spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமீண்டும் ஸ்டாலினா? பதறும் பாஜக? அம்பலப்படுத்திய இந்தியா டுடே?

மீண்டும் ஸ்டாலினா? பதறும் பாஜக? அம்பலப்படுத்திய இந்தியா டுடே?

-

- Advertisement -

அதிமுக – பாஜக கூட்டணி ஜெல் ஆகவில்லை என்றும், இந்த இரு கட்சிகளும் சேர்ந்துள்ளதால் அவற்றின் வாக்கு சதவீதம் தான் குறையும் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் அதிமுக – பாஜக கூட்டணி ஜெல் ஆகாத கூட்டணி என்றும், திமுக கூட்டணி முன்னணியில் உள்ளது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் விஜய் வரவு, எப்படி இருக்கிறது என்பதை பொறுத்துதான் எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கணக்கிடப்படும். அவருக்கு 6 சதவீதம் வரை வாக்குகள் இருக்கும். சீமானுக்கு 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக வாக்குகள் குறையும். இந்தியா டுடே கருத்துக்கணிப்பின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏற்கனவே விஜய் 20 சதவீதம் வருவார் என்று இந்தியா டுடே சொன்னதாக தான் பிரசாந்த் கிஷோர் பெரிய அளவுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதிமுக – பாஜக ஜெல் ஆகவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயமாகும். அவர்கள் ஜெல் ஆகவே முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை. ஒரே ஒரு கேள்வி ஓபிஎஸ், சசிகலா, தினகரனை இணைக்க வேண்டும். இவர்களை இணைத்தால் தான் கட்சியே ஒரு கட்டமைப்புக்கு வரும். அதிமுக ஒரு நல்ல பார்முக்கு வந்த பிறகுதான் எடப்பாடி தன்னை பொதுச் செயலாளராக நிலை நிறுத்திக்கொள்ள முடியும். இந்த இணைப்புக்கு பிறகு தலைவராக நிற்பவர்தான் உண்மையில் அதிமுகவின் தலைவராக பரிணமிக்க முடியும். அதுவரை எடப்பாடி வட்டாரத் தலைவர் தான். எடப்பாடி கொங்கு மண்டலத்திற்கு தான் தலைவர். அவர் இன்னும் பாமகவை எதிர்பார்க்கின்ற தலைவர்தான். அதிமுக பொதுச் செயலாளராக அவர் வரவே முடியாது.

eps

மற்றொபுறம் அண்ணாமலை என்கிற நல்ல மனிதர், பாஜக – அதிமுக கூட்டணியை மொத்தமாக ஸ்பாயில் செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு அண்ணாமலையும், நயினாரும் போகிறார்கள். அங்கே அண்ணாமலைக்கு தான் வரவேற்பு அதிகமாக இருந்தது. அப்போது அண்ணாமலை செயல் இன்னும் பாஜகவில் இருந்து கொண்டுதான் உள்ளது. பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாங்கிய 18 சதவீத வாக்குகள் என்பது எடப்பாடி எதிர்ப்பு வாக்குகளாகும். அதிமுக வாங்கிய 20 சதவீத வாக்குகள் என்பது பாஜக எதிர்ப்பு வாக்குகளாகும். இரண்டும் நேர் எதிராக உள்ளது. அந்த 18 சதவீதத்தில் சசிகலா, தினகரன், ஒபிஎஸ் வாக்குகளும் உள்ளன. இங்கு தேமுதிக, எஸ்டிபிஐ வாக்குகளும் உள்ளன. இந்த 2 வாக்குகளும் எப்படி ஜெல் ஆகும்? பாஜக வந்ததால் அதிமுகவுக்கு விழுந்த வாக்குகளில் நெகட்டிவ் வாக்குகள் வரும். அதனால் அதிமுக – பாஜக கூட்டணியின் வாக்கு சதவீதம் குறையும்.

2021ல் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கட்சிகள் கூட்டணியில் இருந்தது. அப்போது 75க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கூட்டணி வென்றது. அதே கூட்டணி தற்போது மீண்டும் வருகிறது. அந்த கூட்டணியில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தார். தற்போது அவர் அதிமுகவில் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலின்போது முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை. அண்ணாமலையும் பிரேக் பிடிக்கிறார். ஓபிஎஸ் பிரேக் பிடிக்கிறார். சசிகலா குறைந்தபட்சம் 50 தொகுதிகளில் அதிமுகவை தோற்கடிக்கிறார்.

சசிகலா, தினகரன் ஆகியோர் தாங்கள் பாஜகவின் ஆட்கள் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் அதற்கு நேர்மாறாக தான் உள்ளன. சசிகலாவுக்கு மாநிலம் முழுவதும் உள்ள அதிமுக-காரர்களை தெரியும். அவர் கூப்பிட்டு ஆப் செய்தால் என்ன செய்வார்கள்? கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே இது வெள்ளிடை மலையாக வெளியே வந்து விட்டது. எடப்பாடி பழனிசாமி காலி. அதையும் மீறி கட்சியை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் அவர் எடுக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் வந்த அதே பாமக கூட்டணி வந்துவிடுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Photo:  Senthil Balaji

கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி என்ன சொல்லி ஏமாற்றினார். நான் எடப்பாடி. நீங்கள் வாக்களித்தால் ஒரு கவுண்டர் முதலமைச்சர் ஆவார் என்று கொங்கு பகுதிகளில் சொன்னீர்கள். அப்போது செந்தில் பாலாஜி இல்லை. இப்போது செந்தில் பாலாஜி, மேற்கு மண்டல செயலாளராக களத்தில் நிற்கிறார் அல்லவா? ஈரோட்டை சேர்ந்த தோப்பு வெங்கடாஜலம், மாவட்ட செயலாளராக திமுகவுக்கு வந்து விட்டார்.  ஈரோட்டில் செங்கோட்டையனால் நீக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் மட்டுமே 20 பேர் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் திமுகவுக்கு வந்துவிட்டார்கள். தற்போது கொங்கு மண்டலத்தில் போட்டி என்பது வேறு. செந்தில் பாலாஜி அதற்கு தலைமை தாங்குகிறார். அப்போது செந்தில் பாலாஜியை தூக்கி என்ன செய்ய முடியுமோ செய்துவிட்டு, நீங்கள் பணத்தை அடித்தீர்கள். கொங்கு மண்டலம் முழுவதும் பணத்தை காட்டி ஓட்டு வாங்கினார்கள். வேலுமணி, தீயணைப்புத்துறை வாகனத்தில் பணத்தை அனுப்பி, வெற்றி பெற்றார்.

சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
Coimbatore: Tamil Nadu Chief Minister M.K. Stalin

இன்றைக்கு உங்களால் பணத்தை அப்படி அனுப்ப முடியுமா? ஆட்சி அதிகாரம் திமுகவிடம் உள்ளதே. நீங்கள் 11 எம்எல்ஏ-க்கள் ஜெயித்த கோவையில் திமுக ஆட்சிக்கு வந்த உடன் கோவை மாநாகராட்சி தேர்தலில் 100க்கு, 95 வார்டுகளை கைப்பற்றியது. நாடாளுமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜியை தூக்கி உள்ளே வைத்தீர்கள். அவர் உள்ள இருந்துகொண்டே தேர்தலில் வெற்றி பெற்றார். கொங்கு மண்டலம் தான் உங்களுக்கு 40 தொகுதிகள் கொடுத்தது. அதற்கெல்லாம் இப்போது செந்தில்பாலாஜி கடும் போட்டி அளிப்பார். ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் இல்லை.

மேற்கு மண்டலத்தில் பாஜகவுக்கு பெரிய அளவில் வலிமை என்பது கிடையாது. திருப்பூர், கோவையில் இருக்கிற வடமாநில தொழிலாளர்களை வைத்து விளையாடுவார்கள். மற்றபடி அவர்களுக்கு செல்வாக்கு என்பது கிடையாது. 12 தோல்விகளை கண்ட பழனிசாமி வரும் சட்டமன்றத் தேர்தலில் 13வது தோல்வி பழனிசாமியாக எதிர்கொள்வார். முதல் தோல்வி விஜயாக நிற்பார். எப்போதும் தோல்வியாக சீமான் மிளிர்வார். எல்லா பக்கமும் கட்டிங் வருகிறது என்றால் சீமான் தோல்வி என்ன, எல்லாவற்றையும் விடுவார். இவர் பெரியாரை பற்றி பேசுகிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ