spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதேர்தல் பணிகளில் இருந்து விலகிய அண்ணாமலை! புதுக்கட்சி தொடங்க திட்டமா? செந்தில்வேல் நேர்காணல்!

தேர்தல் பணிகளில் இருந்து விலகிய அண்ணாமலை! புதுக்கட்சி தொடங்க திட்டமா? செந்தில்வேல் நேர்காணல்!

-

- Advertisement -

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கும் அண்ணாமலை, தனிக்கட்சி தொடங்கி புதிய அணியை ஏற்படுத்துகிற எண்ணத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

senthilvel new
senthilvel new

பாஜக தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து அண்ணாமலை விலகியதின் பின்னணி குறித்து ஊடகவியலாளர் செந்தில் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- பாஜகவில் 6 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, அந்த பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கு காரணமாக தனது தந்தையாரின் உடல் நிலையை கூறியுள்ளார். திடீரென ஐ.பி.எஸ் பதவியில் இருந்த அண்ணாமலையை அழைத்து பாஜக மாநில தலைவர் ஆக்கினார்கள். அவர் தலைவர் ஆகிய பிறகு, தினமும் பொய்களை பேசி பாஜக தொண்டர்கள் உற்சாகப்படுத்தினார். விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் தான், அவருக்கு பிரச்சினை ஏற்பட்டது. அண்ணாமலை, 2026 சட்டமன்றத் தேர்தலில், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி பாஜக, டிடிவி தினகரன், ஓபிஎஸ், பாமக, பாரிவேந்தர், ஏசிஎஸ் போன்றவர்களை எல்லாம் சேர்த்துக்கொண்டு ஒரு அணியை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தார்.

we-r-hiring

அதற்கான காய்களையும் நகர்த்த தொடங்கினார். அது வேகமாகவே நகர்ந்து கொண்டிருந்தது. அதேவேளையில், கொங்கு மண்டலத்தில் அண்ணாமலையின் வளர்ச்சியும், அவர் அதிமுகவை அவமதித்து பேசியதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அண்ணாமலைக்கு எதிரான நேரம் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தார்.

பிணத்தை வைத்து அரசியல் செய்யும் அண்ணாமலை

விஜயின் வருகை, திமுக எதிர்ப்பில் அவர் காட்டிய வேகம் ஆகியவற்றை பார்த்த எடப்பாடி பழனிசாமி, கரூர் சம்பவத்திற்கு பிறகு அவரை ஆதரித்து பேச தொடங்கினார். அதிமுக – தவெக கூட்டணி அமையுமா? என்ற விவாதங்கள் எழ தொடங்கின. இதை கவனித்த அமித்ஷா, பதற்றமாகினார். பாஜக தலைமையில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கலாம் என திட்டமிட்டிருந்த நிலையில் அதிமுகவும், விஜயும் கூட்டணி சேர்ந்தால், பாஜகவுக்கு 4ஆம் இடம் தான் கிடைக்கும். மேலும், அதிமுக – விஜய் கூட்டணி ஆளுங்கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ வந்துவிட்டால், தமிழ்நாடு களம் மீண்டும்  திமுக Vs அதிமுக என்றாகி விடும். பாஜக தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட்டு விடும்.

இதனால் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை அழைத்து கூட்டணி பேச்சு வார்த்தைகளை நடத்தினார். அப்போது, தனக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் ஒத்துப் போகாது என்றும், அவரை நீக்க வேண்டும் என்றும் நிபந்தனை வைக்கிறார். வேறு வழியின்றி அமித்ஷா, அண்ணாமலையை நீக்கிவிட்டு நயினார் நாகேந்திரனை தலைவராக்கினார். அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தைகளும், பாஜக தலைவர் மாற்றமும் கிட்டத்தட்ட ஒரே நாளில் நடைபெற்றது.

தலைவர் பதவியில் இருந்து மாற்றியதால் கடும் அதிருப்தியில் இருந்து வந்த அண்ணாமலைக்கு அடுத்த இடியாக தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. தலைவர் பதவியில் இருந்து நேரடியாக முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த அண்ணாமலை, இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினார். இதனால் செய்தியாளர்களை அழைத்து தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். அதற்கு காரணமாக தனது தந்தையின் உடல்நிலையை காரணமாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது ஏற்கத்தக்க காரணம் அல்ல என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக பிரதமர் மோடியின் தாயார் மரணத்தின் பிரதமர் மோடி நடந்த கொண்ட விதத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அப்போது அண்ணாமலையின் திட்டம் என்ன? என்று கேள்வி எழுகிறது. அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜக என்றால், அது அண்ணாமலை என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அப்போது வலதுசாரி பார்வையோடு தனிக்கட்சி தொடங்கி, அந்த கட்சிக்கு மானசீக தலைவர்களாக மோடி, அமித்ஷா இருப்பார்கள். அப்படியான ஆசை, முயற்சி அண்ணாமலைக்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடைசி நேரத்தில் அமித்ஷா அழைத்து, அண்ணாமலையை கண்டித்து தேர்தல் வேலையை பார்க்க வைக்கலாம். இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் விதமாக தனிக்கட்சி தொடங்குங்கள் என்று அமித்ஷா கூறினால், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கலாம். அப்படி தொடங்கினால் டிடிவி திகனரன், அன்புமணி உள்ளிட்டோரிடமும், அல்லது மருத்துவர் ராமதாஸ் உடனும் கூட்டணி அமைத்து, தேர்தலில் களம் காணவும் அண்ணாமலைக்கு எண்ணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சொல்கிறபோது, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவோடு வெற்றி பெறுவதை தினகரன் விரும்ப மாட்டார் என்று சொன்னேன்.

தற்போது அதே இடத்திற்கு அண்ணாமலையும் வந்துவிட்டார். அவர் தேர்தலில் போட்டியிடுவாரா? என்பதே சந்தேகம் தான். அமித்ஷா வற்புறுத்தினால் மட்டுமே அவர் போட்டியிடுவார். அவர் போட்டியிடாமல் இருக்க மற்றொரு காரணம் தன் மீது வெறுப்பில் உள்ள அதிமுகவினர் உள்ளடி வேலைகளை பார்த்து தன்னை தோற்கடித்து விடுவார்கள் என்றும் நினைக்கிறார். எனவே அவர் தேர்தலில் போட்டியிடுவது என்பதே சந்தேகம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ