spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயின் கூட்டணி பேரம்! அம்பலமான ரகசிய டீலிங்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

விஜயின் கூட்டணி பேரம்! அம்பலமான ரகசிய டீலிங்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

-

- Advertisement -

கரூர் துயர சம்பவத்தின்போது விஜயிடம் துக்கம் விசாரிக்க ராகுல்காந்தி பேசியதே, காங்கிரஸ் – தவெக கூட்டணி குறித்த வதந்திகளுக்கு அடிப்படையாக அமைந்து விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

விஜய், காங்கிரஸ் கூட்டணி பேச்சவாமூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- காங்கிரஸ் கட்சி தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இப்படி தகவல் பரவுவது காங்கிரஸ் கட்சிக்கு நல்லது கிடையாது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத போதும் கடந்த 10 வருடங்களாக தமிழ்நாட்டில் காங்கிரசை, திமுக தூக்கி சுமக்கிறது. அப்படியான சூழ்நிலையில் ராகுல்காந்தி பேசினார். கே.சி.வேணு கோபால், விஜயுடன் தொடர்பில் இருக்கிறார் என்று தகவல்கள் கசிய விடப்பட்டன. ஜோதிமணி, ஒரு காலத்தில் விஜய் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பியதாகவும், ராகுல்காந்தியை சந்தித்ததாகவும் சொன்னார். இதுபோன்ற தகவல்கள் திமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மனச்சோர்வடைய செய்யும்.

விஜய்க்கு 26 சதவீதம் வாக்குகள் இருப்பதாக சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. நீங்கள் ஆட்சிக்கு வருவது என்றால், குறைந்தபட்சம் 38 சதவீதத்தில் இருந்து 45 சதவீதம் வரை வாக்குகள் தேவை. புதிதாக வந்துள்ள தவெகவும், கூட்டணியையே நம்பி இருந்த காங்கிரசும் கூட்டணி வைத்தால் ஆட்சி அமைக்கும் என்பது என்ன விதமான புரிதல் என்று தெரியவில்லை. டெல்லி தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வருகிறபோது, இதை திமுக நிர்வாகிகள் நிச்சயம் கேட்பார்கள்.

கரூர் சம்பவத்திற்கு காரணம் திமுக அரசின் சதி என்று சொல்லக்கூடிய தவெக உடன், காங்கிரஸ் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அக்கட்சி எம்எல்ஏக்கள் தங்களுக்கும் தவெகவுக்கும் தொடர்பே கிடையாது என்று சொல்லிவிட்டனர். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் விஜய் மீது பரிவோடு பேசுவது ஏன்? காங்கிரஸ் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இடமே கிடையாது. அவர்களுக்கு சும்மா கொடுத்து வைத்துள்ளனர். விட்ட இடத்தை பிடிப்பது என்றால், மீண்டும் காமராஜரை தான் கொண்டுவர வேண்டும். இன்றைக்கு உள்ள காங்கிரஸ் கட்சியினருக்கு அந்த அளவுக்கு திறமையோ, தகுதியோ கிடையாது.

திமுக மட்டும் இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் பாஜகவை விட மோசமான நிலையில் காங்கிரஸ் இருந்திருக்கும். காங்கிரஸ் மட்டும் இல்லாவிட்டால் எதிர்வரும் தேர்தலில், திமுக ஆட்சியை பிடிக்க முடீயாது என்கிறார்கள். அப்படி ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும், கட்சி காணாமல் போகாது. காங்கிரஸ் கட்சியினர் அதீத ஆசைப்படுகிறார்கள். இதனால் பலன் பெறப் போவது பாஜக. கரூர் சம்பவத்தின்போது ராகுல்காந்தி துக்கம் விசாரிக்க பேசியதாக சொல்கிறார்கள். அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதுதான் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம்.

காங்கிரஸ் மட்டுமின்றி தற்போது அதிமுகவும், விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகிறது. தவெகவுக்கு பெரிய அளவில் டிமாண்ட் உள்ளது என்பதை விட கூட்டணிக்காக அனுசரித்து செல்ல கட்சிகள் முயற்சிக்கும். தேர்தல் முடியும் வரைதான் இந்த அனுசரனை இருக்கும். மக்களுக்காக ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள் என்றால் கூட்டணி தொடர்பாக பேச வேண்டியதே இல்லை. அதை தாண்டி பேசப்படுவது தேர்தலுக்காக தான். தேர்தல் முடிந்த உடன் அவர்கள் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் பேசப்படுவார்கள். அதுதான் மிகவும் முக்கியமான புள்ளியாகும். ஆனால் திரைப்பட கவர்ச்சி காரணமாகவே தவெக பேசப்படுகிறது. இலவசமாக கிடைக்கும் இந்த விளம்பரத்தை தவெகவும் ரசிக்கிறது.

விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. ஆனால் அதற்கான  செயல் திட்டம் உள்ளதா? கரூரில் நின்ன பஸ். மீண்டும் அது ஓடுமா? ஓடாதா? என்பதே சந்தேகம். தேர்தல் பிரச்சாரத்திற்கு 4 வாரங்களுக்கு முன்பே அனுமதி வாங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. சேலத்தில் 4ஆம் தேதி பிரச்சாரம் செய்வது என்றால்,  குறைந்தபட்சம் நவம்பர் மாத தொடக்கத்திலேயே விண்ணப்பித்திருக்க வேண்டும்.

கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்.... சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கரூர் துயர சம்பவம் காரணமாக விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வாங்குவதே மிகவும் சிரமம். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் இருந்து விஜய் இன்னும் பாடம் கற்றுக் கொள்ள வில்லை. அதற்கான முயற்சிகளும் அவர்களிடம் இல்லை. காவல்துறை தரப்பில் பிரச்சாரத்தில் பங்கேற்பவர்களின் விவரங்களை முன்னதாகவே வழங்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இந்த நிலைமை ஏற்படுவதற்கு காரணம் விஜய்தான். கூட்டம் அதிகமாக வருகிறபோது, கட்டுப்பாடுகள் அதிகமாகவே இருக்கும். கூட்டத்தை காட்ட வேண்டும் என்று நினைத்தால், அதற்கான பிரச்சினைகளும் சேர்ந்தே தான் வரும்.

சேலத்தில் மாநாடு போடுகிறீர்கள் என்றால்? அதற்கான வேலைகளை முன்கூட்டியே தொடங்கியிருக்க வேண்டும். திடீரென அனுமதி கேட்டால் அங்குள்ள காவல்துறை அனுமதி எப்படி வழங்குவார்கள். என்னை பொருத்தவரை விஜயிடம் இருந்து கோரிக்கை வந்தால் சில கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கிவிடுவது சிறந்தது. அப்படி அனுமதி வழங்காவிட்டல் திமுக அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பார்கள். அது காலப்போக்கில் திமுகவுக்கு எதிராக போய்விடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ