சென்னை ஓ.எம்.ஆர் (OMR) மற்றும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் உள்ள பொம்மைக் கடைகளில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.
ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 1514 பொம்மைகள் பறிமுதல் செய்தனர் அதிகாரிகள்.

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர்.

சென்னை OMR இல் அமைந்துள்ள உள்ள first cry கடையிலும் மற்றும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள ஹோம் லேஸ் ரிலையன்ஸ் பிராண்ட் லிமிடெட் என்ற கடையிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது, இந்திய தர நிர்ணய அமைவன சட்டம் 2016 பிரிவு 28 இன் படி கடைகளில் பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாமல் பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாத மொத்தம் 1514 பொம்மைகள் (971 மின்சாரம் அல்லாத பொம்மைகள்- மென்மையான பொம்மைகள், பிளாஸ்டிக் வார்ப்பு பொம்மைகள், புதிர் விளையாட்டு பொம்மைகள் போன்ற மின்சாரம் அல்லாத பொம்மைகள் மற்றும் 543 எலக்ட்ரிக் பொம்மைகள் – பேட்டரி மூலம் இயக்கப்படும் பொம்மைகள், ரிமோட் கண்ட்ரோல்டு பொம்மைகள் போன்ற மின்சார பொம்மைகள்/கார் முதலியன பறிமுதல் செய்யப்பட்டன.
அரசால் வெளியிடப்பட்ட பொம்மைகள் (தரக்கட்டுப்பாடு) ஆணை, 2020-ன் படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, அல்லது இறக்குமதி செய்து விநியோகிக்கப்படும், விற்கப்படும். மேலும், வாடகைக்கு எடுக்கப்பட்ட, குத்தகைக்கு விடப்பட்ட, சேமித்து வைக்கப்பட்டுள்ள அல்லது விற்பனைக்காகக் காட்டப்படும் அனைத்து பொம்மைகளும் BIS ஆல் கட்டாயமாக தரச் சான்றளிக்கப்பட்டு BIS ஸ்டாண்டர்ட் மார்க் பெற்றிருக்க வேண்டும்.

ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் உள்ள பொம்மை கடையிலும், ஓஎம்ஆர் சாலைகளில் உள்ள பொம்மை கடைகளிலும் சோதனை நடத்தி தரமில்லாத 1200 பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


