spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகரூர் மக்களுக்கு அவமரியாதை! விஜய் செய்த கேவலமான செயல்! மூத்த பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

கரூர் மக்களுக்கு அவமரியாதை! விஜய் செய்த கேவலமான செயல்! மூத்த பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

-

- Advertisement -

விஜய், கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு காரணமே ஜனநாயகன் வெற்றிகரமாக போக வேண்டும் என்பது தான் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மூத்த பத்திரிகையாளர் நாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூரில் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக விஜய், மாமல்லபுரத்துக்கு அழைத்து வந்துள்ளார். கிடைக்கும் தகவல்களின் படி மாமல்லபுரம் ரெசார்ட்டில் ஒரு ஷுட் ரூமில் நேர்காணல் எடுப்பது போன்று அமர்ந்திருக்கும் விஜய், ஒவ்வொரு குடும்பத்தையும் சந்திக்க 15 நிமிடங்கள் வரை ஒதுக்கியுள்ளார். அப்போது, மனது முழுக்க வலியாக உள்ளது. என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்பது போல பேச திட்டமிட்டிருக்கிறார்கள். இப்படியான முன்னுதாரணத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது. அரசியல் தலைவர்கள், பிரபலங்களாக இருந்தபோதும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று தான் ஆறுதல் சொல்வார்கள். தவிர, இப்படி பேருந்தில் அழைத்து வந்து ரெசார்ட்டில் தங்கவைப்பதற்கு எவ்வளவு ஆணவம், திமிரு இருக்கும்.

கரூருக்கு நேரில் சென்றால் குறுகலான இடம். கூட்டம் கூடிவிடும். விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சமாளிக்கிறார்கள். விஜயின் முதல் மாநாடு முதல் கரூர் அவரை விஜய் கூட்டியது இயற்கையாக திரண்ட கூட்டம் கிடையாது. பக்கத்து மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் வைத்து பிரச்சாரத்திற்கு ஆட்களை அழைத்து வந்தனர். இவர்கள் கூட்டத்தை திட்டமிட்டு வரவழைக்கிறார்கள் என்பது தான் உண்மையாகும். அப்படி இருக்கும்போது இவர் கரூரில் சந்து பொந்துகளில் சென்று மக்களை சந்தித்தால் குடிமூழ்கி போய்விடாது.

அதையும் ஒரு காரணமாக சொல்வது என்றால்? ஜான் ஆரோக்கியசாமி சொல்வது போல விஜய் ஒரு கல்ட் ஃபிகர். அதை டைலூட் செய்யக்கூடாது. விஜயை மறைத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது வெளியே வரவைக்க வேண்டும். அவரை பொதுவெளியில் அதிகம் காண்பித்தாலோ, பேச வைத்தாலோ, அந்த கல்ட் மதிப்பிழந்து போய்விடும் என்பது தான். விஜய் இயல்பாகவே ஒரு மனிதாபிமானியோ, இறக்க சுபாவம் உள்ளவரோ கிடையாது. விஜய் ஒரு தேர்ந்த நடிகர். பணத்திற்காகவும், பிரபலத்துக்காகவும், புகழுக்காகவும் தான் நடிக்கிறார். இன்றைக்கு அவை எல்லாற்றையும் முதலீடு செய்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது தான் அவருடைய ஒரே கனவு. அந்த முதலமைச்சர் கனவுக்கு எத்தனை பேர் இறந்தாலோ, தாலி அறுத்தாலோ அவருக்கு என்ன?

கரூர் செல்கிறபோது விஜயை யாரும் கேள்வி எழுப்பிவிட்டால், அவரால் பதில் அளிக்க முடியாது. கரூரில் இருந்து மக்களை பேருந்து மூலம் அழைத்துச்சென்று, அவர்களுக்கு வழியில் சாப்பாடு ஏற்பாடு செய்து அனைத்து செலவுகளையும் விஜய் நிர்வாகிகளே ஏற்றுக்கொள்வதாக செய்திகள் வெளியாகின்றன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை விஜயின் சுற்றுச்சூழலுக்கு கொண்டுசென்றால், அவர்கள் விஜயை கேள்வி எழுப்ப மாட்டார்கள் என்பதுதான். எதிர்ப்பு குரல் வந்துவிடும் என்பதால்தான் விஜய் கரூருக்கு செல்லவில்லை.

மாமல்லபுரம் சந்திப்புக்கு முன்னதாக பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சம் போடப்பட்டு விட்டது. அப்போது அந்த மக்கள் மனநிலை எப்படி இருக்கும்? அவர்கள் விஜயை பார்த்து என்ன பேசுவார்கள்? பணம் கொடுத்தவரின் மனம் நோகாமல் இருக்கும்படியாகவே அவர்கள் பேசுவார்கள். மாறாக ஏன் கரூர் பிரச்சாரத்தில் போதிய வசதிகளை ஏற்படுத்தவில்லை என்று அவர்கள் கேட்க மாட்டார்கள். அப்படி கேட்காமல் இருக்க காசு கொடுத்த பிறகே அவர்களை கூட்டி வந்துள்ளனர்.

இந்த மாமல்லபுரம் சந்திப்பு என்பது மக்களுடைய பரிதாப நிலையை தான் காட்டுகிறதே தவிர, விஜயின் வள்ளல் குணத்தையோ, இறக்க மனப்பான்மையையோ காட்டவில்லை. இந்த நிகழ்வுக்கு வருவதற்கு கட்சியினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. காரணம் விஜய் சந்திப்பின்போது அந்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டு, விஜயிடம் பேசிவிட்டால் அது வெளியாகி பேசுபொருளாகும். ஏற்கனவே மையநீரோட்ட ஊடகங்கள் விஜயை குறித்த ஒரு பிம்பத்தை கூட்டுவதற்கான வேலையை தான் செய்கிறார்கள்.

அண்மை காலமாக விஜய் மீது அவருடைய ரசிகர்கள் அதிகளவில் விமர்சனங்களை முன்வைக்க தொடங்கியுள்ளனர். ரீல் ஹீரோவான விஜய், ரியல் ஹீரோவாக செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.  ஒரு மாதம் ஆகியும் அவர் எதுவும் செய்யவில்லை என்றதும், அவர்களுடைய ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். விஜயின் சினிமா பிம்பம் எதார்த்த வாழ்க்கையில் வெளிப்படவில்லை என்பதால்,  அதை விஜய் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விஜயினுடைய அரசியல் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஸ்கிரிப்ட்டட் ஆன ஆக்சன். அந்த ஸ்கிரிப்ட் இல்லாவிட்டால் அவரால் களமாடவே முடியாது.

விஜய் ஏன் கரூருக்கு செல்லவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி இருப்பதால் விஜய் ரசிகர்கள், சமூக வலைதளங்களில விஜய் மீது விமர்சனத்தை முன்வைக்க தொடங்கியுள்ளனர். ஜனநாயகன் படத்தை அமேசான் ஓடிடி தளம் வாங்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி தனது திரைப்படம் வெளியாகும் முன்பாக அரசியல் கலந்து கருத்துக்களை திட்டமிட்டு பேசி படத்திற்கு புரமோஷன் செய்வார். விஜயும் அதேபோல் திட்டமிட்டு தான் செய்து வந்தார். ஆனால், கரூரில்  எதிர்பாராத விதமாக துயர சம்பவம் நடந்துவிட்டது. இதில் இருந்து அவரால் மீண்டு வர முடியவில்லை.

சர்ச்சைகளுக்கு மத்தியில் அந்த விஷயத்திற்கு தயாரான 'ஜனநாயகன்' படம்!

கரூருக்கு முன்பு இருந்த பிரச்சார தந்திரங்கள் எல்லாம் ஜனநாயகன் ஓடுவதற்கு சாதகமாக இருந்தன. கரூர் சம்பவத்திற்கு பிறகு அவர் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விட்டார். எனவே ஜனநாயகன் படத்திற்கான புரமோஷன் பயங்கரமாக அடி வாங்கிவிடும். விஜய் கரூர் மக்களை சந்திப்பதற்கு காரணமே ஜனநாயகன் வெற்றிகரமாக போக வேண்டும் என்பது தான். அதற்காக தான் அவசர அவசரமாக வங்கிக் கணக்குகளை வாங்கி,  20 லட்சம் பணத்தை அனுப்பினார்கள். மாமல்லபுரம் சந்திப்பால் பாசிட்டிவ் ஆன ரிசல்ட் வந்தால் ஓடிடி தளங்கள், ஜனநாயகன் படத்தை வாங்குவதில் பிரச்சினை இருக்காது என்று விஜய் தரப்பில் நம்புகிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ