பிரதமர் மோடி, தமிழ்நாட்டை கைப்பற்றி தன்னுடைய அதிகாரத்துக்கு கீழ் கொண்டுவர வேண்டுமென நினைப்பதாகவும், ஆனால் தமிழக வருகை அவருடைய வாழ்விலேயே திருப்பங்களை ஏற்படுத்தும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தமிழக வருகை மற்றும் பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டுள்ளது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகிறார். தூத்துக்குடியில் தரம் குறைந்த அளவிலான விமான நிலையத்தை அமைத்திருக்கிறார்கள். அங்கு இரவு நேரத்தில் விமானத்தை தரையிறக்க டிரையல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி எதையாவது திறந்துவைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தல் வேறு வரப்போகிறது. ராஜாராஜ சோழன், ராஜேந்திர சோழன் பெயரை சொல்லி தமிழர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த கோவிலுக்கு சென்றால் பதவி போய்விடும் என்கிற ஐதீகம் உள்ளது.
ராஜராஜ சோழனின் சதய விழாவுக்கு போனதால் தான் கலைஞரின் பதவியே போனது. அண்ணாவின் மறைவுக்கு பிறகு கலைஞரின் ஆட்சி போனதற்கு காரணம். இந்த கோவிலுக்கு சென்றதுதான். அதன் பிறகு அவர் அந்த கோவிலுக்கு அவர் போகவே வில்லை. பிரதமர் மோடி, தமிழ்நாட்டை கைப்பற்றி தன்னுடைய அதிகாரத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறார். கடைசியில் அவருடைய பதவியே போக போகிறது. பிரதமர் மோடிக்கு இது குறித்து யாரும் சொல்லவில்லை போல. கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வந்துவிட்டு சென்ற பிறகு கட்டாயம் அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றம் நிகழும்.
பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்பது இயல்பான ஒன்றுதான். இதனால் பெரிய அளவிலான அரசியல் மாற்றம் எதுவும் நடக்காது. எடப்பாடி பழனிசாமி, சுற்று பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், பிரதமர் மோடி வருகைக்காக தனது திட்டங்களை ஒத்திவைத்துள்ளார். 452 கோடியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் நவீன வசதிகள் இல்லாத விமான முனைத்தை அமைத்திருக்கிறார்கள். அதில் பல்வேறு வசதிகள் உள்ளதாகவும், பெரிய பெரிய விமானங்கள் வருவதாகவும் வதந்திகளை பரப்புகிறார்கள். இப்படி சொல்பவர்கள் எல்லாம் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார்களா? என தெரியவில்லை. இப்படித்தான் அயோத்தியில் விமான நிலையம் கட்டினார்கள். ஆனால் ஆட்கள் யாரும் வரவில்லை என்று அதை மூடிவிட்டனர். அதுபோன்று தூத்துக்குடி விமான நிலையத்தை அமைத்திருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு அவரை சந்திக்க அனுமதி கோரி, ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவருடைய கடிதத்தை பார்த்துவிட்டு பிரதமர் மோடியால் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் ஒதுக்க முடியாது. காரணம் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க உள்ளார். அப்போது இருவரையும் அவரால் சந்திக்க முடியாது. ஓபிஎஸ் அமித்ஷாவை சந்திப்பதற்காக குஜராத்தில் வீடு எடுத்தே செட்டில் ஆகிவிட்டார். தற்போது பிரதமர் மோடியை சந்திக்க அழுகாத குறையாக ஒ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்கிறார். ஆனால் அவரால் உபயோகம் இல்லை என்பதால் எதற்காக சந்திக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு, அதிர்ச்சி கொடுப்பது போன்று பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் சீமானின் வளர்ச்சியை பார்த்து பிரதமர் மோடி பிரமித்து போனார் என்றும், அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க மோடி விரும்பியதாகவும் சொல்கிறார். குருமூர்த்தியிடம், சீமான் குறித்து பிரதமர் மோடி விசாரித்தாகவும் அவர் சொல்கிறார். குருமூர்த்தியும், மோடியும் பேசியதை அவர் பார்த்தாரா? அவர்கள் எந்த பூங்காவில் உட்கார்ந்து பேசினார்கள். இதை அவர் உட்கார்ந்து கேட்டார் என்று தெரியவில்லை. இல்லை தன்னிடம் பேட்டி எடுத்த நெறியாளரை பணியில் இருந்து வெளியேற்ற அனுப்ப முயற்சிக்கிறார் என்று தெரியவில்லை. சீமானை புகழ்ந்து பேசுவதற்கு குருமூர்த்தி யார்? அவரே ஒரு அரைவேக்காடு. சீமானை முதலமைச்சர் ஆக்க மருத்துவர் ராமதாஸ் கூட ஒப்புக்கொள்வார் என்றும் சொல்கிறார். ஆமாம் சீமானை முதலமைச்சர் ஆக்க அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சம்மதம் சொல்லிவிடுவார்கள். அவரை குஜராத் மாநிலத்தில் கொண்டுபோய் முதலமைச்சர் ஆக்க வேண்டியது தான்.
சீமான் இன்னும் கூட்டணி இல்லை என்று அறிவிக்கவில்லை என்றும் அவர் சொல்கிறார். இவர்கள் எல்லாம் எங்கிருந்து வருகின்றனர் என்றே தெரியவில்லை. சாதிய கணக்குகளை எல்லாம் நோட்டில் எழுதி வைத்திருக்கும் அந்த அரசியல் விமர்சகர் தானே. இவர்களுடைய நாக்கை எல்லாம் கொண்டுபோய் புதைத்துவிட வேண்டும். நமக்கு பொழுது போக்க இதுபோன்ற நபர்கள் தேவைதான். சீமான் முதலமைச்சர் ஆகிறார் என்பதையும் நெறியாளர் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே சீமான் போய் முதலமைச்சரை சந்தித்துவிட்டு வந்துள்ளார். சீமானை பார்த்து மோடி மிகவும் இம்பிரஸ் ஆகி இருப்பார். மாடு மாநாட்டிலேயே, உத்தர பிரதேசத்துக்கார்கள் கூட நடத்தாத மாநாட்டை, யோகி ஆதித்யநாத் நடத்தாத மாநாட்டை இவர் நடத்துகிறார் என்று மோடி மிகவும் ஆச்சரியமாக பார்த்திருப்பார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.