spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆன்மீகம்சதுரகிரி கோவிலுக்கு செல்ல 27-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 27-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி

-

- Advertisement -

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 27-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. புரட்டாசி பவுர்ணமி தினத்தையொட்டி பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கனமழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும்.

we-r-hiring

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 27-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி

“நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்?”- தி.மு.க.வுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோவில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 27-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதிசதுரகிரி கோவிலுக்கு மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ. தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ. நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.

ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி!

சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இங்குள்ள மலை மூலிகைகளும் அருவி நீரும் நோய்களை தீர்க்கவல்லவை.

MUST READ