பங்களாதேஷில், தீவிர இஸ்லாமியக் குழுவான ஹெஃபாசாத்-இ-இஸ்லாம் அமைப்பு, இஸ்கான் உறுப்பினர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளது. இஸ்கான் பக்தர்களை எங்கு பார்த்தாலும் பிடித்து கொன்று விடுங்கள் என்று ஹிஃபாசாத் இ -இஸ்லாம் கூறியுள்ளது. இதற்கிடையில், இந்துக்களை காப்பாற்ற பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று இஸ்கான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பங்களாதேஷில் இந்துக்களைக் கொல்லப்போவதாக அடிப்படைவாதிகள் வெளிப்படையாக மிரட்டுகிறார்கள். ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்த பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.
வங்கதேசத்தில் வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. அப்போது இருந்து இந்து சிறுபான்மையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் தொடர்கின்றன. இப்போது தீவிர இஸ்லாமியக் குழுக்கள் இந்துக்களை சித்திரவதை செய்து கொல்லப் போவதாகவும் வெளிப்படையாக மிரட்டி வருகின்றன.
பங்களாதேஷின் அடிப்படைவாத அமைப்பான ஹெஃபாசாத்-இ-இஸ்லாம் வெளிப்படையாகவே இதனைத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழும் வங்காளதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். ‘சிட்டகாங்கை தளமாகக் கொண்ட குழுவான ஹிஃபாசாத்-இ-இஸ்லாம் இஸ்கானை தடை செய்ய அழைப்பு விடுத்துள்ளது. ஹிஃபாசாத்-இ-இஸ்லாம் பயங்கரவாதம் பற்றி பேசியுள்ளார்.
‘இஸ்கான் உறுப்பினர்கள் ஹரே கிருஷ்ணா, ஹரே ராம் என்று கோஷங்களை எழுப்பி யாரையாவது கொன்றதுண்டா? ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதிகள் மக்களைக் கொல்லும் போது ‘அல்லாஹு அக்பர்’ என்று கத்துகிறார்கள். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ISKCON இருப்பதாகவும், எங்கும் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளவில்லை, ஆனால் அது வங்காளதேசத்தில் உள்ளது’’ என்றும் அவர் கூறினார்.
பங்களாதேஷில் உள்ள இஸ்கானுக்கு அச்சுறுத்தல்கள் வருவதற்கான காரணத்தை மேற்கோள் காட்டிய தஸ்லிமா நஸ்ரீன், இந்த நாட்டில் ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் ஜிஹாதிகள் இருப்பதால், மற்ற மதத்தினரை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முஸ்லீம் அல்லாதவர்களைத் துன்புறுத்துவதற்கு அல்லது அவர்களை மண்ணிலிருந்து விரட்டுவதற்கு அவர்கள் எல்லா வகையான தந்திரங்களையும் பயன்படுத்துகிறார்கள். ஹெஃபாசாத்-இ-இஸ்லாமை ஒரு பயங்கரவாத அமைப்பு’’என்று விவரித்தார்.
இதற்கிடையில், வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடியிடம் இஸ்கான் வேண்டுகோள் விடுத்துள்ளது. ISKCON-ன் கொல்கத்தா துணைத் தலைவர் ராதாராமன் தாஸ் ட்விட்டரில், ‘‘வங்காளதேசத்தின் தீவிர நிலைமை குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். இஸ்கான் பக்தர்களைப் பிடித்து, சித்திரவதை செய்து, பின்னர் கொன்றுவிடுவோம் என்று இஸ்லாமியக் குழுக்கள் பகிரங்கமாக மிரட்டுகின்றன. இஸ்கான் துறவிகள் மற்றும் பக்தர்களின் தலையை துண்டிக்கும் இந்த கொடூரமான திட்டம் வெளிப்படையாக பரப்பப்படுகிறது, அவர்களின் பாதுகாப்பில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். இந்த வன்முறை நடவடிக்கைகளைத் தடுக்க உடனடித் தலையீடு முக்கியமானது’’ என அவர் தெரிவித்துள்ளார்.