Homeசெய்திகள்ஆன்மீகம்குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்

குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்

-

கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது.

குருத்தோலை ஞாயிறு ஒட்டி இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் “குருத்தோலை பவனி” வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.

குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்

ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வகையில்  கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலத்தை கடைபிடிப்பார்கள். இவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி “சாம்பல் புதன்” (Ash Wednesday) திருநாளுடன் தொடங்கும்.

குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்

இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை “குருத்தோலை ஞாயிறு” திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் 2ம் தேதியான இன்று அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த குருத்தோலை ஞாயிறு திருநாளையோட்டி உலகப் புகழ் பெற்ற நாகர்கோவில், தூத்துக்குடி பனிமயமாதா கோவில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, சென்னை பெசன்ட் நகர் அன்னைவேளங்கன்னி உள்ளிட்ட  தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற அனைத்து தேவாலயங்களிலும் இந்த பவனி ஆனது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்

அனைத்து பக்தர்களும் “ஓசன்னா” என்று சொல்லிக் கொண்டு குருத்தோலையை கையில் யேந்தி பவனியாக சென்றனர்.

குருத்தோலை வரலாறு

ஜெருசலேம் நகரில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்துவை கோவேறு கழுதையில் ஏற்றி சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து பனை ஓலையை கையில் ஏந்தி, “தாவிது மகனுக்கு ஓசன்னா ஆண்டவர் பேரால் வருபவர், ஆசி பெற்றவர்” என ஆர்ப்பரித்து பவனி வந்தனர்.

அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்த குறுத்தோலை பவனி ஆனது கொண்டாடப்படுகிறது. இந்த குருத்தோலை ஞாயிறு தினத்திலிருந்து திருப்பலிகளில் புனித வாரம் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன.

அதனைத் தொடர்ந்து இந்த புனித வாரத்தில் ஏப்ரல் 6ம் தேதி அன்று வியாழக்கிழமை புனித வியாழனாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் தான் இயேசு கிறிஸ்து நற்கருணையை ஏற்படுத்தினார்.

குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்

தன்னிடம் இருந்த 12 சீடர்களின் பாதங்களையும் இயேசு கிறிஸ்து கழுவியதை நினைவு கூறும் வகையில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பள்ளியின் போது பங்குத்தந்தையர்கள் 12 பேரின் பாதங்களைக் கழுவுவார்கள்.

அன்றைய திருப்பலி நிறைவு பெறும்போது திவ்ய நற்கருணை பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வைக்கப்படும். மறுநாள் புனித வெள்ளி திருநாளான்று முழு நாளும் நற்கருணை ஆராதனை நடைபெறும்.

குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்

அதனைத் தொடர்ந்து திருச்சிலுவை முத்தம் செய்யப்பட்டு புனித நிகழ்ச்சியான ஆலயத்தின் இறுதி சிலுவை பாதை நடைபெறும். சனிக்கிழமையான ஏப்ரல் 8ம் தேதி அன்று இரவு 11 மணிக்கு திருவிழிப்பு வழிபாடு நடைபெறும்.

அன்றைய தினம் விசுவாசிகள் மன்றாட்டு, நற்கருணை வழிபாடு ஆகியவை நடைபெறும். இதனைத் தொடர்ந்து உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவு சிறப்பு திருப்பள்ளி நடைபெறும். அதன் பின்னர் ஏப்ரல் 9ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படும்.

குருத்தோலை ஞாயிறு இன்று கோலாகல கொண்டாட்டம்

புனித வெள்ளி திருநாளன்று உலக மக்களுக்காகப் பாவங்களைச் சுமந்து உயிர் விட்ட இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்தெழும் திருநாளே ஈஸ்டர் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

MUST READ