Homeசெய்திகள்சென்னைபோதை பொருட்கள் விற்பனை... சென்னையில் 3 நாளில் 334 பேர் கைது

போதை பொருட்கள் விற்பனை… சென்னையில் 3 நாளில் 334 பேர் கைது

-

- Advertisement -

சென்னையில் கடந்த 3 நாட்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 334 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், சென்னை பெருநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக சிறப்பு அதிரடி சோதனைகள் மேற்கொண்டு கைதுசெய்ய உத்தரவிட்டார். அதன் பேரில்,  சென்னை மாநகரில் கடந்த 6ஆம் முதல் 8ம் தேதி  வரையிலான 3 நாட்கள் “போதை தடுப்பு நடவடிக்கை”  மூலம் சிறப்பு அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த அதிரடி நடவடிக்கையினால், 3 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 334 குற்றவாளிகளை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 58 சரித்திரப்பதிவேடு போக்கிரிகள் அடங்குவர்.

சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

MUST READ