spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகண்ணீர் விட்டு கதறல்! தப்பா பேசி சிக்கிய விஜய்! வெளுத்துவிட்ட இந்திரகுமார்!

கண்ணீர் விட்டு கதறல்! தப்பா பேசி சிக்கிய விஜய்! வெளுத்துவிட்ட இந்திரகுமார்!

-

- Advertisement -

கரூர் விவகாரத்தில் தன் மீது குற்றம்சாட்டுவதாக கூறும் விஜய், பாதிக்கப்பட்ட மக்களின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரியது ஏன்? என்று பத்திரிகையாளர் இந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

we-r-hiring

விஜய் வேலூர் பிரச்சார கூட்டம் தொடர்பாக பத்திரிகையாளர் இந்திரகுமார் தேரடி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- வேலூரில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய விஜய், ஜல்லிக்கட்டு காளையை சிறுவன் ஒருவன் புல்லுக்கட்டை காண்பித்து அடக்குவதாக கதை கூறியுள்ளார். ஜல்லிக்கட்டை தேர்தலுடனும், தன்னை சிறுவனாகவும் ஒப்பிட்டு அவர் பேசியுள்ளார். எப்படி இந்த கதை லாஜிக் இல்லாமல் இருக்கிறதோ, அதேபோல் விஜயுடைய பேச்சும் மொத்தமாக லாஜிக் இல்லாமல் அமைந்திருக்கிறது. முதலில் அவர் சென்டிமெண்ட் என்று அழுக முயற்சி செய்கிறார். எப்படி சினிமாவில் விஜய்க்கு அழுகை வராதோ, அதேபோன்று மேடையிலும் அவருக்கு அழுகை வரவில்லை. கரூர் விவகாத்தில் தன் மீது பழியை போட்டார்கள் என்று விஜய் சொல்கிறார். ஆனால் ஸ்டாலின் அளவுக்கு விஜயை வேறு யாரும் காப்பாற்ற முயற்சி செய்திருக்க மாட்டார்கள்.

விஜயை பழிவாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால், அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து உள்ளே வைத்திருக்க முடியாதா? ஒரு அரசியல் நிகழ்வில் விபரீதம் நடந்துவிட்டது. எல்லோருக்கும் இதில் இருந்து மீண்டு வர இன்னும் காலமாகும். இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பொறுப்பான தலைவராக முதலமைச்சர் பேசினார். ஆனால் விஜய் வழக்கம் போல் யார் காப்பாற்றினாரகள், யார் எதிர்த்தார்கள் என்று தெரியாமல் வாய் சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய பேச்சின் தொடக்கத்தில் விஜய், முதலமைச்சர் தமிழ்நாடு வெர்சஸ் டெல்லி என்று சொல்வதாகவும், நீங்கள் டெல்லியிலா தேர்தலில் நிற்க போகிறீர்கள்? என்று கேட்கிறார். தமிழ்நாடு வெர்சஸ் டெல்லி என்றால் டெல்லியில் போய் தேர்தலில் நிற்க வேண்டும் என்கிற அளவுக்கு அரசியல் அறிவு வழிகிறது. அறிவு உள்ள யாராவது இப்படி பேசுவார்களா? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கும் டெல்லிக்கும் தொடர்பே கிடையாதா? திமுக தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் போர் என்று சொல்கிறபோது, அவர் நேரேஷனை மாற்றுகிறார்.

தமிழ்நாடு என்பது நான் தான். தமிழ்நாட்டிற்கும் திமுகவுக்கும் நடக்கும் போர் என்று சொல்கிறார். அது அவர் வாயால் சொல்வது. ஆனால் நிஜத்தில் நான் தான் டெல்லி. நான் தான் என்டிஏ. நான்தான் பாஜக என்கிறார். அதன் காரணமாக தான் அவர் பாஜக குறித்து பேசவில்லை. எடப்பாடி குறித்து பேசவில்லை. எதைப்பற்றியும் பேசாமல் நேரடியாக அவர்கள் இடத்தில் தன்னை வைத்து பேசுவதற்கு காரணம் தமிழ்நாடு என்றால் ஸ்டாலின். ஸ்டாலினுக்கு எதிராக இருப்பது டெல்லி என்றால்? அந்த டெல்லி நான்தான் என்று டிக்ளேர் செய்கிறார்.

உண்மைக்கு புறம்பான தகவல்கள் – அமித் ஷா பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…

விசில் சின்னத்திற்கு நேராக பஜக்.. பஜக்… என்று குத்துங்கள் என்று விஜய் சொல்கிறார். அது பஜக்… பஜக்… அல்ல. பாஜக, பாஜக என்று தான் அர்த்தம். கலெக்டர், எஸ்.பிக்களில் 50 சதவீதம் இடஒதுக்கீடு என்று சொல்கிறார். தவெக ஆட்சிக்கு வந்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிப்பது யுபிஎஸ்சி. அப்போது 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால் நாம் டெல்லியோடு தான் போராட வேண்டும். தனக்கு எதிராக எது செய்தாலும், மக்களுக்கு எதிராக செய்வதாக தான் அர்த்தம் என்று விஜய் சொல்கிறார். இப்படியே அவர் கற்பனையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கட்டும். மக்கள் அவருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலே வரவில்லை என்கிறார். சினிமாவை போன்றே தன்னை ஒரு ஹீரோவாக விஜய் நினைத்துக் கொண்டிருக்கிறார். சர்கார் படத்தில் வருவது போல இவர் ஒரு கேள்வி கேட்டால் எல்லோரும் ஓட்டை மாற்றி போட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறார். சி.எம். ஆன பிறகு கிராமம் கிராமமாக வருவேன் என்கிறார். அப்போது அவர் கிராமத்திற்கு வருவதற்காக சி.எம் ஆக்க வேண்டும் என்கிறாரா?

கரூர் விவகாரம் - டெல்லி சென்றடைந்தாா் தவெக தலைவர் விஜய்

கரூர் விவகாரத்தில் தன் மீது பழியைப் போடுவதாக விஜய் சொல்கிறார். பிறகு எதற்காக பாதிக்கப்பட்டவர்களின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார்? துக்கம் விசாரிப்பவர்களுக்கு காலில் விழ வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தப்பு செய்யாதவர் எதற்காக காலில் விழ வேண்டும். அந்த மக்களை அணி திரட்டி, சட்டமன்றத்திற்கு பேரணியாக அழைத்துச்சென்று நீதி கேட்டிருக்க வேண்டாமா? அவர் மீது தப்பு இல்லாவிட்டால் அந்த ஊர்மக்களையாவது திரட்டி போராட்டம் நடத்தியிருக்க  வேண்டும் அல்லவா? தவறு இருக்கவும் தானே வீட்டிற்குள் போய் பதுங்கி கொண்டார்?

சிசிடிவி காட்சிகளை சிபிஐ வசம் கொடுத்தாரா? சிபிஐ விசாரணைக்கு போய் பதில் சொல்லிவிட்டு வந்தார். அவர்கள் மீது ஏன் பழி சொல்லவில்லை? காரணம் அவருக்கு சிபிஐ கொடுத்து இருக்கும் டாஸ்க் என்டிஏ குறித்து பேசக்கூடாது என்பதுதான். அவர் ஒவ்வொரு முறை டெல்லி போய்விட்டு வருகிறபோதும், என்டிஏ என்கிற வார்த்தை படிப்படியாக குறையும் தற்போது சுத்தமாக இல்லாமல் போய்விட்டது.

தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் - பிரேமலதா

அறிவாலயத்தில் நிழலுக்கு ஒதுங்குபவர்களை எல்லாம் கூட்டணியில் சேர்த்து விடுகிறார்கள் என்று தேமுதிகவை விஜய் சாடியுள்ளார். இதற்கு பிரேமலதா பதில் சொல்வார். ஆனால் ரோட்டில் நிழலுக்கு நின்று கொண்டிருந்தவர்களை எல்லாம் அழைத்துச்சென்று பதவி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.  திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என்று குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில் தவெகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு ரூ.5 கோடி வாங்கியுள்ளனர். தேர்தலில் நிற்க ரூ.10 கோடி வாங்குகிறார்கள். இதற்கு விஜய் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருபக்கம் அரசு மக்கள் நலுனுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான கேள்விகளை வைப்பதற்கு பதிலாக தற்குறித்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார் விஜய். அதுதான் அவர் பேசுவது எதுவும் தெளிவு இல்லாமல் இருக்கிறது. சினிமா நடிகர்களுக்கு சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் என்ன சட்டம் போடுகிறார்கள் என்றும் தெரியாது. நலத்திட்டங்களுக்கும், சட்டங்களுக்குமே வித்தியாசம் தெரியாது. இவற்றை தெரிந்துகொண்ட பிறகு அவர் பேசட்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ