spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை

ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை

-

- Advertisement -

ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடியின் அரசியல் களம் கொஞ்சம் வித்தியாசமானது. சமுதாயச் சிந்தனைக் கொண்ட இளைஞர்கள் ஆவடிக்கு அவசியம் தேவைப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் மிக அருகிலுள்ள ஆவடிக்கு அதிக வரலாற்று சிறப்புகள் இருக்கிறது. ஆனால் சமுதாய சிந்தனைக் கொண்ட இளைஞர்கள், சுயநலம் இல்லாத இளைஞர்கள், சமுதாயத்திற்கு சேவை செய்யக்கூடிய இளைஞர்கள் அரசியலுக்குள் வராததால் ஆவடியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது.

we-r-hiring

ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை

ஆவடியில் மாநில கட்சி, அகில இந்திய கட்சிகளின் கிளைகளும், அதற்கான நிர்வாகிகளும் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சமுதாயத்தின் மீது இருக்கின்ற அக்கறையினால் அரசியலுக்குள் வந்தவர்கள் இல்லை. ஊருக்கும், நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்குள் வந்தவர்கள் இல்லை. அப்பழுக்கற்ற தலைவர்களைப் பற்றி படித்து அதன் மூலம் ஈர்ப்பு ஏற்பட்டு அரசியலுக்கு யாரும் வரவில்லை.

அவர்கள் அனைவரும் வியாபார நோக்கத்தோடும், வியாபார சிந்தனையோடும் அரசியலுக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களால் ஊரு மாறிவிடும், நகரம் மாறிவிடும், நாடு மாறிவிடும் என்ற நம்பிக்கை வைப்பது தவறு.

இந்தியா சுதந்திரம் அடைந்தப் பின்னர் 1954ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு ஆவடியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கலந்துக் கொண்டார். அதில் முன்மொழிந்த தீர்மானங்களும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை.

ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை

ஆவடி காங்கிரஸ் மாநாடு என்ற சிறப்பு இப்போதும் பேசப்படுகிறது. அந்த மாநாடும் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களும் ஆவடிக்கு வந்தார்கள், அதனால் ஆவடி பல முன்னேற்றங்கள் அடைந்தது என்பது இந்த மண்ணிற்கு கிடைத்த வரலாற்று பெருமை.

ஆவடி காங்கிரஸ் மாநாட்டிற்கு நேரு வருவதற்காக பிரத்யோகமாக போடப்பட்ட சாலைதான் “நியூ ஆவடி ரோடு.” என்ற புதிய சாலை. சென்னைக்கும் ஆவடிக்கும் முதல் இணைப்பு அந்த சாலை வழியாகத்தான் தொடங்கியது.

ஆவடி மண்ணிற்கு நாட்டின் முதல் பிரதமர் நேரு வந்தார், அவரால் பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது. விமானப்படை பயிற்சி நிறுவனம், துணை ராணுவப்படை என்று மத்திய அரசின் கவனம் முழுவதும் ஆவடியின் மீது விழுந்தது. ஆவடியின் பெயர் நாடு முழுவதும் தெரிந்தது.

ஆவடியில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களில் தயாரிக்கும் “டேங்” போன்ற உயர்ரக இயந்திரங்களைக் கொண்டு செல்வதற்கு “நியூ மிலிட்டரி ரோடு” அமைக்கப்பட்டது. அதுவே சென்னைக்கும் ஆவடிக்கும் இடையே 2-வது இணைப்பு சாலை. இவ்வாறு ஆவடியின் மீது அரசின் கவனம் இருந்தது. ஆனால் ஆவடியோ ஆமை வேகத்தில் தான் வளர்ந்தது.

ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை

ஆவடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தவும், அதன் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கவும் தொலை நோக்கு பார்வைக் கொண்ட இளைஞர்கள், தலைவர்கள் ஆவடியில் தோன்றவில்லை என்பது எதார்த்தமான உண்மை.

ஆவடியின் பூர்வக் குடிகள் விவசாயம் செய்வதிலும், ஆடு, மாடு வளர்ப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார்கள். அவர்களுக்கும், அரசியல் களத்திற்கும் வெகு தூரம் இருந்தது. பூவிருந்தவல்லியை சேர்ந்த D.ராஜரத்தினம் (DRR) மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதர்சனம் தான் ஆவடியை வழிநடத்தினார்கள்.இப்போதும் DRR-ன் பெயரை மக்கள் உச்சரித்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் பிழைப்பைத் தேடி ஆவடிக்குள் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

இப்போது தலைவர்கள் என்று அறியப்படுகிறவர்கள் எல்லோரும் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு வெளியில் இருந்து வந்து குடியேறியவர்களின் வாரிசுகள். மண்ணின் மைந்தர்கள் என்று யாரும் இல்லை.

ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை

அவர்களுக்கு இயற்கையாகவே இந்த மண்ணின் மீது பற்றோ, இந்த நகரின் வளர்ச்சியில் அக்கறையோ இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அவர்கள் வந்தார்கள், உழைத்தார்கள், அந்த வருமானத்தை தான் பிறந்த ஊரில் முதலீடு செய்தார்கள். அவ்வளவுதான். அவர்களால் ஆவடிக்கு எந்த நன்மையும் நடைபெறவில்லை. இப்படி படிப்படியாக வெளி நபர்களின் ஆதிக்கத்தின் கீழ் ஆவடி வந்தது. ஒரு கட்டத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கூட்டு சேர்ந்து ராஜஸ்தான் மார்வாடி, “சாந்திலால் ஜெயின்” என்பவரை ஆவடி நகர்மன்ற முதல் தலைவராக தேர்வு செய்தார்கள். ஆவடியில் தலைவர்கள், தலைமைப் பண்பு கொண்டவர்களின் பற்றாக்குறை அப்பொழுதே இருந்துள்ளது.

ஆவடி என்ற தமிழ் மண்ணில் ராஜஸ்தான் என்ற வடமாநில வியாபாரியை தலைவராக தேர்வு செய்து “ஆவடி தன் வரலாற்று பதிவேட்டில் முதல் தவறை பதிவு செய்துக் கொண்டது.” சாந்திலால் ஜெயின் ஆவடியை வளப்பதற்கு பதிலாக தன்னையும், தன் இனத்தையும் வளப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தினார். தற்போது சாந்திலால் ஜெயினின் வாரிசுகள் ஆவடியை விலைக்கு வாங்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்கள்.

ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை

அதற்கு அடுத்தது “ஆவடி தான் நான், நான் தான் ஆவடி” என்ற கம்பீர தோற்றத்தில் “ஆவடி” என்ற ஊர் சொல் அடைமொழியோடு “ஆவடி சா.மு.நாசர்” முக்கிய பிரமுகராக வளர்ந்து வந்தார். ஆவடி நகர்மன்ற இரண்டாவது தலைவராக வெற்றிப் பெற்றார். அவர் ஆவடியில் புதிய சாலைகளை உருவாக்கினார், மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றினார். சில இடங்களில் கோபுர மின் விளக்குகளை அமைத்தார். இரண்டு முறை நகர்மன்ற தலைவராக இருந்த ஆவடி சா.மு. நாசர் அடிப்படை கட்டமைப்பை உருவாக்கினார்.

திமுகவைச் சேர்ந்த அவா் தலைவராக இருந்த இரண்டு முறையும் அதிமுக ஆட்சியில் இருந்தது. அந்த நிர்வாகத்தில் அவரால் அவ்வளவுதான் செய்ய முடியும். முடிந்ததை செய்தார். அவரை தொடர்ந்து நகர்மன்ற தலைவராக வந்த விக்டரி மோகனும் சாலை, மின்விளக்குகளை அமைத்து நகரை மேம்படுத்தினார். 2011ல் ஆவடி சட்டமன்ற தொகுதி புதியதாக உருவானது. ஆவடி சட்டமன்றத் தொகுதி முதல் உறுப்பினராக எஸ். அப்துல்ஹீம் வெற்றிப் பெற்றார். மூன்றாண்டு காலம் அமைச்சராக இருந்த அப்துல்ரஹீம் பெரியதாக எதுவும் சாதிக்க வில்லை. எல்லோருக்கும் நல்ல மனிதராக இருந்து பதவி காலத்தை கடந்து சென்றார்.

ஆவடியில் தோன்றிய தலைவர்களுக்கு தொலை நோக்கு பார்வையில்லை, ஆவடிக்கு என்ன தேவை என்று திட்டமிடல் இல்லை. ஆவடியில் தலைமைப் பண்புக் கொண்டவர்களுக்கு பற்றாக்குறை இருந்தது. ஆவடிக்கு நல்லத் தலைவர் யாராகிலும் வரமாட்டார்களா என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தனா். அப்போது 2016 தேர்தலில் ஆவடிக்குள் வந்தவர் தான் மா.பா. பாண்டியராஜன். அவா் ஆவடிக்குள் நுழையும் போது புத்தம் புதியவராக இருந்தாா். அனைத்தையும் கேட்டு அறிந்துக் கொண்டாா். கிழக்கு, மேற்கு என்று நான்கு திசைகளையும் கால் தேய நடந்தாா்.

ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை

ஒவ்வொரு பிரச்சனையையும் காது வலிக்க கேட்டார். சாதாரண மனிதனிடமும் மனம் விட்டு பேசினார். மக்களோடு இணைந்தார். மக்களில் ஒருவனாக மாறினார். ஆவடி மக்கள் கேட்டதை எல்லாம் செய்தார். மக்கள் கேட்காததையும் செய்தார்.
நோயாளிகளுக்கு மருத்துமனையை கொண்டு வந்தார், பயனாளிகளுக்கு வட்டாச்சியர் அலுவலகத்தை கொண்டு வந்தார், படித்த பட்டதாரிகளுக்கு தொழில் நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். முதியவர்களுக்கு பருத்திப்பட்டு பசுமை பூங்கா அமைத்தாா். பாலத்தை கட்டினார், குளத்தை வெட்டினார் என்று சாதனை பட்டியலை வாசித்துக் கொண்டே இருக்கலாம்.

ஆவடியின் முகத்தையே மாற்றினார். அவருக்கும் ஆவடி மக்களுக்கும் இடையில் நல்ல நெருக்கம் ஏற்பட்டது. பாண்டியராஜன் என்ற பெயரை சொன்னால் மக்களின் முகத்தில் மகிழ்ச்சி, சந்தோஷம் இருந்தது. தேர்தல் வந்தது, தேர்தல் காலத்தில் அவர், மக்களின் கொள்கைக்கு நேர் எதிராக இருந்தார். அவருடைய அரசியல் நிலைப்பாட்டை, அரசியல் கொள்கையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவர் தோல்வியை தழுவினார். ஆவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவர் காலடி மீண்டும் ஆவடியில் படுமா, படாதா என்பது தெரியாது. ஆனால் அவர் ஆவடியில் பதித்த கால் தடம் மட்டும் எக்காலத்திலும் அழியாது.

தொடர்ந்து பேசுவோம்…..

MUST READ