spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசீமானின் “கள்” அரசியல்

சீமானின் “கள்” அரசியல்

-

- Advertisement -

சுமன்கவி

நவீன கல்விமுறையும், அதுசார்ந்த உற்பத்தி முறையும் வந்தபின்னர் பழைய வருணாசிரம அடுக்கு சிதையத் தொடங்குகிறது. அதைக் கண்டு பொறுக்காமல் அதற்கு எதிராக சனாதனக்கூட்டம் எடுத்த உடனடி ஆயுதம் தான் குலக்கல்வித் திட்டம். மாறுபட்ட கல்வித்திட்டம் என்று பள்ளிக் கல்வியில் தாய் தகப்பன் செய்கிற வேலைகளை குழந்தைகளை பகுதிநேரமாகச் செய்யவேண்டும் என்று 1953 இல் ராஜாஜி அறிமுகப்படுத்திய போதே இதை குலக்கல்வித் திட்டம் என்று சரியாக இனம்கண்டு அதற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தி தடுத்து நிறுத்தியவர் பெரியார்.சீமானின் “கள்” அரசியல் ஆனால் கடந்தகாலத்திற்கு நம்மை திருப்பி அழைத்துச் செல்கிற, குலத்தொழிலை ஊக்கு விக்கிற வேலையை சனாதனவாதிகள் இன்னும் கைவிடவில்லை. அதன் நவீன வடிவமாக, விஸ்வகர்மா யோஜனா என்கிற திட்டத்தைக் கொண்டுவந்து பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு தாய் தகப்பன் செய்த குலத்தொழிலைச் செய்வதற்கு செல்கிறவர்களுக்கு லட்சக்கணக்கில் கடன் உதவியும், பயிற்சிகளும் கொடுக்கிறது ஒன்றிய மோடி அரசு. ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தைப் போன்றே இதையும் குலத்தொழில் திட்டம் என்று சரியாக இனம் கண்ட திராவிட மாடல் அரசு இத்திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்து வருகிறது.

மக்கள் மத்தியில் இருக்கும் விழிப்புணர்வை மழுங்கடிக்க தங்களால் இயலவில்லை என்று உணர்ந்துகொண்ட சனாதனிகள், அந்த வேலையை தனது ஏவலானியான சீமானிடம் ஒப்படைத்திருக்கின்றனர். அவர்கள் காலால் இட்ட வேலையை தலையால் செய்துமுடிக்கும் இழிபிறவிதான் இந்த சீமான், ராஜாஜிக்கு ஒரு ம.பொ.சி. என்றால் குருமூர்த்திக்கு ஒரு சீமான். மக்கள் மத்தியில் பண்டைய குலத்தொழில்கள் மீது இருக்கும் மரியாதையின்மையைக் குறைத்து அதையே தங்கள் அடையாளமாகவும், பெருமையாகவும் கருதச் செய்கிற கொடிய செயலை பலகாலமாகச் செய்துவருகிறார் சீமான்.சீமானின் “கள்” அரசியல் நான் ஆட்சிக்கு வந்தால் உங்களை ஆடுமாடு மேய்க்க வைப்பேன். மாடுகளை CCTV கேமராவில் கண்காணிப்பேன். பால் பொருட்களை ஏற்றுமதி செய்வேன், என்று பல்வேறு மேடைகளில் வாய்ச்சவடால் விட்டு வந்த சீமான், சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கும் சதித்திட்டத்திற்கு வைத்த பெயர் தற்சார்பு பொருளாதாரம். ஆடு மாடு மேய்ப்பவர்களெல்லாம், தன் மக்களை டாக்டராகவும், எஞ்சினீயராகவும், பல்வேறு தொழில்துறைப் படிப்புகளையும் படிக்கவைத்து முன்னேற்ற முனையும் வேளையில், ஆடு மாடு மேய்ப்பதும், பழைய குலத் தொழில்களைச் செய்வதும் குற்றமில்லை என்று நயமாக எடுத்துச் சொல்லி வந்தார் சீமான்.

we-r-hiring

 

கடந்த பல பத்தாண்டுகளாகப் பல்வேறு கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி, கல்வியை எளிய மக்கள் படிப்பதற்கு ஏதுவாக உணவு. சீருடை, இலவசப் பேருந்து, என எல்லா வாதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை முன்னேற்றியது திராவிடம் என்றால், பார்ப்பன கைக்கூலி சீமானோ, படித்த இளைஞர்கள் மத்தியில் பழைய உற்பத்தி முறை சார்ந்த தொழில்களே சிறந்தது என்றும் அதைச் செய்வதே பெருமைக்குரிய செயல் என்றும் கூறிவந்தார்.

இது பெரிய அளவில் மக்கள் மத்தியில் எடுபடாமல் போனதால், இப்போதுதானே களத்தில் இறங்கி தனது குலத்தொழிலான பனையேறும் தொழிலைச் செய்து காட்டி இருக்கிறார். கள் போதை பானமல்ல, அது உணவு என்று கதையளக்கும் சீமான், அரசு விதித்த தடையையும் மீறி ஜூன் 15ஆம் தேதி பனைமரத்தில் ஏறி கள் இறக்கியிருக்கிறார். நான் எனது குலத்தொழிலான பனைமரம் ஏறி கள் இறக்கும் வேலையைச் செய்கிறேன். நீங்கள் உங்களுக்குச் சனாதனம் விதித்துள்ள தொழில்களைச் செய்வது ஒன்றும் குற்றமில்லை என்ற நயமான பிரச்சாரத்தை முன்னெடுத் திருக்கிறார்.

கள் இறக்குவதும், அதைக் குடிப்பதும் சிறந்த செயல் எனில், அந்தப் பணிகளை தனது மகன்களுக்கு சொல்லிக்கொடுப்பாரா இந்தச் சீமான் என்பதுதான் நமது கேள்வி. ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் கட்டி தன் மகன்களை பன்னாட்டுப் பள்ளியில் படிக்க வைக்கும் இந்தச் சதிகாரன், எளிய மக்களை ஏமாற்றுவதற்குப் போடும் வேடம் இது. ஒரு பேட்டியின்போது உங்களைப் போல் பேசுவதற்கு பல்வேறு புத்தகங்களைப் படிக்கிறாரா உங்கள் மகன் என்று கேட்டதற்கு, அவருக்கு பள்ளிப்புத்தகங்களைப் படிப்பதற்கே நேரம் போதவில்லை. இந்த வயதில் கல்விதான் முக்கியம் என்றும் கூறிய சீமான், யாரை தங்கள் குலத்தொழிலைச் செய்ய அழைக்கிறார்.

சீமானின் “கள்” அரசியல்

எந்த ஒரு சமூகமும் தான் கடந்த காலத்தில் செய்துகொண்டிருந்த அதே தொழில்களைச் செய்து முன்னேறியதாகச் சரித்திரமில்லை. பனையேறிய சமூகம் பனையை விட்டு வெளியே வந்து கல்வி கற்று வேறு நவீன தொழில்களுக்குச் சென்றதனால்தான் முன்னேற்றம் பெற்றிருக்கிறது. பறையை ஓரமாக வைத்துவிட்டு படித்ததனால்தான் பல்வேறு உயர்பதவிகளுக்கு வந்தனர் பறையரைவதைத் தொழிலாகக் கொண்ட சாதியினர்.

பானை செய்தவர்கள், செக்கில் எண்ணெய் ஆட்டியவர்கள், துணி துவைத்தவர்கள், சவரம் செய்தவர்கள் என எல்லா சமூகங்களும் தங்களுக்கு வருணா சிரமம் விதித்த தொழில்களை விட்டு வெளியில் வந்து நவீன கல்வியைக் கற்றதனால் தான், முன்னேறி உயர் இடங்களுக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர். இவ்வாறு முன்னேறிக் கொண்டிருப்பவர்களையெல்லாம் தடுத்து நிறுத்தி பின்னுக்கு இழுத்து கடந்த காலத்திற்கு இட்டுச்செல்லும் கொடுஞ் செயலைத்தான் இந்தச் சனாதனவருடி சீமான் செய்கிறார்.

நாம் இந்தக் கருத்துகளை முன்வைத்தால், சீமானும், அவரது ஆதரவாளர்களும் நம்மிடம் கேட்கும் கேள்வி, எல்லோரும் படித்து கணினியிலும், வேறு வேலைகளிலும் வந்து சேர்ந்து விட்டால், உனக்கு யார் சோறு போடுவது? நீ குடிக்கும் பால் எப்படி வரும்? என்பதுதான். இது சீமானின் கேள்வியோ அல்லது அவரது ஆதரவாளர்களின் கேள்வியோ அல்ல. அது பார்ப்பனியத்தின் கேள்வி. எல்லோரும் படித்து டாக்டராகிவிட்டால் அப்போது மாடு யார்தான் மேய்ப்பது என்று நேடியாகக் கேட்பதைத்தான் கொஞ்சம் மாற்றி இவர்கள் கேட்கின்றனர்.

சிறந்த அறிவுத்திறன் கொண்ட மாணவர்கள் படித்து உயர்கல்விக்கு வரட்டும். படிக்கும் திறன் குறைவாக உள்ள மாணவர்கள் தங்களின் ஆற்றலுக்கு ஏற்ற அடுத்தடுத்த வேலைகளைச் செய்து கொள்வார்கள். மக்களைப் படிக்க வைப்பதற்குத்தான் அரசு திட்டமிட்டு செயல்பட வேண்டுமே தவிர, குறைந்த அறிவுத் திறன் தேவைப்படும் அடிப்படை வேலைகளைச் செய்ய நாம் மனிதர்களை உருவாக்க வேண்டியில்லை. ஆனால் திறன் குறைவாக இருந்தாலும் சாதியில் மேல்தட்டில் இருப்பவர்கள் ஒருபோதும் அடித்தட்டு வேலைகளைச் செய்ய வருவதில்லை.சீமானின் “கள்” அரசியல் அதேபோல் எவ்வளவு ஆற்றல் பொருந்தியவர்களாக இருந்தாலும் சாதிய அடுக்கில் அடியிலுள்ளவர்கள் உயர் பதவிகளுக்கு வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்த முரண்பாட்டை ஒழிப்பதற் காகத்தான் திராவிட இயக்கம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் சனாதனக் கூட்டமோ இதற்கு நேர் எதிராக நமது முன்னேற்றத்தைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சதிவேலைக்குத் துணையாக பனையேறி பாடம் நடத்துகிறார் சீமான்.

ஏற்கெனவே ஒரு பனையேறும் தொழிலாளி கஷ்டப்பட்டு ஏறி ஒவ்வொரு இடத்திலும் நின்று கட்டைகளைக் கட்டி படிக்கட்டு அமைத்துக் கொடுத்திருக்கிறார். மரத்தின் உச்சியில் பனை ஓலைகள் உடலில் கிழித்து விடாமல் இருக்க அவற்றை வெட்டி ஒரு வாசலைப் போல் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். இவ்வாறு படிக்கட்டு அமைப்பது ஒருவர் பனையேறி பதனி இறக்குவதை விட கடினமான காரியம். இந்தப் படிக்கட்டுகளில் சொகுசாக ஏறி இறங்கி விட்டு, தான் பனையேறி ‘கள்’ இறக்கியதாக விளம்பரம் போடுகிறார் இந்தப் போலிப் பேர்வழி.சீமானின் “கள்” அரசியல்

சீமானின் ஆட்டத்தை இனிமேல்தான் பார்க்கப் போகிறீர்கள்..! என்று பேசிய பின்புதான் இந்தப் படிக்கட்டு ஏறும் செயலைச் செய்திருக்கிறார். இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால், அவை அனைத்திலுமே அவரின் எஜமானர்கள் வகுத்தளித்த சனாதன விஷமிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

இந்துக்களைப் பாதுகாத்த சுயமரியாதை இயக்கம்!

MUST READ