Homeசெய்திகள்ஆன்மீகம்16 ஆண்டுகள் கழித்து வைகுந்த வாசல் திறப்பு - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

16 ஆண்டுகள் கழித்து வைகுந்த வாசல் திறப்பு – ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

-

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் அதிகாலை வைகுந்த வாசல் திறக்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

16 ஆண்டுகள் கழித்து வைகுந்த வாசல் திறப்பு - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கடந்த 2007ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற வைகுந்த வாசல் திறப்பு திருப்பணி வேலைகள் முடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்து நிலை ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து 16 ஆண்டுகள் கழித்து  இன்று மார்கழி மாதம் சொர்க்கவாசல் எனப்படும் வைகுந்த வாசல் திறப்பு நடைபெற்றது. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு உற்சவர் பவளவண்ண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாருடன் பல்லக்கில் எழுந்தருளி நாதஸ்வர மேளம் முழங்க பிரம்மதாளம் ஒலிக்க கோவிலை சுற்றி வலம் வந்தார்.

16 ஆண்டுகள் கழித்து வைகுந்த வாசல் திறப்பு - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

இதனை அடுத்து வைகுந்த வாசல் முன்பே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நம்மாழ்வாருக்கு   காட்சியளித்தார். அதிகாலை நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

16 ஆண்டுகள் கழித்து வைகுந்த வாசல் திறப்பு - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

இன்று முதல் மூன்று நாட்கள் வரை வைகுந்த வாசல் திறக்கப்பட்டு திங்கட்கிழமை இரவு சிறப்பு பூஜைகளுடன் மீண்டும் சாத்தப்படுகிறது. இதனை அடுத்து  ஆண்டு மார்கழி மாதம் வைகுந்த வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்

MUST READ