spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஒரே ஒரு கர்சீப் வீடியோ! சம்பவம் செய்த ஸ்டாலின்! கடுப்பில் கதறிய எடப்பாடி!

ஒரே ஒரு கர்சீப் வீடியோ! சம்பவம் செய்த ஸ்டாலின்! கடுப்பில் கதறிய எடப்பாடி!

-

- Advertisement -

அரசு காரில் சென்று அமித்ஷாவை சந்தித்ததாக சொல்லும் எடப்பாடி பழனிசாமி, நான்கு கார்களில் மாறி மாறி சென்றது ஏன் என்று திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

we-r-hiring

அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்த முதலமைச்சரின் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவரது விமர்சனங்களுக்கு பதில் அளித்து திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திமுக முப்பெரும் விழாவில் பேசுகிறபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் குறித்து கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தான் கைக்குட்டையால் முகத்தை துடைத்ததாகவும், அதனை முகத்தை மூடிக்கொண்டு செல்வதாக ஸ்டாலின் விமர்சிப்பதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மட்டும் எடப்பாடியை விமர்சிக்கவில்லை.

அதற்கு முன்பாக எடப்பாடியுன் கூடவே இருந்த டிடிவி தினகரன் முகமூடியார் என பட்டம் வழங்கியுள்ளார். அவரிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்ப வேண்டியது தானே. தினகரன் சொன்ன 14 மணி நேரம் கழித்துதான் முதலமைச்சர் பேசினார். இதில் என்ன தவறு உள்ளது. அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவித்தீர்களா? உங்களை தான் பத்திரிகைகள் அன்றைக்கே கிழித்துவிட்டனவே. தான் அரசு காரில் சென்றுதான் அமித்ஷாவை சந்தித்ததாக சொல்கிறார். அப்படி அரசு கார் எனில் ஏன் 4 கார்களில் மாறி மாறி சென்றார்?

டெல்லி செல்வதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தட்பவெப்பம் காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி சுற்றுப்பயணத்தை ஒத்தி வைப்பதாகவும், தான் எங்கேயும் செல்லவில்லை என்றும் சொன்னார். பிறகு ஏன் மறுநாள் டெல்லிக்கு சென்றார். அப்போது எடப்பாடி ஒரு அரசியல் அந்நியன் போன்று உள்ளார். பாஜக தான் எங்கள் ஆட்சியை காப்பாற்றியதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். இதை நாங்கள் சொன்னபோது சண்டைக்கு வந்தார். பாஜக இவர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன உள்ளது? அப்போது அந்த 4.5 ஆண்டுகளாக பாஜகவின் அடிமையாக இருந்ததை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்களா?

அவரை அவரே அவமதிப்பு செய்துகொண்டு, என்னை ஸ்டாலின் அவமதிப்பு செய்துவிட்டார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொண்டு வந்த ஸ்டாலினுக்கு தன்னை பார்த்து சொல்ல என்ன தகுதி உள்ளது என்று கேட்கிறார் எடப்பாடி. அப்போது சட்டமன்றத்தில் ஜெயலலிதா சீலையை கிழித்துக்கொண்டு வந்தாரே. சட்டமன்றம் செத்துவிட்டது என்று சட்டை பட்டனை களைத்துவிட்டு வந்தாரே எம்ஜிஆர். அப்போது நீங்கள் பைத்தியங்களின் வாரிசு என்று சொல்வோமா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி போய்விட்டு வந்தார். யாராவது அவரை பார்த்து கேள்வி எழுப்பினார்களா? நீங்கள் நேர்மையாக உள்துறை அமைச்சரை சந்திக்கப் போகிறேன் என்று சொன்னால் என்ன தவறு. மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைக்க வேண்டும் என்றால், அமித்ஷா தமிழ்நாடு வரும்போதே வலியுறுத்தி இருக்கலாமே. பாஜகவுக்கு நன்றியுடன் இருப்பதாக சொல்கிறார். அப்போது இடையில் 2024ல் நன்றி விசுவாசம் இல்லாமல் போனது ஏன்? திமுக துறை வாரியாக அளித்த வாக்குறுதிகள். அதில் நிறைவேற்றியதை எத்தனை?

எடப்பாடி பழனிசாமி  கேட்டதால்தான், திமுக  நிறைவேற்றாததாத வாக்குறுதிகள் எத்தனை என்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி.செழியன் ஆகியோர் சொன்னார்கள். மொத்தம் 449 வாக்குறுதிகளில் 64 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்போது திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டுவது அரசியலுக்காக தான். தமிழ்நாட்டில் 3.5 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடப்படும் நிலையில் கிட்டத்தட்ட 2.25 லட்சம் கோடிக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்படுகிறது. அதிமுக அரசைப் போல இதில் பெரிய அளவு ஊழல் நடைபெற்றுள்ளதா?

இன்றைக்கு நாடு முழுவதும் இணையதள மோசடிகள் மூலம் ரூ.17,000 கோடி பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் குற்றவாளிகள் யாருக்காவது மத்திய அரசு தண்டனை வாங்கி தந்துள்ளதா? 2014ஆம் ஆண்டு வரை நம்முடைய விவாதங்கள் கல்வி சார்ந்தும், பொருளாதாரம் சார்ந்தும், வியாபாரம் சார்ந்தும் இருந்தன. தற்போது பாலியல் வழக்கு, சைபர் கிரைம் வழக்கு, ஓட்டு திருட்டு என்று அருவருப்பான ஒரு இந்தியாவாக மாற்றிவிட்டார்கள். அதைதான் ராகுல்காந்தி சொல்கிறார், இவர்கள் வாக்குகளை திருடுவாதே இந்தியாவை திருடுவதற்காக தான். அவர்களை கேட்டால் நாட்டின் முதல் தேச துரோகி ராகுல்காந்தி என்று சொல்வார்கள். ஏனென்றால் அவர் தேசத்தை காப்பாற்ற போராடுகிறார்.

இன்றைக்கு ராகுல்காந்தி போட்டியிருப்பது உண்மையில் ஹைட்ரஜன் பாம்தான். இநத வெடிப்பு நிற்காது. எனக்கு தெரிந்து இலங்கை, வங்கதேசம், நேபாளம் என வரிசையாக வந்துகொண்டிருக்கிறது. வர வேண்டிய இடம் இனிமேல் இந்தியா மட்டும்தான். தமிழ்நாட்டிற்கு ஒரு பண்பாடு, கலாச்சாரம் இருக்கும். ஆனால் பாஜக ட்ரெயின் பண்ணி வைத்திருக்கும் வடநாட்டில்  அந்த கோஷ்டி அவர்கள் நினைப்பது போல நிற்காது. மக்கள் போட்ட வாக்குகளை எல்லாம் மோடி திருடிவிட்டார் என்று தெரிந்தால் மக்கள் கிளம்புவார்கள். எனக்கு என்னவோ நாட்கள் தூரம் இல்லை என்று தான் தோன்றுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ