காசிக்கு நிகரான புண்ணியத்தை தரும் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்;
நாகப்பட்டிணம் மாவட்டம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரஸ்த்திபெற்ற ஆலயமாக திகழ்கிறது.கல்விக்கும்,தொழிலுக்கும் அதிபதியாக விளங்கும் புதன் பகவானுக்கு தனி ஆலயமும் உண்டு.மேலும் காசிக்கு நிகராண புண்ணியத்தை தேடி தரும் பெருமையையும் கொண்டுள்ளது இத்திருகோவில்.
தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பிரத்தனைத்தலம் ஆகும்.நவகிரகத்தில் இந்த தலம் முதல் தலமாகும்.சிவபெருமானின் ஆனந்ததாண்டவத்திலிருந்து முகக்கண்ணிலிருந்து சிந்திய நீர்துளியானது அக்னிசூரிய சந்திர தீர்த்தங்களாக இங்கு அமைந்துள்ளதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் இருக்கும் ருத்ரபாதத்தை வழிபட்டால் 21 தலைமுறையினர் செய்த பாவத்தையும் போக்கிக் கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது.காசியில் இருக்ககூடிய விஷ்ணு பாதத்தை வழிபட்டால் கிடைக்ககூடிய பலனைப் போல 3 மடங்கு பலன் திருவெண்காடு ருத்ரபாதத்தை வழிபட்டால் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் புதன் திசை என்பது 17 ஆண்டுகள் வரும்.ஆதலால் திருவெண்காடு புதன் பகவானுக்கு 17 அகல் தீபங்கள் ஏற்றிவழிபட வேண்டும் என்பது ஐதீகம்.அப்படி வழிபட்டால் புதன் திசையானது அதிஷ்டத்தையே தரும் என்பதில் ஐய்யமில்லை.
தொழிலில் சிறந்து விளங்க வேண்டுமென்றாலும்,கல்வியில் சிறந்து கற்க வேண்டுமென்றாலும்,கடன் தொல்லைத் தீர ,குழந்தை வரம் பெற ,திருமண யோகம் பெற,தீராத நோய் தீர,பாவங்கள் தீர இத்திருதலத்தில் இருக்ககூடிய புதன் பகவானுக்கு 17 விளக்கு ஏற்றினாலே போதும் அனைத்து கவலைகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது.எதிர்பாராத அதிஷ்டமும் உண்டாகுமாம்.
நம்முடைய கண்ணுக்கு தெரியாத பில்லி ,சூனியம்,ஏவல் போன்ற கெட்ட சக்திகள் அனைத்தும் இத்திருதலத்தில் ஹோமம் நடத்தினால் விலகிடும் என்றும் சொல்லப்படுகிறது.குடுப்பபிரச்சனை மற்றும் நீதிமன்ற வழக்குகள் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற இத்திருதலத்தில் இருக்கும் அகோரமூர்த்தியை வழிபட்டால் தீர்வுகிடைகுமாம்.
இக்கோவிலுக்கு சென்று முதலில் விநாயக பெருமானை வழிபட்டு பிறகு மூலவரையும்,அம்பாள்,அகோர மூர்த்தி ,இறுதியாகதான் புதன் பகவானை வழிபட வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது.படிப்பில் ஆர்வம் இல்லாத மாணவர்களை இத்திருதலத்திற்கு கூட்டிச்சென்றால் ஆர்வம் ஏற்படும் எனவும் நம்பப்படுகிறது.