spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை மெட்ரோ ரயில்களில் ஜூன் மாதத்தில் 1.38 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் ஜூன் மாதத்தில் 1.38 லட்சம் பேர் பயணம்

-

- Advertisement -

சென்னை மெட்ரோ ரயில்களில் ஜூன் மாதத்தில் 1.38 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் ஜூன் 28-ம் தேதி 2.95 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 869 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,017,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,68,007 பயணிகளும் மற்றும் ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 28.06.2023 அன்று 2.95,509 பயணிகள் மெட்ரோ இரயில்களில்
பயணம் செய்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ