spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்! அழியபோகும் அதிமுக, பாஜக! காரணம் இதுதான்?

திமுக கூட்டணியில் ஓபிஎஸ்! அழியபோகும் அதிமுக, பாஜக! காரணம் இதுதான்?

-

- Advertisement -

தன்னையும், தன்னுடைய அரசியல் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஓபிஎஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ஓபிஎஸ் மற்றும் பிரேமலதா ஆகியோர் நேரில் சந்தித்து பேசியதன் அரசியல் கணக்குகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- வரலாற்றிலேயே இல்லாத வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்துள்ளார் ஓபிஎஸ். இந்த சந்திப்பானது தமிழக அரசியலில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. மகாராஷ்ட்டிராவில் சிவசேனாவை பாஜக உடைத்ததை அடுத்து, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தனித்தனியாக செயல்பட்ட ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் ஒன்றிணைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் பாஜகவை விரட்டுவதற்காக காங்கிஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா என மூன்று கட்சிகளும் ஒன்றாக சேர்ந்துள்ளன. மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செய்த மோசடிகள் காரணமாக பாஜக வெற்றி பெற்றது. அதேபோல், மத்தியிலும் 150 சீட்டுகள் வர வேண்டிய பாஜக, 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று மைனாரிட்டி ஆட்சி அமைப்பதற்கு, தேர்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

நான் சமீபத்தில் ஊடக நேர்காணல் ஒன்றில் பாஜகவை விரட்ட திமுக, அதிமுக தனித்தனியாக பாடுபடும். அவசியம் ஏற்பட்டால் இருவரும் ஒன்றாக சேர்ந்து பாஜகவை விரட்டிவிடுவார்கள் என்று சொல்லியிருந்தேன்.  அது தற்போது நிகழப்போகிறது. பாஜகவின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட ஓபிஎஸ், மிகவும் இறங்கிப் போய் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரி கடிதம் அனுப்பினார். தங்கள் மண்ணுக்கு வருகிற பிரதமரை சந்திக்க ஒரு வாய்ப்பு வேண்டும் என்றும், அதை தான் பெருமையாக கருதுவதாகவும்  தெரிவித்திருந்தார். எனினும் பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்க்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ஓபிஎஸ் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்துவிடலாம் என்பது போல நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார். வீட்டிற்கு சென்றாலோ, அறிவாலயம் சென்றாலோ தவறாகிவிடும் என்பதால் நடைபயிற்சி செல்லும்போது எதார்த்தமாக சந்திப்பது போல சந்தித்து, முதலமைச்சரிடம் நலம் விசாரித்தார். அதற்கு பிறகு மக்களிடம் இருந்து, அதிமுக தொண்டர்களிடம் இருந்து என்ன எதிர்வினை வருகிறது என்பதை பார்த்துவிட்டு, திமுக உடனேயே கூட்டணி போடலாம் என்று எண்ணுகிறார்.

ஓபிஎஸ் எந்த அடிப்படையில் திமுக உடன் கை கோர்க்க பார்க்கிறார் என்றால், அதிமுகவை அழித்துவிட்டு பாஜக வளரப் பார்க்கிறது. நம்முடைய வாக்கு வங்கியை பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட்டு, நம்மை அடியோடு அழிக்கப் பார்க்கிறார்கள். மிகவும் கொடூரமான இவர்கள் அதிமுகவை அழித்து விடுவார்கள். எனவே திமுகவுடன் கூட்டணி வைத்து அவர்களை விரட்டி விட்டு, அதற்கு பிறகு திமுகவுக்கு எதிரான முடிவை எடுப்போம் என்று ஓபிஎஸ் போகிறார். அதேவேளையில் எடப்பாடி பழனிசாமி,  அதிமுகவில் நாம் பொறுப்பில் இருக்கிறோம் என்பதால், இதை எப்படியாவது கட்டிக் காப்பாற்றி ஓட்டிவிட வேண்டும். பாஜகவை கடைசி நேரத்தில் கழட்டி விட்டுவிடலாம் என்று நினைக்கிறார். ஒட்டுமொத்தமாக பாஜவை அடித்து விரட்ட வேண்டும் என்றுதான் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சொல்கின்றன.

குறிப்பாக ஓபிஎஸ் எந்த முடிவுக்கு வந்துவிட்டார் என்றால்? பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்து, அவர்களுக்கு வேலைப்பார்த்து அழிந்துபோக வேண்டாம். நாம் இவ்வளவு தூரம் இறங்கி போகியும் நம்மை மதிக்கவில்லை. தென் மாவட்டங்களில் நம்முடைய வாக்கு வங்கியை நிருபித்துள்ளோம். அதுபோது அதிமுகவில் நமக்கென்று கணிசமான அளவு ஆதரவாளர்கள் இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று வாக்கு சதவீதத்தை நிரூபித்துள்ளார். மேலும், ஓபிஎஸ்ன் ஆதரவால் தேனி தொகுதியில் தினகரன் வாக்குகளை பெற்றார். தற்போது வழக்கை காரணம் காட்டி தினகரனை மிரட்டி வைத்துள்ளனர். அதனால் அவரால் பாஜக கூட்டணியைவிட்டு வர முடியாது. சசிகலாவை, செயல்பட முடியாத வகையில் வீட்டுக்காவலில் தான் வைத்துள்ளனர்.

அவருடைய உத்தரவை பெற்றுக்கொண்டுதான் ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. எதிர்காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து கொள்ளலாம். இன்றைக்கு தாக்குபிடிக்க திமுகவில் சேருவது ஒன்றும் தவறு இல்லை என்ற முடிவை ஓபிஎஸ் எடுத்துள்ளார். இதனை தொடர்ந்துதான் நடைபயிற்சி செல்கிறபோது முதலமைச்சரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அதன் பின்னர் மாலையில் தனது மகன் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். ஓபிஎஸ்-ஐ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசல் வரை வந்து மரியாதையாக அழைத்துச்சென்றிருக்கிறார்.

மற்றொருபுறம் திமுகவை பரம எதிரியாக நினைத்துக்கொண்டிருந்த பிரேம லதா விஜயகாந்த், தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வந்து சந்தித்துள்ளார். தேமுதிகவிடம் தற்போது ஒன்றரை சதவீதம் வாக்குகள் தான் இருக்கிறது. கடந்தமுறை குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் திமுக நிறைய இடங்களில் வென்றுள்ளது. அதிமுக பல இடங்களில் தோல்வியை சந்தித்தது. அப்போது இரு கட்சிகளுக்குமே இந்த வாக்குகள் அவசியமானதாகும். பிரேம லதா, அதிமுகவில் தலைமை சரியில்லை. பாஜக உடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்துகொள்ளலாம். அவர்கள் பெரிய அளவில் பிரச்சினை தர மாட்டார்கள். அதனால் திமுகவில் கூட்டணி வைத்தால், 10 இடங்கள் வரை வாங்கலாம் என்று நினைக்கிறார்.

தேமுதிகவுக்கு 5 முதல் 8 இடங்கள் வரை தர திமுகவும் தயாராக உள்ளது. குறைந்தபட்சம் 5 இடங்களையாவது தேமுதிகவுக்கு தருவார்கள். அதில் 3ல் வெற்றி பெற்றால் கூட தேமுதிகவுக்கு புத்துயிர் கிடைக்கக் கூடிய சூழல் வரும்.  பிரேமலதாவுக்கு பிரச்சினை என்ன என்றால்? மாநிலங்களவை எம்.பி. சீட் தருவதாக எடப்பாடி பழனிசாமி, வாய்மொழியாக உறுதி அளித்திருந்தார். ஆனால் தேமுதிக ஒன்றுமில்லாமல் போனதாலும், விஜயகாந்த் மறைந்து விட்டதாலும் அடுத்த முறை பார்க்கலாம் என்று சொல்கிறார். அப்போது அவரை பழிவாங்குவதற்காக திமுக உடன் சேரும் திட்டத்தில் பிரேமலதா உள்ளார்.

அதேபோல் ஓபிஎஸ் திமுகவில் கூட்டணி சேர்ந்து 10 இடங்கள் வாங்கினால் கூட 5 இடங்களிலாவது வெற்றிபெற்று, கட்சியை உயிர்ப் பிடிப்புடன் வைத்திருப்பார். தன்னையும், தன்னுடைய அரசியல் வாழ்க்கையை காப்பாற்றி கொள்வதற்கும், தன் மகனுடைய எதிர்காலத்திற்காகவும் தான் அவர் முதலமைச்சரை நேரடியாக சந்தித்துள்ளார். எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயை பற்றி கூட்டணிக்கு முயற்சித்து பார்த்தார். ஆனால் அவர்கள் எதிர்வினை ஆற்றவில்லை. இந்நிலையில் ஓபிஎஸ் திமுக பக்கம் சாய்கிறார். அப்போது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்படலாம். அல்லது விஜயுடன் கூட்டணி சேர்ந்தால், அதிமுக – பாஜகவுக்கு செல்லும் வாக்குகள் பிரிந்து விஜய்க்கு விழும். விஜய் வாக்குகளை பிரிப்பதால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும். பாஜக அழிந்துவிடும். இதுதான் திமுகவின் கணக்காக உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ