Homeசெய்திகள்கட்டுரைகொரோனா அரக்கன் மீண்டும் வருகிறது! மக்களே உஷார்!

கொரோனா அரக்கன் மீண்டும் வருகிறது! மக்களே உஷார்!

-

கொரோனா அரக்கன் மீண்டும் வருகிறது! மக்களே உஷார்!

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனா நாட்டில் “வூ கான்” நகரில் முதன்முதலாக தோன்றிய கொரோனா என்கிற மாபெரும் உயிர் கொல்லி நோய் உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மனித உயிர்களை கொன்று குவித்தது. விஞ்ஞான வளர்ச்சியில் ஆட்டம் போட்டுவந்த மனித இனம் கொரோனாவிற்கு பயந்து நடுங்கியது.

கொரோனா அரக்கன் மீண்டும் வருகிறது! மக்களே உஷார்!

கொரோனா கண்டறியப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கிவிட்டது. பல நாடுகள், பல தடுப்பு மருந்துகளை கண்டுப்பிடித்து விட்டது. ஆனாலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. உருமாற்றம் அடைந்து பல ரூபத்தில் மீண்டும் மீண்டும் மனித இனத்தை அச்சுறுத்தி வருகிறது.

கொரோனா பல வடிவத்தில் உருமாறி வருவதால் அதன் வீரியம் குறைந்து இருப்பதாக மருத்துவர்கள் சொல்வதால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ஆனாலும் அடுத்த பத்தாண்டில் மனித இனம் பெரும் பேரழிவை சந்திக்க இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த “ஏர்பினிட்டி” என்ற அமைப்பு, ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் வரும் காலங்களில் அதிக அளவிலான பெரும் தொற்றுகள் அடிக்கடி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கொரோனா அரக்கன் மீண்டும் வருகிறது! மக்களே உஷார்!

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தற்போது உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாளொன்றுக்கு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் நமது நாட்டில் 10,158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் எல்லோரும் அச்சப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 98.72 சதவிகிதமாகவும், உயிரிழப்பு 1.19 விகிதமாகவும் உள்ளதால் நமக்கு ஆறுதலாக உள்ளது. நாட்டில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் ஆபத்து குறைவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

கொரோனா அரக்கன் மீண்டும் வருகிறது! மக்களே உஷார்!

அதிகமாக பொது இடங்களுக்கு செல்லக் கூடியவர்கள், விமானம், ரயில், பேருந்து பயணங்களை மேற்கொள்ளக் கூடியவர்கள் மிகந்த கவனத்துடன், முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

கொரோனாவிற்கு நிறைய தடுப்பு மருந்துகளை கண்டுப்பிடித்து விட்டார்கள். மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவற்றை பயன்படுத்தி கொள்ளுங்கள். அதே வேளையில் நமது பாரம்பரியம் மிகுந்த முன்னோர்கள் சொன்ன சில ஆலோசனைகளையும் தருகிறோம். தேவை ஏற்பட்டால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கொரோனா அரக்கன் மீண்டும் வருகிறது! மக்களே உஷார்!

ஆலோசனை: வேப்பம் தழை ஒரு கையளவு, கீழாநெல்லி தழை ஒரு கையளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்பளர் அளவு நீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நீரை நன்கு சூடு ஆரியப் பின்னர் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது நன்கு வாய் கொப்பளித்து விட்டு செல்லுங்கள். அதேபோன்று வீட்டிற்குள் திரும்ப வந்தப் பின்னர் வாய் கொப்பளித்து விட்டு வீட்டிற்குள் செல்லுங்கள். இந்த சுடுநீர் அனைத்து விதமான கிரிமிகளையும் அழிக்கக் கூடியது என்று நமது முன்னோர் கூறியுள்ளனர்.

என்.கே.மூர்த்தி

MUST READ