spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசிக்கி சீரழியும் தேர்தல் ஆணையம்! இணையதளத்தை முடக்கிவிட்டு ஓட்டம்! உமாபதி பேட்டி!

சிக்கி சீரழியும் தேர்தல் ஆணையம்! இணையதளத்தை முடக்கிவிட்டு ஓட்டம்! உமாபதி பேட்டி!

-

- Advertisement -

தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளதன் மூலம், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு போரை தொடங்கி உள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தேர்தல் ஆணைய மோசடிகள் குறித்து, ராகுல்காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி வெளியிட்டு உள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஒரு போரை தொடுத்திருக்கிறார். தேர்தல் ஆணையம் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணைய இணையதளங்களை மூடிவிட்டு ஓடியுள்ளது. எதற்காக அந்த இணையதளங்கள் வேலை செய்யவில்லை? நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் காமெடி படத்தில் நடப்பது போன்று உள்ளன. ஆனால் நிஜத்தில் தேர்தல் ஆணையம் வாக்குகளில் மோசடியில் ஈடுபட்டிருக்கிறது. மோடி மத்தியில் ஆட்சியில் வந்திருக்க வேண்டிய நபரே கிடையாது. அவர் இன்னும் 40 தொகுதிகளில் தோற்று, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் மத்தியில் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். ராகுல்காந்தி, தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் பாஜக – தேர்தல் ஆணையம் எப்படி எல்லாம் மோசடி செய்திருக்கிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் முகத்தில் தூக்கி வீசியுள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு தன்னுடைய குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்று நிரூபிக்க முடியுமா? என்று அவர் சவால் விட்டிருக்கிறார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளது என்பது தெளிவாக தெரியும். அதனால் இதற்கான ஆதாரங்கள் எங்கே என்று காங்கிரஸ் கட்சி, கடந்த 6 மாத காலமாக தேடுகிறது. அந்த ஆய்வின் முடிவில் மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டு நடைபெற்றிருப்பது தெரிய வருகிறது. ராகுல்காந்தி 4 விஷயங்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இல்லாத நபர்களின் பெயரில், வாக்காளர் அடையாள அட்டை உருவாகி இருப்பது முதலாவது மோசடியாகும். அடுத்தபடியாக தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானோர் வாக்களித்திருப்பது. மூன்றாவது வாக்குப்பதிவு நிறைவு பெறும் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இறுதியாக ஒரே நபருக்கு பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கி, அவர்கள் அனைத்து இடங்களிலும் சென்று வாக்களித்துள்ளார்.

நாட்டை நரகமாக்கிக் கொண்டிருப்பவர்கள் சொர்கத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது – விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்

காங்கிரஸ் தேர்தல் மோசடிகள் தொடர்பான ஆய்வுக்கு, மாதிரியாக எடுத்துக் கொண்டிருப்பது மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதி ஆகும். மத்திய பெங்களூரு மக்களவை தொகுதிக்கு உட்பட்டது இந்த தொகுதி. இங்கு உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கிறது. எஞ்சிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் மெகா வெற்றியை பெறுகிறது. அப்போது இந்த ஒரு தொகுதியில் மட்டும் மக்கள் எப்படி காங்கிரசுக்கு எதிராக மாறினார்கள்? என்று அந்த காட்சி ஆய்வுசெய்கிறது. இந்த 6 மாத காலத்தில் தேர்தல் ஆணையத்தில் இருக்கும் ஆவணங்களை எல்லாம் பக்கம் பக்கமாக பதிவிறக்கம் செய்கிறார்கள். தேர்தல் ஆணையத்திடம், தேர்தல் தொடர்பான தரவுகளை கேட்கிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் அதனை டேட்டாவாக தராமல், பக்கம் பக்கமாக தாள்களில் அச்சுட்டு 7 அடி உயரத்துக்கு 4 பண்டல்களில் தருகிறார்கள்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் தரவுகளில் உள்ள விவரங்களை கடந்த 6 மாதங்களாக காங்கிஸ் கட்சி தீவிர ஆய்வு செய்கிறது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளில் இருந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று பார்க்கும்போது, அங்கே வீடுகளே இல்லை. ஒரு சிறிய அறைதான் இருக்கிறது. அந்த முகவரிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் 80 வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கியுள்ளது. போலியாக ஒரு இடத்தை உருவாக்கி, அந்த இடத்திற்கு போலியான முகவரியை ஏற்படுத்தி, 80 வாக்காளர் அட்டை விநியோகித்துள்ளனர். பின்னர் வட மாநிலத்தவர்களை கூப்பிட்டு வந்து பெங்களுருவில் வாக்களிக்க செய்திருக்கிறார்கள். இதேபோல், பாஜகவினர் ஒரு லட்சம் போலி வாக்காளர்களை அந்த தொகுதியில் மட்டும் உருவாக்கி உள்ளனர்.

78 வயதாகும் ஒரு மூதாட்டியை புதிய வாக்காளர் என்று, கர்நாடக வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். காளிகாம்பாள் என்கிற அவரிடம் விசாரிக்கும் போது தன்னுடைய பெயரை 3 விதமாக மாற்றி மாற்றி சொல்கிறார். மேலும், அவருக்கு 3 வாக்குச் சாவடிகளில் வாக்குகள் இருக்கிறது. அப்போது, அவர் எப்படி மூன்று தொகுதிகளுக்கு நேரில் சென்று வாக்களித்திருப்பார். அதேபோல், கிளப் போன்று ஒன்றை உருவாக்கி அதில், 120 பேர் மொத்தமாக வாக்களித்து உள்ளனர். இந்த வாக்குகள் எல்லாம் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாக பதிவாகி இருப்பதாக சொல்லி உள்ளனர். பாதி அளவு கள்ள ஓட்டு போட்டிருக்கின்றனர். மீதி வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்துள்ளனர். மத்திய பெங்களூரு தொகுதியில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் 6ல் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்று, ஒட்டுமொத்த மக்களவை தொகுதியையும் வெல்கிறார்கள். அப்போது எவ்வளவு பெரிய மோசடியை தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி மக்கள் காங்கிரசை வெற்றி பெற வைத்து இருக்கிறார்கள் என்றால்? பாஜகவுக்கு எவ்வளவு எதிர்ப்பு வாக்குகள் இருந்திருக்கும். இதை தான் ராகுல்காந்தி ஆதாரங்களை காண்பித்து தேர்தல் ஆணையம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்.

தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் - என்.கே.மூர்த்தி

இந்நிலையில், கர்நாடக தேர்தல் ஆணையம், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுக்கிறது. ஆனால் தான் பிரமாண பத்திரம் தாக்கல் வேண்டிய அவசியம் கிடையாது. மக்கள் மன்றத்தில் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். வேண்டுமெனில் இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் எடுங்கள் என்கிறார் ராகுல்காந்தி. வாக்கு மோசடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உண்மையை கூற வேண்டும். ஒருநாள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நடவடிக்கை மூலம் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒரு போரை தொடங்கியுள்ளன. இது நாடு முழுவதும் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு; முதலமைச்சர் தேர்வில் பெரும் குழப்பம்

மகாராஷ்டிராவில் கடந்த 4.5 ஆண்டுகளில் 55 ஆயிரம் புதிய வாக்காளர்கள் தான் சேர்ந்துள்ளார்கள். ஆனால் மக்களவை தேர்தல் முடிந்து சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற அடுத்த 4 மாதங்களில் 45 லட்சம் புதிய வாக்காளர்களை சேர்ந்துள்ளனர். மகாராஷ்டிராவில் தேர்தல் அறிவித்த உடன் சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்து விழுகிறது. மக்கள் அனைவரும் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இந்த நிலையில், பாஜகவினர் சட்டமன்றத் தொகுதிக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை மோசடியாக சேர்த்து, தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையமும் தங்களுக்கு சாதகமான ஆட்களை போட்டு, சட்டங்களை எல்லாம் மாற்றி மோசடி செய்துள்ளனர். இவை எல்லாம் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ