spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசெருப்பு வீசியது யார் தெரியுமா? ஆம்புலன்ஸ் ரகசியம் சொல்லவா? ஆர்.கே.உடைக்கும் உண்மைகள்!

செருப்பு வீசியது யார் தெரியுமா? ஆம்புலன்ஸ் ரகசியம் சொல்லவா? ஆர்.கே.உடைக்கும் உண்மைகள்!

-

- Advertisement -

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் பாஜகவின் ஒட்டுமொத்த சூழலும் ஒருங்கிணைந்து வேலை பார்க்கிறது. இதை எப்படியாவது பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூரில் விஜய் பிரச்சாத்தின்போது கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்திருப்பதை ஒரு படுகொலையாகவே நான் பார்க்கிறேன். நிச்சயமாக இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டனை கொடுக்க வேண்டும். கரூர் கூட்டநெரிசலுக்கு போலீசாரின் மெத்தனப் போக்கு ஒரு காரணமாக சொல்கிறார்கள். ஒரு வாதத்திற்கு அதை உண்மை என்று வைத்துக் கொள்வோம். அதேவேளையில் ஒரு அரசியல் கட்சி தனக்கு வாக்கு அளிக்கக்கூடிய நபர்களை அங்கு நிற்கவைத்து உணவு, குடிநீர் இல்லாமல் செய்வதில் என்ன ஒரு ஆனந்தம் என்று புரியவில்லை. விஜய் குறித்த நேரத்திற்கு அங்கு வந்து பேசிவிட்டு சென்றால் அவர்களை யாரும் விமர்சிக்கப் போவது கிடையாது. அதேவேளையில் தொண்டர்களை 7 மணி நேரம் காக்க வைக்கும்போது அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்றவை வேண்டாமா? பிரச்சார கூட்டங்களில் உணவு, குடிநீர் வசதி அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தவெக கூட்டத்தில் அப்படி செய்யப்படவில்லை.

முக்கியமாக கூட்டத்தை கட்டுப்படுத்துவது கட்சியினுடைய பொறுப்பு தானே தவிர, காவல்துறையின் பொறுப்பு அல்ல. விஜயின் பிரச்சார கூட்டங்களில் அவர் காவல்துறையினருக்கு எதிராக தான் பேசி வருகிறார். கரூர் கூட்டத்தின்போது நகர டிஎஸ்பி என்று கோரிக்கை வைக்கிறார். வாக்குவாதங்கள் நடைபெறுகிறது. உதவி ஆய்வாளர்  போய் பேசுகிறார். அங்கேயும் வாக்கு வாதங்கள் நடைபெறுகிறது. யாரும் அங்கிருந்து நகரவில்லை என்பதுதான் முக்கியமாகும். காவல்துறை எடுத்து சொல்லியும் யாரும் கேட்கவில்லை. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் சொல்வது போல 20 நபர்களுக்கு ஒரு காவலர்கள் பணியில் போடப்பட்டிருக்கிறார்கள். அந்த கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு இதற்கு மேல் பாதுகாப்பு தர முடியாது. அரசியல் கட்சிகள் தான் இதனை பார்க்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதை மற்ற அனைத்துக்கட்சிகளும் செய்யும். விஜய் கட்சி மட்டும்தான் செய்யாது. அதற்கு அடாவடித்தனம் தான் காரணம். கரூர் கூட்டநெரிசலில் இறந்தவர்கள், கரூர், திருப்பூர் உள்பட 4 மாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர். அப்போது விஜய் தனக்காக வந்த கூட்டம் என்று சொல்வதில் உண்மை இல்லை.

முன்னர் விஜய்க்கு தன்னெழுச்சியாக பெரிய அளவில் மக்கள் கூட்டம் வருவதாக நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படி வந்திருந்தாலும் கட்சியினரை வைத்து எதோ ஒரு பகுதியில் இருந்துதான் ஆட்களை அழைத்து வந்துள்ளார்கள். ஏடிஜிபி டேவிட்சன், விஜயை 50 மீட்டர் தொலைவுக்கு முன்பாக நிற்க சொன்னபோதும் அவர் நிற்க வில்லை. நேரடியாக மக்கள் கூட்டத்தை நோக்கியே சென்றார். காரணம் தான் பேசுகிற சத்தம் அவர்களுக்கு கேட்காது என்று அடிப்படையில் சென்றதாக சொல்கிறார். மூன்றாவது கரூர் வேலுச்சாமிபுரத்தில் 20 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை நகர்த்த முடியவில்லை என்று ஏடிஜிபி சொல்கிறார். காரணம் தொண்டர்கள் அதனை கடுமையாக சோதனை செய்தனர். தொண்டர்கள் செய்கிற வேலையா இது? இது எடப்பாடி பழனிசாமி செய்த அராஜகமாகும். விஜய் கூட்டத்தில் ஆம்புலன்ஸ்களை செல்லவிட்டிருந்தால் சில உயிர்கள் தப்பி இருக்கலாம். இதற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம்.

விஜய் கூட்டத்தில் வேண்டும் என்றே திட்டமிட்டு செருப்பு வீசப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இவை எல்லாம் தவெகவிடம் இருந்துதான் வருகிறது. கரூரில் பிரச்சார கூட்டத்தில் இருந்து ஓடிச்சென்ற விஜய், கரூரில் மக்களை சந்திக்க அனுமதி கோரியதாகவும் அவர்கள் வழங்காததால் அவர் புறப்பட்டு சென்றதாகவும் கசிய விடுகிறார்கள். இதைவிட ஒரு பெரிய ஏமாற்று வேலை கிடையாது. அவர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை வருகிறார். சென்னையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தன்னுடைய நீலாங்கரை வீட்டிற்கு 12 மணிக்கு சென்றடைந்தார். அதற்கு பிறகு இன்றைக்கு தான் அவர் வெளியே வருகிறார். ஆனால் தவெக பிரமுகர்கள், விஜய் மக்களை சந்திக்க காத்திருந்ததாகவும் ஆனால் அனுமதி தரப்படவில்லை என்றும் சொல்கிறார்கள். சமூக வலைதளங்களில் ஐஸ்டாண்ட் வித் விஜய் என்று டிரெண்ட் செய்கிறார்கள். அண்ணாமலை எந்த அடிப்படையில் பாஜக சார்பில் பேசிக் கொண்டிருக்கிறார்? அண்ணாமலை காசுக்காக பேசுகிற நபர். அவரை வைத்து தற்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விவகாரம் எதை நோக்கி நகர்கிறது என்பது எடப்பாடி பழனிசாமியின் செய்தியாளர் சந்திப்பின் மூலம் வெளிப்படுகிறது. அவர் முழுக்க முழுக்க அரசாங்கத்தை தான் குற்றம்சாட்டுகிறார். தவெகவையோ, விஜயையோ அவர் எதையும் சொல்லவில்லை. விஜய் தற்போது பதற்றத்தில் இருக்கிறார். அதை நாம் எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். அதன் மூலம் தனக்கு ஒரு அரசியல் வாழ்க்கை வரும் என்கிற இடத்தில் இருந்து அவர் யோசிக்கிறார். அதில் ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த கேப்பில் டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்களை காலி செய்துவிட்டு, விஜயை கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும். அப்படி செய்துவிட்டால் தேர்தலே முடிந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமியின் செய்தியாளர் சந்திப்பு மற்றும் அதை தொடர்ந்து அதிமுகவினர் அளிக்கும் பேட்டிகளில் முழுக்க முழுக்க அரசாங்கத்தை தான் குற்றம் சாட்டுகின்றனர். தவெகவில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்கள் இருந்தால், கரூரிலேயே நின்று, தவறு நடந்துவிட்டது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என சொல்லிவிட்டு பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கலாம். ஆனால் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட யாரையும் தொடர்பு கொள்ளவே முடியவே இல்லை.

m

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் இறந்துவிட்டார்கள் என்பதை தாண்டி இதில் வருகிற அரசியலை நாம் பார்க்க வேண்டும்.  பிரதமர் மோடி 7.30 மணிக்கு எல்லாம் இரங்கல் தெரிவிக்கிறார். தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக மழை வெள்ளம் ஏற்பட்டு எத்தனையோ பேர் இறந்துள்ளனர். அப்போதெல்லாம் எந்த நிதியும் வழங்காத பிரதமர் தற்போது 2 லட்சம் நிதியுதவி அறிவிக்கிறார். குடியரசுத் தலைவர், ராஜ்நாத் சிங், அமித்ஷா என எல்லோரும் உடனடியாக இரங்கல் தெரிவிக்கின்றனர். முதல்வரிடம் அறிக்கை கேட்கிறார்கள். பாஜகவின் ஒட்டுமொத்த சூழலும் ஒருங்கிணைந்து வேலை பார்க்கிறபோது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கிறார்கள். தேசிய ஊடகங்கள் அனைத்தும் இதைதான் கவர் செய்தன. கோடி மீடியாக்கள் கடந்த 2 நாட்களாக இதை விவாதமாக்கி கொண்டிருக்கிறார்கள். பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது. மற்றொன்று தமிழர்கள் நடிகர்கள் என்றால் இப்படிதான் போய் விழுவார்கள் என்கிற எண்ணமும் இருக்கிறது. அதை நாம் மறந்துவிடவும் முடியாது. கடந்துசெல்லவும் முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ