spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஇனி வீட்டை விட்டே வரமாட்டேன்! விஜய்க்கு பட்டை நாமம் அடித்த வேலூர் மீட்டிங்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

இனி வீட்டை விட்டே வரமாட்டேன்! விஜய்க்கு பட்டை நாமம் அடித்த வேலூர் மீட்டிங்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

-

- Advertisement -

விஜய் தனக்கு அரசியல் தெரியவில்லை என்றால், அரசியல் தெரியவில்லை என்று சொல்ல வேண்டும். அதை விடுத்து தனக்கு அரசியல் தெரியாவிட்டால், மக்களுக்கும் அரசியல் தெரியவில்லை என்று ஜாய்ண்ட் அடிக்கக்கூடாது என மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

விஜய் வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- வேலூர் கூட்டத்தில் பேசிய விஜய், திடீரென உணர்ச்சி வசப்பட்டு அழுவது போன்று மாறினார். எப்படி இன்ஸ்டால்மெண்ட்டில் வருகிறது என்று தெரியவில்லை. எதார்த்தமாக அதை பார்க்கிறபோது தொண்டர்களுடன் அவர் உணர்வுப்பூர்வமாக தொடர்புகொள்ள முயற்சிக்கிறார். விஜய், பெரியார், அண்ணா, காமராஜர் போன்றவர்களை தன்னுடைய வழிகாட்டியாக கூறுகிறார். ஆனால் அவர்கள் இதுபோன்று எந்த இடத்திலும் டிராமா போட்டது கிடையாது. மக்கள் பிரச்சினைகளை பேசுவார்கள்,மக்களுடன் இருப்பார்கள். எனவே விஜய் இதனை தவிர்த்து இருக்கலாம்.

விஜயின் பிரச்சாரத்தை தொலைக்காட்சிகளில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. எனவே தொலைக்காட்சிகள் பார்வைகளை அதிகரிக்க கண் கலங்கினார் என தலைப்பு போடுகிறார்கள். கரூர் விவகாரத்தில் தன் மீது பழிபோடுகிறார்கள் என்று விஜய் சொல்கிறார். உங்கள் மீது எப்.ஐ.ஆரிலோ, குற்றப்பத்திரிகையிலோ இதுவரை பெயர் போடவில்லை. தர்க்க ரீதியாக பதில் சொல்லுங்கள். எமோஷனலாக வேறு பதில் சொல்லாமல் சட்டப்படியோ, தர்க்கப்படியோ பதில் சொல்லுங்கள்.

தமிழ்நாடு காவல்துறை இந்த சம்பவத்திற்கு விஜய் தான் காரணம். அவரை கைது செய்ய வேண்டும் என்று எங்காவது சொல்லியுள்ளனரா? இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ சந்தேக பார்வையில் கைதோ, வழக்குப்பதிவோ செய்யவில்லை. பழிபோட்டார்கள் பழிபோட்டார்கள் என்று விஜய் சொல்கிறார். ஆனால் துரும்பு கூட விஜய் மீது படவில்லை என்பதை தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.  முதல்வர் ஸ்டாலின் பயந்துகொண்டு விஜய் மீது எப்ஐஆர் போடாதது சட்டப்படி தவறு, சட்டத்தில் அவருக்கு சலுகை வழஙகப்பட்டிருக்கிறது என்று சொல்லி வருகிறேன்.

தற்போது அந்த சந்தேகத்தை விஜய் தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக திருப்புகிறார். என் மீது பழிபோட்டால், அது மக்கள் மீது போட்ட பழி. விஜய்க்கு அரசியல் தெரியவில்லை என்றால், அது மக்களுக்கும் அரசியல் தெரியவில்லை என்று அர்த்தம் என்று விஜய் சொல்கிறார். உங்களுக்கு அரசியல் தெரியவில்லை என்றால், உங்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு போக வேண்டும். பொதுமக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்லக்கூடாது.

ஓரணியில் தமிழ்நாடு! புதிய திட்டம் – முதல்வர் அறிவிப்பு…

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல் இது என்று புதிதாக ஒரு வார்த்தையை சொல்கிறார். உங்களுடைய பேச்சை எத்தனை ஆயிரம் பேர் வேண்டுமானாலும் பார்க்கட்டும். தமிழக மக்களுக்கு அரசியல் தெரியாது என்று உங்களோடு சேர்த்து சொல்கிறீர்கள். யார் உங்களுக்கு அந்த உரிமையை உங்களுக்கு கொடுத்தது? எவ்வளவு பெரிய தலைவர்களை மக்கள் தோற்கடித்துள்ளனர் என்பது விஜய்க்கு தெரியுமா? திமுக – அதிமுக என இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி உள்ளது. அவர்கள் இருவருக்கும் மக்கள் மீது பயம் உள்ளது.

ஆனால் மக்கள் மீது பயம் இல்லாமல் மக்களையே சந்திக்காமல், 10 நாட்களுக்கு ஒருமுறை விஜய் அரசியல் செய்கிறார். தனக்கு அரசியல் தெரியாவிட்டால், மக்களுக்கும் அரசியல் தெரியாது என்று இவர் பொதுமக்களோடு ஜாய்ண்ட் அடிக்கிறார். எங்களுக்கு பிடிக்காவிட்டால் திமுக, அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பி விடுவோம். பாஜக என்கிற கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் 15 ஆண்டுகளாக கரடியாக சுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் தெளிவு இருப்பதால் தான் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பதில்லை.

விஜய் சி.எம். ஆன உடன் ஒவ்வொரு கிராமமாக வந்து மக்களை சந்திப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். ஏன் தற்போது கிராமங்களுக்கு போக மாட்டீர்களா? ஒருவேளை ஆட்சிக்கு வராவிட்டால் அப்படியே டாடா காண்பித்துவிட்டு போய் விடுவீர்கள். முதலில் தேர்தலில் நிற்கும் போது மரியாதையை, மாண்பை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தான் வாக்கு வேண்டும். மக்களை சந்தித்து வாக்கு கேட்க கூட முடியாத நீங்கள் எதற்காக அரசியலுக்கு வருகிறீர்கள். உங்களுக்கு தேவைப்படும் போதே மக்களை சந்திக்கப் போகவில்லை.

ஆட்சிக்கு வந்த பிறகு மட்டும் போவார் என்று என்ன நிச்சயம்? தற்போது வரும் தேர்தல் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தல் என்கிறார். ஏன் இடையில் அண்ணா, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் வரவில்லையா? 50 வருஷம்  ஆகிறது என்று தெரிந்த பிறகு ஈரோடு இடைத்தேர்தலில் விசில் அடித்துக் கொண்டிருந்தீர்களா? விஜய் மின்கட்டணத்தை பற்றி பேசியது சரியான விஷயம். ஊழல் பற்றி விஜய் இன்னும் பேச வேண்டும். ஆனால் அமலாக்கத்துறை பற்றி பேசமால் அமைதி காத்துவிட்டு போய்விட்டார்.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதை விஜய் கடுமையாக விர்சித்துள்ளார். இதை காட்சியோடு ஒப்பிட்டு சொல்வதென்றால் விஜய் கையில் வேல் கொடுத்தார்கள். வாள் கொடுத்தார்கள். கூட ஒரு நாமக்கட்டியில் பட்டை நாமம் போட்டுவிட்டனர். விஜயுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்பது தான் உண்மை. அதனால் கோபமான விஜய், என்கூட யாரும் வராவிட்டால் கள்ளாப்பெட்டி கூட்டணி என்று சொல்லி விட்டார். கள்ளாப்பெட்டி கூட்டணி ரொம்ப நாளாக தமிழ்நாட்டில் இருக்கிறது. உங்களுக்குதான் அது தெரியவில்லை.

ஏன் யாரும் உங்களுடன் கூட்டணிக்கு வரவில்லை என்று செல்கிறார்கள். நீங்கள் தான் கொள்ளையடிக்க வில்லையே? உங்களை நம்பி ஏன் யாரும் கூட்டணி வைக்க வில்லை. ஏன் மற்ற கட்சிகள் பற்றி எதுவும் விஜய் பேசவில்லை. மறுபுறம் ஊழல் கட்சியான அதிமுகவிடம் சிலர் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குறித்து பேசி இருக்கலாம் அல்லவா? ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே பிரச்சினை உள்ளது. அது குறித்து பேசினால் வாக்கு கிடைத்து இருக்கும். திருச்சியில் சீமான் மாநாடு போட்டார். அங்கே யாரும் தாவவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ