spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகும் தலைவா்கள்...

தமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகும் தலைவா்கள்…

-

- Advertisement -

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பாஜகவின் கூலிப்படையாக மாறி தமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகி வருகின்றனர்.தமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகும் தலைவா்கள்கனிம வளக்கொள்ளையர் சேகர் ரெட்டிக்கு எதிராக கடந்த 2016-ல் அமலாக்கத் துறையினா் நடத்திய ரெய்டு மூலம் எடப்பாடி பழனிச்சாமி–ஓ.பன்னீர் செல்வம் தரப்பை பாஜக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. அதே போன்று நடிகர் விஜய்யையும் 2015 மற்றும் 2020-ல் நடத்திய ரெய்டு வழியாக சொத்து பட்டியலை கணக்கெடுத்து பாஜக சொல்வதை கேட்கவேண்டும் என்று சிக்க வைத்தது. அந்த இரு ரெய்டுகளையும் நடத்திய முக்கிய அதிகாரியாக இருந்தவர் அருண்ராஜ். அவர் தான் தற்போது விஜய் தொடங்கியுள்ள த.வெ.க.வில் கொள்கை பரப்பு செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார். நடிகர் விஜய்யின் கட்சி பாஜகவின் செல்லப்பிள்ளை என்பதில் யாருக்கும் சந்தேகம் எழவேண்டாம்.

தி.மு.கவுக்கு எதிராக கொம்பு சுத்த தொடங்கும் ராமதாஸ்வன்னியர் மக்களுக்காக இட ஒதுக்கீட்டை கேட்டு, தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தி, கலைஞர் மூலமாக இட ஒதுக்கீடும் பெற்றவர் டாக்டர்.ராமதாஸ். அரசியலில் முற்போக்காளர் போர்வையை போர்த்திக் கொண்டு தி.மு.க, வி.சி.க போன்ற கட்சிகளுடன் இணக்கம் காட்டி இடதுசாரி அரசியல்வாதியாக வாழ்வை தொடங்கியவர் டாக்டர் ராமதாஸ். இன்று அன்புமணி மீது உள்ள வழக்கை காட்டி அடிபணிய வைத்து, குருமூர்த்தி மூலம் பா.ம.கவைக் கட்டுப்பாட்டில் பாஜக எடுத்துக் கொண்டதால் தற்போது ராமதாசும் தி.மு.கவுக்கு எதிராக கொம்பு சுத்த தொடங்கியிருக்கிறார்.

we-r-hiring

பல ஆண்டுகளாக ஈழப் போராட்டத்திற்கு உறுதியுடன் குரல் கொடுத்த தி.மு.கவை பா.ஜ.கவின் ஆதரவுடன் இயங்கி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது தி.மு.கவுக்கு எதிராக களமாடி வருகிறார். இரட்டை இலை, அந்நிய செலாவணி வழக்குகளை மூடி மறைக்க, தினகரன் குடும்பத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட பா.ஜ.க, தாழ்த்தப்பட்டோர் குரலாக வெளிக்காட்டிக் கொள்ளும் ஜான் பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமி தரப்பையும் காலாட்படையாக பாஜக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

தி.மு.கவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாதுதமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகும் தலைவா்கள்தி.மு.கவுக்கு எதிராக “அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், தவெக தலைவர் விஜய், அவருடைய கட்சியில் இணைந்திருக்கும் அருண்ராஜ், டாக்டர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி, சீமான், சசிகலா, தினகரன், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி” என பா.ஜ.கவின் கைக்கூலிகள் எத்தனை பேர் புறப்பட்டு வந்தாலும், அவர்களது ஒரே குறிக்கோள் தமிழர்களின் நலனை பாதுகாப்பது தானா? இல்லை, இல்லவே இல்லை! மாறாக, தி.மு.கவின் ஆட்சியையே மட்டுமல்ல, அரசியல் தளத்திலிருந்தும் தி.மு.கவை அகற்றுவதே அவர்களது குறிக்கோள். வேறு எந்த நோக்கமும் இல்லை.

இதுபோன்ற பல அரசியல் சூழலை, பல கட்டத்தை தி.மு.க பார்த்து விட்டது, இனியும்  பார்க்கும், பார்க்கவும் தயார்! ஆனால், கலைஞர் சொன்னது போல, தி.மு.கவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

மக்களை யாரால் வெல்ல முடியும்?

“அண்ணாமலை, எடப்பாடி, பன்னீர்செல்வம், விஜய், அருண்ராஜ், ராமதாஸ், அன்புமணி, சீமான், சசிகலா, தினகரன், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி” போன்றோருக்கு தி.மு.கவை வெல்ல முடியாத ஆற்றாமை, போதாமை மற்றும் அமைதியின்மை தான் இருக்கிறது. அவர்களுக்கு அந்த இயலாமை கடைசி வரை இருக்கவே செய்யும். காரணம் மக்களை யாரால் வெல்ல முடியும்? அவர்கள் என்றுமே தி.மு.கவின் பக்கம் தான்! ஆட்சிக்கு வந்தாலும் வராவிட்டாலும் தி.மு.கவும் என்றுமே மக்கள் பக்கம் தான்.தமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகும் தலைவா்கள்கிரிக்கெட்டை போன்று 11 வீரர்களையும் ஒரு மாற்று வீரரையும் பா.ஜ.க. களமிறக்கும் நிலையில், அதனை ஒரே வீரராக ஒரே தலைவராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீழ்த்துவார் என்பது உறுதி.

2026 களம் நமக்கானது! வெல்வோம்!

தமிழ் மொழியின் தொன்மையை அங்கீகரிக்க அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தேவை –  கஜேந்திர சிங் ஷெகாவத்

MUST READ