் எல்லாம் திருட்டுத்தனமாக படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதெல்லாம் சிபிஐ விசாரணையில் தெரியவருமா? என்று பார்க்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ