Homeசெய்திகள்கட்டுரைசீமானை பின்னால் இருந்து இயக்கும் இந்துத்துவ சக்திகள்! புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு!

சீமானை பின்னால் இருந்து இயக்கும் இந்துத்துவ சக்திகள்! புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும், இலங்கையில் காலூன்ற தமிழர்களை பயன்படுத்தும் திட்டத்திற்கும் சீமானை வைத்து திட்டமிட்டுள்ளனர் என விடுதலைப் புலிகள் அமைப்பின் ஐ.நாவுக்கான முன்னாள் பிரதிநிதி சுவிட்சர்லாந்தை சேர்ந்த கிருஷ்ணா அம்பலவாணர் குற்றம்சாட்டியுள்ளார்.

சீமானுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் என்று பேசுவது குறித்து விளக்கம் அளித்து, கிருஷ்ணா அம்பலவாணர் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழீழ விடுதலைப் போராட்டத்தை விடுதலைப்புலிகள் ஆரம்பித்த 1979ஆம் ஆண்டில் இருந்து 2009 வரை கொரில்லா ராணுவமாகவும், பின்னர் மரபு வழி ராணுவமாகவும், அடுத்து மக்கள் அமைப்பாகவும், இறுதியில் ஒரு அரசாகவும் வந்து அந்த போராட்டம் வலிமை பெற்றது. அது தமிழ் தேசிய இனங்களுக்கான அடையாள அரசாக நிறுவப்பட்டு, 2009 மே 17ஆம் தேதி அந்த போராட்டம் மவுனிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைமைத்துவம் உள்பட அதில் அங்கம் வகித்த கணிசமானவர்கள் போராட்டத்தோடே மவுனிக்கப்பட்டு விட்டனர்.

2009க்கு பின்னர் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று உரையாடுவதற்கு அதிகாரப்பூர்வமாக யாரும் நியமிக்கப்படவில்லை. 2009ல் புலிகள் தலைமை வீரமரணம் அடைந்த உடன்,  அதற்கு பின்னர் மீள் எழுச்சி பல்வேறு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்டபோதும், அது வெற்றி பெறவில்லை. நான் விடுதலைப்புலிகளுக்காக பணியாற்றியவர் என்றபோதும், இப்போது அவர்களுக்காக பேசும் தகுதி எனக்கு கிடையாது. 2009க்கு பிறகு இலங்கை தமிழர்களின் நம்பிக்கைக்கு உரியவன் நான் என்கிற முறையில், சீமானை ஏற்றுக்கொண்டவர்கள், அவரை ஆதரிக்கிறவர்கள் எல்லாம் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக எடுத்துக்கொள்ள முடியாது.

சீமானை, ஆதரித்து பேசுபவர்களின் உண்மைத்தன்மையை குறித்து தான் கேள்விகள் எழுகிறது. பிரபாகரன் சொல்லியது, அவர் தலைமையில் நாங்கள் கற்றுக்கொண்டது எமது விடுதலையை நாங்கள் தான் வென்றெடுக்க வேண்டும். எங்கள் விடுதலை எமது மண்ணில் இருந்துதான் உருவாக வேண்டும். எங்களது தலைமை தாயகத்தில் இருந்து உருவாக வேண்டும் என்பதுதான் எதார்த்தம். பெரியாரிய இயக்கங்கள் எப்படி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தார்களோ, அது போல சீமானும் ஆதரவாக இருந்தால் பரவாஇல்லை. ஆனால் சீமானால் இலங்கை தமிழர்களுக்கான தலைவராக இருக்க முடியாது. அவரால் எங்களுக்கான விடுதலையை பெற்றுத்தர முடியாது. அவர் கட்டமைக்கும் உரையாடல் உணர்ச்சிவசப்பட்ட பேச்சரங்கத்திற்கு சரியாக இருக்க முடியுமே தவிர, போர்க்களத்திற்குள் இருந்து வந்த சமுதாயத்திற்கு அது பொருந்தாது.

புலம்பெயர்ந்த ஒரு சில இலங்கை தமிழர்களை தவிர, பெரும்பாலானோர் சீமானால் இலங்கைக்கு விடுதலை பெற்றுத்தர முடியாது என்பதில் தெளிவாக உள்ளனர். ஏனென்றால் பிராந்திய அரசியல் நிலைப்பாடு, சீமான் தமிழ்நாட்டிற்குரிய அரசியல் தலைவர். அவர் இந்திய அரசியல் அமைப்புக்கு கட்டுப்பட்டு, ஒரு மாநில அரசுக்கு உள்ள உரிமைகள் அடிப்படையில், முதலமைச்சராக உள்ளவர்கள் கொடுத்தது போன்றுதான் அவரும் வழங்க முடியும். ஆனால் சீமான், இலங்கை தமிழர்களின் மீட்பர் என்றோ, அவர்தான் பிரபாகரனின் மறுவடிவமோ என்று சொல்வது நகைப்புரியதாகும். அவரால் இலங்கை தமிழர் விடுதலைக்கு எந்த பயனும் இல்லை.

இன்று சீமானுக்கு ஆதரவாக புலிகளின் பிரதிநிதிகள் என்று இன்று பேசுபவர்களின் வாதத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அது விசுவாசத்தின் அடிப்படையிலும், அவரது பேச்சால் கவர்ந்த சில எண்ணங்களினால் அது உருவாகலாம் என நினைக்கிறேன். 2009 இறுதிப் போர் முடிந்த பிறகு எங்களை காப்பாற்ற ஒருவர் வர மாட்டாரா? என்று காத்திருந்தபோது, எங்களுக்காக பேசக்கூடியவராக சீமான் இருப்பார் என்று நினைத்தோம். வெளிநாட்டு அரங்குகளில் வந்து சீமான் பேசியது அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. அவர் எங்கள் ரட்சகராக இருப்பார் என்று உணர்ச்சிவசமாக நம்பப்படுகிறதே ஒழிய, சித்தாந்த ரீதியாக பார்த்தோம் என்றால் சீமான் அரசியல் புரிதல் அற்ற, பிராந்திய அரசியல் கோட்பாடுகள் அற்ற, அவரை பிரிதொரு சக்தி இயக்குகிறது. அந்த இயக்கும் சக்திக்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக்கொண்டு அரசியல் செய்கின்ற தலைவராக தான் சீமான் இருக்கிறார்.

பிஜேபியின் தேர்தல் வியூகம் - தகர்த்தெரியும் மக்கள்!

சீமானை யார் இயக்குவது என்பது, இலங்கை – இந்தியா உறவு தொடர்பானது. சீனா இலங்கை முழுவதும் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ள நிலையில், இந்தியா ஏதோ ஓரு வகையில இலங்கை தமிழர்கள் ஊடாக அதிகாரத்தை செலுத்துக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதுதான் எங்களுடைய புரிதல். ஜெயவர்த்தன ஆட்சியின்போது, அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்ததால், இந்திரா காந்தி அரசு போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவு அளித்தார். அதுபோல இப்போதும் ஒரு  சூழல் உருவாகுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. அப்படி ஒரு சூழல் உருவாகினால் புலம்பெயர் தேசங்களில் உள்ள போராளிகளை தமக்கு சார்பாக பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டால், அவர்களுக்கான தொடபாளராக சீமான் தமிழ்நாட்டில் களத்தை ஏற்படுத்துகிறார்.

இதற்காக தமிழ்நாட்டில் இருக்கிற பெரியார் மண் என்ற தளத்தில் நிமிர்ந்து நிற்கிற தமிழகத்தை உடைத்தல், பாசிச சக்தியால் முடியவில்லை. தமிழ் தேசியம் பேசும் சீமான் போன்றோர்கள், இந்தியா எங்களின் ரட்சகராக இருந்து மீட்டுத்தருவார்கள் என்றும் இலங்கை தமிழர்களும் ஓரு புள்ளியில் இணைந்தால் எதிர்காலத்தில் அப்படி ஒரு சூழல் வந்தால் வியப்பு இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ