spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகூட்டணிக்கு அதிக சீட்? ஸ்டாலின் ரூட் கிளியர்! குட்டையை குழப்பிய எடப்பாடி!

கூட்டணிக்கு அதிக சீட்? ஸ்டாலின் ரூட் கிளியர்! குட்டையை குழப்பிய எடப்பாடி!

-

- Advertisement -

திமுக எதிர்ப்பு வாக்குகள் முழுமையாக கிடைக்காதது, மெகா கூட்டணி அமைக்க முடியாதது, அதிமுகவில் ஒற்றுமை இல்லாதது என அதிமுகவுக்கு பல்வேறு பாதகமான விஷயங்கள் உள்ளன. அப்போது எடப்பாடி சுற்றுப்பயணம் செல்வதால் என்ன பயன் ஏற்படப்போகிறது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

priyan
priyan

திமுக கூட்டணியில் சிபிஎம், விசிக போன்ற கட்சிகள் கூடுதல் இடம் கேட்பதன் அரசியல் குறித்தும், எடப்பாடி பழனிசாமியின் இந்துத்துவா நிலைப்பாடு குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாஜகவை அதிமுக கழற்றிவிடும் என்கிற எண்ணம் பொதுவாக உள்ளது. ஆனால் பாஜக அந்த அளவுக்கு அனுமதிக்குமா? என்பது தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்களை பார்க்கிறபோது கிட்டத்தட்ட இந்துத்துவா அஜெண்டாவை அவர் கைகளில் எடுத்துவிட்டார். ஒரு புறம் தவெக தலைவர் விஜய், நான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லி கூட்டணி கதவுகளை மூடிவிட்டார்.

we-r-hiring

4 முனை போட்டியால் திமுகவுக்கு சாதகம், நாம் ஒன்று சேர்ந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று அதிமுக, பாஜவிடம் இருந்து விலகி விஜயுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அரசியலில் நெருக்கடிகள் தான் முடிவுகளை தீர்மானிக்கும். எடப்பாடி பழனிசாமி சொல்வது போன்று திமுகவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களுக்கும் பிரச்சினை உள்ளது. திமுகவுக்கும், விசிகவுக்கும் பிரச்சினைகள் உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்கிற ஆசை வந்துள்ளது. அது நியாயமான ஆசைதான்.

அதேவேளையில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஒரு கட்சி, தனித்து தனிப் பெரும்பான்மை பெறுகிறபோதும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தர வேண்டுமா? அல்லது அந்த கட்சி தனிப் பெருமான்மை பெறா விட்டால் ஆட்சியில் பங்கு தர வேண்டுமா? என்கிற கேள்வியும் உள்ளது. அப்போது, தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட்டணி அரசாங்கம் அமைக்க வேண்டும் என்கிற மனநிலையில் தான் அவர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் கூட்டணி ஆட்சி என்று சொல்லி பிரச்சாரம் செய்தால், தமிழ்நாட்டு மக்கள் வாக்களிப்பார்களா? என்பது சந்தேகம்தான். அதற்கு காரணம் கூட்டணி ஆட்சி என்றாலே குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி போட்டியிடும்போதே 150- 160 இடங்களில் போட்டியிட்டால், அவர்கள் தனிப் பெரும்பான்மையை குறிவைத்துதான் வேலை செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். அதற்கு தகுந்தாற் போல் கூட்டணிகட்சிகளுக்கு இடங்களை பங்கிட்டுத் தர வேண்டும். கூட்டணி கட்சிகள் கூடுதல் இடங்களை வாங்குவதில் வெற்றி பெற்று, தலைமை தாங்கும் கட்சி குறைவான இடங்களில் போட்டியிட்டால் அது தனிப் பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து, இயல்பாகவே கூட்டணி அரசை நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

’’இது ஜேசிபி ஆட்சியா?’’- திமுக நிர்வாகிக்காக திமுக அரசை எதிர்த்து விசிக போராட்டம்
mk stalin thiruma

தொகுதி பங்கீடு என்பது மிகவும் முக்கியமானதாகும். கூட்டணி கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்கிறபோது, திமுக அதை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பது முக்கியமான கேள்வியாகும். அதிகமான இடங்களை கேட்பதன் மூலம் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி போட்டியிடுகிற இடங்களை குறைத்து, அவர்களை கூட்டணி ஆட்சியை நோக்கி தள்ளவேண்டும் என்பதுதான் நோக்கமாகும். ஸ்டாலின், மூன்று தேர்தல்களில் இந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு விட்டார். கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரப்பசி வந்துவிட்டது. அது நியாயமானதாகவே இருந்தாலும், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?. தற்போதைய சூழலில் 4 முனை போட்டி நிலவும் நிலையில், திமுகவின் வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளது. இந்த சூழல் மாறாத வரை அவர்கள் திமுக அணியில் தொடருவார்கள். வெற்றி என்பது உறுதி என்பதால் கூட்டணியில் அடித்துப்பிடித்து கூடுதல் இடங்களை வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்து சமய அறநிலையத்துறைக்கான நிதியில் ஏன் கல்லூரி தொடங்குகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். தற்போது நான் அப்படி சொல்லவில்லை என்று சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கிறார். உயர் கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்கிற விவரங்கள் ஆண்டுதோறும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. உங்களின் கேள்விகளை அங்கே கேட்கே வேண்டியது தானே? இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கல்லூரி தொடங்கியபோது கேள்வி கேட்காத எடப்பாடி பழனிசாமி, தற்போது தேர்தல் நேரத்தல் கேள்வி எழுப்புவது ஏன்? 2021ல் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கல்லூரி தொடங்கியபோது? அவர் கேள்வி எழுப்பாதது ஏன்? ஏனென்றால் உங்களால் அப்படி சொல்ல முடியாது.

உங்கள் கட்சியின் தலைவரான எம்.ஜி.ஆரே கல்லூரி தொடங்கியுள்ளார். நீங்களே ஒரு கட்டிடத்தை தொடங்கியுள்ளீர்களே. பிறகு எப்படி சொல்வீர்கள்? இன்றைக்கு உங்களுக்கு மைனாரிட்டி வாக்குகள் கிடைக்காது என்பதால் இந்துத்துவா வாக்குளை கன்சாலிடேட் செய்வதற்காக இந்து இயக்கங்களின் அஜெண்டாவை கையில் எடுத்துள்ளீர்கள். இதுபோன்ற கேள்வி எழுப்புவதன் மூலம் அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்கிற இந்துத்துவ அமைப்புகளின் கருத்துக்கு ஆதரவளிக்கிறீர்கள். அதனால் தான் ஸ்டாலின் கோட்ஷே கூட்டத்திற்கு பின்னால் செல்லாதீர்கள் என்று சொன்னார். எம்ஜிஆர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கடுமையாக எதிர்த்தவர். அதை எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும்.

"அ.தி.மு.க.வை முந்துகிறதா பா.ஜ.க.?"- டுபாக்கூர் கருத்து கணிப்புகள்!

ஜெயலலிதா தொடக்கத்தில் மதச்சார்பற்ற தன்மையுடன் தான் இருந்தார். 1998ல் பாஜக உடன் கூட்டணி அமைத்தபோது தான் அவர் இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். அதன் தொடர்ச்சியாக மத மாற்ற தடைச்சட்டம், ஆடு – கோழி தடைச்சட்டம் போன்றவற்றை கொண்டுவந்தார். 2004 தேர்தலில் தோல்வி அடைந்த உடன்தான் அவர் மாறினார். அதன் பிறகு மென்மையான இந்துத்துவா போக்கை கடைபிடித்ததால் தான் அந்த வாக்குகளை வாங்கினார். அதனால் தான் பாஜக தமிழ்நாட்டில் வளர முடியாமல் போனது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வாக்குகள் பாஜகவுக்கு மாறிவிட்டது. தற்போது பாஜகவின் கைகளில் 7 சதவீதம் வரை வாக்குகள் வரை உள்ளன.

இந்நிலையில், எடப்பாடி மற்றொரு விஷயத்தையும் பேசியுள்ளார். ஒரு ஊரில் பள்ளிகள் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் கோயில் இல்லாமல் இருக்கக்கூடாது. மக்களுக்கு பக்தி மிகவும் முக்கியம் என்று சொல்கிறார். கல்வி என்பது எவ்வளவு முக்கியம், ஏழைக்கு கல்வி கொடுப்பது என்பது எவ்வளவு முக்கியம். அறநிலைத்துறை கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் படிக்கிறார்கள் என்பது முக்கியம். அதுபோன்ற வாய்ப்புகளை கோயிலின் உபரிநிதியில் கொடுக்கிறார்கள் என்பது முக்கியம். அவற்றை எல்லாம் புரிந்துகொள்ளாமல் இதுபோன்ற ஒரு அஜெண்டாவை கையில் எடுப்பது, அவர் இந்துத்துவா கடலில் குதித்துவிட்டார் என்றுதான் அர்த்தமாகும். இது அதிமுகவுக்கு நல்லது கிடையாது.

ஓபிஎஸ்சுடன் இணைவதை தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்?டிடிவி தினகரன் பதில்

திமுகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். முதலில் அவர் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும். மக்கள் பார்வையில் முதலில் அதிமுக ஒன்றிணைந்தால்தான் மக்கள் அதை நம்புவார்கள். அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள். தினகரன், சசிகலா, ஒபிஎஸ் போன்றவர்களை தனிப்பட்ட நபர்கள் என்று நினைக்காதீர்கள். அதிமுக பலவீனமாக உள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் டெல்டாவில்  41 இடங்களில் 4 இடங்கள் தான் வாங்கியுள்ளீர்கள். தென் மாவட்டங்களில் 58 இடங்களில் 16 இடங்கள் தான் வாங்கியுள்ளீர்கள். மத்திய – வட மாவட்டங்களில் 77 இடங்களில் 11 இடங்கள் தான் வாங்கி இருக்கிறீர்கள். மேலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரிய வெற்றியை ஒன்றும் பெறவில்லை.

கோவை உள்ளிட்ட கொங்குமண்டலத்தில் மட்டும்தான் 35 இடங்கள் வாங்கியிருக்கிறீர்கள். அதுதான் உங்களை சட்டமன்றத் தேர்தலில் காப்பாற்றியது. இன்றைக்கு தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் பாஜக கூட்டணியில் உள்ளனர். நாளைக்கு அதிமுகவினர் தேர்தலில் போட்டியிடுகிறபோது தினகரன், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எந்த அளவுக்கு தேர்தல் வேலை பார்ப்பார்கள். ஒருவருக்கு ஒருவர் காலை வாரத்தான் பார்ப்பார்கள்.

பாஜக என்ன தான் நடுநிலையாக இருந்து சமரசம் செய்தாலும் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் பலம் பெறக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். இது கூட்டணிக்கு பாதகமாக தான் முடியும். தொண்டர்கள் அதிமுக விஜயுடன் கூட்டணிக்கு போகும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் நீங்கள் பாஜக உடன் கூட்டணி போய்விட்டீர்கள். அதுவே தொண்டர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகும். விஜய் கூட்டணிக்கான கதவுகளை மூடிவிட்டார். இந்த முறை திமுக எதிர்ப்பு வாக்குகள் முழுமையாக கிடைக்காது. விஜய்க்கு சிறிதளவு வாக்குகள் செல்லும். எதிர்ப்பு வாக்குகளும் வராது. மெகா கூட்டணியும் அமைக்க முடியவில்லை. உங்கள் கட்சியும் ஒற்றுமையாக இல்லை. பாஜக தமிழநாட்டிற்கு செய்கிற துரோகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறது.  நீங்களும் பாஜகவின் கொள்கைகளை எடுத்து பேசுகிறீர்கள். இவை எல்லாமே உங்களுக்கு பாதகமாக உள்ளன. அப்போது நீங்கள் சுற்றுப்பயணம் சென்று என்ன பயன் உள்ளது? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ